புதிய கேமராக்களை களமிறக்கும் நிக்கான்!

By Karthikeyan
|
புதிய கேமராக்களை களமிறக்கும் நிக்கான்!

வருமா வராதா என்று நிலையில் இறுதியாக நிக்கன் தனது வி1 மற்றும் ஜே1 கேமராக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நிக்கன்.

ஜே1 ஒரு தொடக்க நிலை கேமராவாகும். ஆனால் வி1 மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் கொண்ட கேமரா ஆகும். வி1 கேமரா மிகவும் மெல்லியதாக இருக்கிறது. மேலும் இது பல நவீன வசதிகளைக் கொண்டு வருகிறது.

குறப்பாக வி1 கேமரா பாப் அப் ப்ளாஷ் மற்றும் எலக்ட்ரானிக் வியூவ் பைன்டர் போன்ற தொழில் நுட்பங்களை வழங்குகிறது. ஜே1 கேமராவில் இந்த வசதிகளைப் பார்க்க முடியாது.

இந்த இரண்டு கேமராக்களும் 1080பி வீடியோ பதிவை சப்போர்ட் செய்கிறது. மேலும் ஸ்லோ மோஷன் மற்றும் சூப்பர் ஸ்லோ மோஷன் மூவி மோட் வசதியும் இவற்றில் உள்ளன. அதுபோல் ஸ்னாப்ஸாட் வசதியும் உள்ளது.

இந்த 2 கேமராக்களும் 10 மெகா பிக்சல் சிஎக்ஸ் பார்மட் சென்சார், நிக்கன் 1 லென்ஸ் மவுண்ட், வீடியோ பதிவு, என்இஎப், ஆர்எடபுள்யு, மற்றும் ஜேபிஜி பைல் பார்மட்டுகள், மற்றும் எஸ்டி கார்டு போன்ற வசதிகளைக் கொண்டு வருகின்றன.

விலையைப் பொருத்தமட்டில் 10-30 எம்எம் லென்ஸ் கொண்ட வி1 கேமரா ரூ.43950க்கும் 10-30எம்எம் + 30-110எம்எம் லென்ஸ் கொண்ட வி1 கேமரா ரூ.53950க்கும் விற்கப்படும்.

அதே நேரத்தில் 10-30எம்எம் லென்ஸ் கொண்ட ஜே1 கேமரா ரூ.29950க்கும், 10-30எம்எம் + 30-110எம்எம் லென்ஸ் கொண்ட கேமரா ரூ.39950க்கும் இறுதியாக 10-30எம்எம் + 30-110எம்எம் லென்ஸ் மற்றும் சிறப்பு பிங்க் கிட்டுடன் வரும் ஜே1 கேமரா ரூ.40950க்கும் விற்கப்படும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X