Home
Camera

விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்களை களமிறக்கும் நிகான்!

By Karthikeyan
விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்களை களமிறக்கும் நிகான்!

கேமரா தயாரிப்புகளில் முன்னனியில் இருக்கும் நிக்கன் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் ஆப்டிக்ஸ் வரிசையில் பைனாகுலர், பீல்டு ஸ்கோப்ஸ் மற்றும் லேசர் ரேன்ச்பைன்டர்ஸ் போன்ற சாதனங்களைக் களமிறக்குகிறது.

இந்த சாதனங்களில் நிக்கனின் உயர்ரக லென்சுகள் இருக்கும். குறிப்பாக உலக அளவில் மக்கள் மத்தியில் நிக்கனின் ஆப்டிக்ஸ் சாதனங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே இந்த ரசிகர்களும் நிக்கனின் ஸ்போர்ட்ஸ் ஆப்டிக்ஸ் சாதனங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய ஆப்டிக்ஸ் சாதனங்களை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக நிக்கன் இந்தியாவின் தலைமை மேலாளர் ஹிரோஷி டக்காஷிமா கூறுகிறார்.

நிக்கன் தனது பைனாக்குலரை மிகக் குறைந்த விலைக்கு விற்க இருக்கிறது. அதாவது ரூ.3,750லிருந்து ரூ.1,49,950 வரை இந்த பைனாக்குலரை வாங்கலாம். இந்த பைனாகுலர்கள் எந்த ஒரு வெப்ப நிலையிலும் மிக சூப்பராக செயல்படும்.

அதுபோல் நிக்கனின் பீல்டுஸ்கோப்ஸ்கள் இன்டர் சேன்சபுள் ஐ பீஸ்களுடன் வருகின்றன. இந்த பீல்டு கோப்ஸ்கள் ரூ.22,450 முதல் ரூ.99,950 வரை விற்கப்பட இருக்கின்றன. அதோடு நிக்கனில் லேசர் ரேன்ச் பைன்டர்கள் ரூ.19,950 முதல் ரூ.33,450 வரை விற்கப்படுகின்றன.

இந்த சாதனங்கள் இந்த மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X