Home
Camera

ஆன்ட்ராய்டு கேமராவில் புதிய அவதாரம் எடுக்கும் நிக்கான்!

By Super

ஆன்ட்ராய்டு கேமராவில் புதிய அவதாரம் எடுக்கும் நிக்கான்!
ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் மேல் உள்ள மோகம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு குறையவில்லை.

நிக்கான் நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தனது முதல் கேமராவினை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட் மற்றும் க்யூட் கேமரா 10x ஆப்டிகல் சூம் லென்ஸ் வசதியினை கொண்டதாக இருக்கும்.

இந்த கேமரா 3.5 இஞ்ச் ஓலெட் டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதியினை வழங்கும். 16 மெகா பிக்ஸல் கேமரா பிஎஸ்ஐ சிஎம்ஓஎஸ் சென்ஸார் வசதியினை கொண்டதாக இருக்கும்.

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களில் வைபை வசதியினை பெறுவது போல் இந்த நிக்கான் கூல்பிக்ஸ் எஸ்-800-சி கேமராவிலும் இந்த வைபை வசதியினை பெற முடியும்.

இதில் 18 ஃபில்டர் இஃபக்ட், புதிய டாய் கேமரா இஃபக்ட், பாப் மற்றும் சூப்பர் விவிட் கலர் ஃபில்டர் போன்ற வசதிகளையும் இதில் பெறலாம்.

2ஜிபி வரை இன்டர்னல் மெமரி, புளூடூத், ஜிபிஎஸ் என்று நிக்கான் நிறுவனத்தின் இந்த கூல்பிக்ஸ் எஸ்-800-சி கேமரா நிறைய கூல் வசதிகளையும் வழங்கும். இந்த கேமரா செப்டம்பர் மாதம் ரூ. 19,422 விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X