ஏராளமான வசதிகளுடன் புதிய கேமராவை களமிறக்கும் நிகான்!

இந்த கூல் பிக்ஸ் பி7100 கேமரா பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக இந்த கேமரா 10.1 மெகா பிக்சல் 1/1.7 இன்ச் சிசிடி இமேஜ் சென்சாரைக் கொண்டிருக்கிறது. இதன் ஆப்டிக்கல் லென்ஸ் 7.1 எக்ஸ் சூமைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் வீடியோ அவுட்புட் 720பி ரிசலூசனைக் கொண்டுள்ளது. இதன் எல்சிடி திரையின் அளவு 3 இன்ச் ஆகும். மேலும் இதில் 28-200எம் ஆப்டிக்கல் சூமும் உள்ளது.
இந்த கூல் பிக்ஸ் கேமராவில் ஒரு புதிய மற்றும் அழகான முகப்பு கட்டுப்பாட்டு டயலும் உள்ளது. இதில் உள்ள சூட்டிங் லாக் நேரம் 200 மில்லி விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குயிக்கர் சிஸ்டம் மற்றும் சிறந்த பதில் கொடுக்கும் நேரம், புதிய திறன் கொண்ட மோனோ டோன் மற்றும் அகற்றும் வசதி கொண்ட உரையுடன் கூடிய எக்ஸ்டர்னல் ப்ளாஷுக்கான போர்ட் போன்ற எல்லா வசதிகளும் இந்த கேமராவில் பார்க்க முடியும்.
இதில் அதிர்வுகள் குறைவாக இருப்பதால் இதன் படங்கள் மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் இந்த கேமரா எக்ஸ்பீடு சி2 ப்ராசஸரில் இயங்குகிறது. மற்ற வசதிகளைப் பார்த்தால் இந்த கேமரா மெக்கானிக்கல் சாரஜ் எலக்ட்ரானிக் சட்டர், எசிடிஎம்ஐ போர்ட், தகவல் பரிமாற்றத்திற்கான இன்ப்ரா ரெட் ரிசிவர் மற்றும் யுஎஸ்பி 2.0 போர்ட் ஆகிய வசதிகளும் இந்த கேமராவில் உள்ளன. இந்த கூல் பிக்ஸ் கேமராவின் விலை ரூ.25000 ஆகும்.


Click it and Unblock the Notifications