ரூ.2.90 லட்சம் விலையில் ஓர் கேமரா!

By Karthikeyan
|
 ரூ.2.90 லட்சம் விலையில் ஓர் கேமரா!

சமீபத்தில் நிக்கன் ஒரு புதிய டி3எஸ் மாடல் கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கேமராவின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் சிஎம்ஒஎஸ் டைப்பில் வரும் ஆப்டிக்கல் ட்ரைவ் ஆகும்.

இந்த நிக்கன் புதிய கேமராவில் ஏராளமான தொழில் நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக 12.1 எம்பி ரிசலூசன், 12,870,000 மொத்த பிக்சல்கள், பீல்டு வியூவ் க்ரோப் பேக்டர், டிடிஎல் கான்ட்ராஸ்ட் மற்றும் பேஸ் டிடெக்சன் ஆட்டோ போக்கஸ், டிஐஎப்எப், ஜேபிஇஜி, என்இஇ மற்றும் ஆர்எடபுள்யு + இமேஜ் பதிவு செய்யும் வசதி, எச்டிஎம்ஐ, லைட் சென்சிட்டிவிட்டி, அதிவேக ஷட்டர் செயல்பாடு, யுஎஸ்பி போர்ட் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே என ஏராளமான தொழில் நுட்பங்கள் உள்ளன.

மேலும் இந்த டி3எஸ் கேமராவில் பல பொதுவான அம்சங்களையும் பார்க்கலாம். அதாவது டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் கட்டுப்பாடு, கண்ணாடி லாக், ஆடியோ பதிவு. எஇ லாக், இன் கேமரா மூவிங் எடிட்டிங், பிக்ட் ப்ரிட்ஸ் சப்போர்ட், எக்ஸிப் பிரிண்ட் சப்போர்ட், எஎப் லாக், டஸ்ட் டிலீட் டேட்டா சிஸ்டம், எல்சிடி லைவ் வியூவ் மோட், ஜிபிஎஸ் ரெடி, டிஜிட்டல் இமேஜ் ரொட்டேசன், டிபிஒஎப் சப்போர்ட், ஹிஸ்டோக்ராம் டிஸ்ப்ளே மற்றும் யுஎஸ்பி 2.0 என இந்த கேமரா ஏராளமான வசதிகளை வழங்கி அமர்க்களப் படுத்துகிறது.

மேலும் இந்த கேமரா குறைந்த வெளிச்சத்திலும் சூப்பரான படங்களை எடுக்கும். மேலும் இந்த கேமராவுடன் இணைப்பாக பேட்டரி சார்ஜர், பாடி கேப், ஷூ கேப், ஆடியோ மற்றும் வீடியோ கேபிள், கோர்ட் க்ளிப், யுஎஸ்பி கேபிள், கேமராவை எடுத்துச் செல்ல பெல்ட் மற்றும் ஐபீஸ் போன்ற வற்றையும் நிக்கன் வழங்குகிறது.

நிக்கனின் இந்த புதிய கேமராவின் விலை ரூ.290000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X