எளிமையாக இயக்கும் வசதிகளுடன் புதிய நிகான் கேமரா!

Posted By: Karthikeyan
எளிமையாக இயக்கும் வசதிகளுடன் புதிய நிகான் கேமரா!

கேமராத் துறையில் நெடுங்காலமாக கோலோச்சி வரும் நிகான் நிறுவனம் இப்போது இன்டர் சேஞ்சபுள் லென்சுடன் கூடிய ஒரு புதிய மிரர்லெஸ் டிஜிட்டல் கேமராவைக் களமிறக்குகிறது. இந்த கேமராவின் பெயர் நிக்கன் 1 ஜே1 ஆகும்.

இந்த நிகான் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது இது வெள்ளை, கருப்பு, சிவப்பு, வெள்ளி மற்றும் பிங்க் போன்ற வண்ணங்களில் வருகிறது. இதன் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இது 10.1 மெகா பிக்சல் சிஎம்ஒஎஸ் சென்சார், 13.2 எக்ஸ் சூமுடன் கூடிய கிரிஸ்டல் க்ளியர் போக்கஸ் மற்றும் 3872 x 2592 இமேஜ் ரிசலூசன் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த புதிய கேமராவின் எச்டி வீடியோ ரிசலூசன் 1080பி ஆகும். மேலும் இந்த கேரா மிக உறுதியான அதே நேரத்தில் அடக்கமான கேமரா ஆகும். இதில் உயர்தர எஎப் சிஸ்டமும் உள்ளது. இதன் 3 இன்ச் திரை 460000 டாட்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் பில்ட் இன் ப்ளாஷும் உள்ளது. அதுபோல் இந்த ஜே1 கேமராவில் ஸ்விப்ட் ஆட்டோ போக்கஸ் சிஸ்டம், மோஷன் ஸ்நாப்ஷாட் வசதி, ஸ்லோ மோசன் மோட் மற்றும் ரிமோட் வசதிக்கான இன்ப்ரா ரெட் ரிசிவர் போன்ற எல்லா வசதிகளும் உள்ளது.

இந்த நிக்கன் 1 ஜே1 கேமரா சாதராண மக்களும் வாங்கும் அளவிற்கு விலை குறைவாக இருக்கிறது. ஏற்கனவே நிக்கன் கேமராக்களைப் பயன்படுத்தியவர்களை இந்த ஜே1 கேமரா கவரவில்லையென்றால் அவர்களுக்காகவே நிக்கன் வி1 என்ற கேமராவை அறிமுகப்படுத்துகிறது. இந்த வி1 கேமரா சற்று மேம்பட்ட கேமராவாக இருக்கும்.

இந்த ஜே1 கேமரா பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கிறது. அதே நேரத்தில் இதை இயக்குவதும் மிக எளிதாகும். இதில் இன்ட்ரசேஞ்சபுள் லென்ஸ் உள்ளதால் எச்டி தரத்துடன் வீடியோவை அனுபவிக்க முடியும். அதுபோல் ஸ்லோ மோஷன் மோடும் உள்ளதால் கூடுதல் பலத்தைத் தரும். அதுபோல் இந்த கேமரா குயிக் மூவி எடிட்டிங் சாப்ட்வேரையும் கொண்டுள்ளது.

இந்த கேமராவின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே ஸ்டில்களையும் எடுக்க முடியும். இந்த ஜே1 கேமரா வரும் மார்ச்சில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot