இந்தியாவில் புதிய டிஎஸ்எல்ஆர் கேமராவைக் களமிறக்கும் நிக்கான்

Posted By: Karthikeyan
இந்தியாவில் புதிய டிஎஸ்எல்ஆர் கேமராவைக் களமிறக்கும் நிக்கான்

கேமராத் தயாரிப்பில் கோலோச்சி வரும் நிக்கான் நிறுவனம் வரும் டிசம்பரில் ஒரு புதிய கேமராவை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த கேமராவிற்கு டி5200 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு மிட்ரேஞ் டிஎஸ்எல்ஆர் கேமராவாகும்.

இந்த டி5200 கேமரா ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 39 பாயிண்ட் ஆட்டோ போக்கஸ் சிஸ்டம், நடுவில் 9 க்ராஸ் டைப் சென்சார்கள் மற்றும் 2016 ஆர்ஜிபி மீட்டரிங் சென்சார் போன்றவற்றை இந்த கேமரா கொண்டிருக்கிறது.

மேலும் இந்த கேமராவின் நடுவில் ஒரு அழகான துல்லியமான 3 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரையும் உள்ளது. இந்த கேமராவில் உள்ள 24.1எம்பி சிஎம்ஒஎஸ் சென்சார் பல சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும்.

இந்த டி5200 கேமராவில் ஒரு ஸ்டீரியோ மைக்ரோபோன் மற்றும் எக்ஸ்டர்னல் மைக்ரோபோன் இன்புட்டும் உன்ளது. அதுபோல் இந்த கேமராவில் வயர்லஸ் மொபைல் அடாப்டர் மற்றும் ரிமோட் கண்ட்ரோலர் அக்சஸரிகள் ஆகியவற்றை மிக எளிதாக இணைக்க முடியும்.

டிசம்பரில் விற்பனைக்கு வரும் இந்த டி5200 கேமரா ரூ.46,950க்கு விற்பனையாக இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot