நிகான் வழங்கும் புதிய கூல்பிக்ஸ் கேமரா

Posted By: Karthikeyan
நிகான் வழங்கும் புதிய கூல்பிக்ஸ் கேமரா

நிகான் கேமராக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. அவற்றின் ஸ்டைல் மற்றும் செயல்திறன் ஆகியவை அதன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கின்றன. சமீபத்தில் நிகான் நிறுவனம் எஸ் கூல்பிக்ஸ் எஸ்9300 என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா கூல்பிக்ஸ் எஸ்9100 கேமராவிற்கு அடுத்தபடியாக நிகான் அறிவிக்கும் புதிய கேமரா ஆகும்.

இந்த கூல்பிக்ஸ் எஸ்9300 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது உயர்ந்த சூம் கொண்ட மிக அடக்கமாக கேமரா ஆகும். இதன் டிசைன் சூப்பராக இருக்கிறது. இல்லூமினேட்டட் கருப்பு நிறத்துடன் 16 மெகா பிக்சல் சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா லென்ஸ் சிப்ட் வைப்ரேசன் ரிடக்சனையும் கொண்டுள்ளது.

அடுத்தாக இந்த புதிய கேமரா முழு எச்டி வீடியோ பதிவை சப்போர்ட் செய்யும். அதுபோல் இந்த கேமரா நிக்கர் 18 எக்ஸ் ஆப்டிக்கல் சூம் லென்சையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் 3 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரை உள்ளது. மேலும் பில்ட்இன் ஜிபிஎஸ் வசதியும் இந்த கேமராவில் உண்டு. அதோடு அகலமான பலவிதமான சீன் மோடுகளும் இந்த கேமராவில் இருக்கின்றன.

இந்த புதிய கேமரா மிகவும் மெல்லிய அதே நேரத்தில் அடக்கமாக உள்ளது. இதன் சிஎம்ஒஎஸ் சென்சார் இதன் பின்புறம் இருக்கிறது. இது 16 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. மேலும் உயர் சென்சிட்டிவிட்டியிலும் இதில் இமேஜ் நாய்ஸ் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் லென்ஸ் சிப்ட் வைப்ரேசன் ரிடக்சன் தொழில் நுட்பம் உள்ளதால் கேமரா லென்சால் ஏற்படும் அதிர்ச்சிகளை இது குறைக்கிறது. மேலும் இந்த கேமராவில் மிக விரைவாக பல படங்களை எடுக்க முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்திலும் படங்களை மிகத் துல்லியமாக தெளிவாக எடுக்க முடியும்.

இந்த கேமரா உயர்ந்த செயல் திறன் கொண்ட ஜிபிஎஸ் கொண்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் உலக அளவில் உள்ள 1700000 இடங்களைக் காட்டும் சக்தி கொண்டது. மேலும் இந்த கேமரா 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்டி வீடியோவை டிஜிட்டல் ஒலியுடன் பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த கேமராவின் விலை ரூ.20,000க்குள் இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்