நிக்கானின் 3 புதிய கேமராக்கள்: துல்லியம்னா அப்படி ஒரு துல்லியம்!

By Super
|

நிக்கானின் 3 புதிய கேமராக்கள்: துல்லியம்னா அப்படி ஒரு துல்லியம்!
அற்புதமான கேமாரக்களை கொடுத்து அசத்தும் நிக்கான் நிறுவனம் மேலும் மூன்று புதிய கேமராக்களை உருவாக்கி உள்ளது. டி-4 என்ற புதிய கேமராவை அறிமுகம் செய்துள்ளது. டி-800, டி-800-இ என்ற கேமராக்களை வெளியிட்டுள்ளது.

இதில் டி-4 கேமரா 16.2 மெகா பிக்ஸல் துல்லியம் கொண்டது. இதில் உள்ள எஃப்எக்ஸ் ஃபார்மெட் சென்சார், எக்ஸ்பீட்-3 தொழில் நுட்பங்கள் அனைவரின் கண்களையும் கவரும் வகையில் சிறந்த புகைப்படத்தை கொடுக்கும்.மேலும் இதில் 51-ஏஎஃப் சிஸ்டம் தொழில் நுட்பம் உள்ளதால், நொடிக்கு 10 ஃபிரேம்களை கொடுக்கும் வேகத்தில் செயல்படும். குறைந்த ஒளியிலும் கூட சிறந்த புகைப்படத்தை இந்த கேமராவில் பெறலாம்.

டி-800 கேமரா முதலில் கூறிய டி-4 மாடலை விடவும் அதிக கேமரா துல்லியத்தினை வழங்கும். இந்த கேமராவில் 36.3 மெகா பிக்ஸல் துல்லியமும் இதில் பெற முடியும். சிஎம்ஓஎஸ் சென்ஸார் மற்றும் ஆர்ஜிபி சென்ஸார் இந்த கேமராவில் கொடுக்கப்பட்டுள்ளதால், கூடுதல் துல்லியம் கொண்ட புகைப்படத்தினையும், வீடியோவினையும் வழங்கும்.

டி-800-இ கேமராவில் டி-எஸ்எல்ஆர் தொழில் நுட்பத்தினை கொடுக்கும். இந்த கேமராவில் உள்ள சிறந்த துல்லியத்திற்கு சப்போர்ட் செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கேமரா மாடல்கள் பற்றி அதிகமாக தொழில் நுட்ப விவரம் ஏதும் வெளியாகவில்லை. டி-4 கேமராவில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.3,24,950 விலையிலும், டி-800, டி-800-இ கேமராவினை ரூ.1,49,950 மற்றும் ரூ.1,64,950 விலையிலும் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X