துல்லியமாக புகைப்படங்கள் எடுக்க புதிய நிக்கான் கேமரா!

Posted By: Karthikeyan
துல்லியமாக புகைப்படங்கள் எடுக்க புதிய நிக்கான் கேமரா!

நிக்கன் நிறுவனம் தனது புதிய நிக்கன் டி600 என்று டிஎஸ்எல்ஆர் கேமராவை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த கேமரா வெளிவருவதில் காலதாமதம் ஆனது. அதனால் பலர் அந்த கேமராவை மறந்தே விட்டனர். இந்த நிலையில் இப்போது அந்த கேமரா விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த புதிய கேமராவின் படங்கள் இணையதளங்களில் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.

அதே நேரத்தில் இந்த புதிய நிக்கன் கேமராவின் தொழில் நுட்பங்களும் வெளியாகி இருக்கின்றன. அதாவது 24.7 எம்பி முழு பிரேம் சென்சார் கொண்டு வரும் இந்த கேமரா எச்டிஎம்ஐ அவுட்புட் மற்றும் முழு எச்டியை வழங்குகிறது. அதே போல் எந்த பருவகால சூழலிலும் இந்த கேமரா பாதிப்பு அடையாது. அதுபோல் மிகத் துல்லியமான போட்டோக்களை எடுக்கும்.

அதோடு இந்த கேமராவில் ஜிபிஎஸ் வசதி, எஎப் மோட்டார், எச்டி ஆர் மோட் மற்றும் சூப்பாரான லயன் போட்டரி ஆகியவற்றையும் பார்க்கலாம்.

மேலும் போட்டோ எடுக்கும் துறையில் இருப்போருக்கு இந்த கேமரா பேருதவியாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot