Home
Camera

நிகோலா டெஸ்லா-வின் அளப்பரிய சாதனைகள்!

நிகோலா டெஸ்லா என்பவர் தற்போதுவரையிலான மிகச்சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர். அவரின் பரிசோதனைகள் எல்லாம் அவரது காலத்திற்கு அப்பாற்பட்டவையே. அதாவது அவர் இறக்கும் வரை அவரது படைப்புகளில் பெரும்பகுதி இந்த உலகத்தால் பாராட்டப்படவே இல்லை. ஜூலை 10, 1856 அன்று ஆஸ்திரியாவில் பிறந்த டெஸ்லா, தனது பணிகளை மேற்கொள்வதற்காக நியூயார்க் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார்.

அமெரிக்காவில் இருந்தபோது, ​​அவரது செயல்பாடுகள் மற்றும் பைத்தியகாரத்தனமான கண்டுபிடிப்புகள் அவருக்கு 'பைத்தியகார விஞ்ஞானி' என்ற நற்பெயரைப் பெற்றுதந்தன. மேலும் நவீன வாழ்க்கைக்கு அவசியமான பல விஷயங்களை உருவாக்கியவர் இவர். இந்த மாமனிதனின் மிகப்பெரிய சாதனைகளை இங்கே காணலாம் .

மாற்று மின்னோட்டம் (Alternating current)

மாற்று மின்னோட்டம் (Alternating current)

இவை அனைத்தும் 1893 இல் சிகாகோவில் நடந்த உலக கண்காட்சியில் தான் தொடங்கியது. அங்கு எடிசனின் நேரடி மின்னோட்டத்திற்கும் டெஸ்லாவின் மாற்று மின்னோட்டத்திற்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. தாமஸ் எடிசன் கண்டுபிடித்த நேரடி மின்னோட்டம், மிகவும் ஆபத்தானது மற்றும் நீண்ட தொலைவுகளுக்கு அதிக செலவாகக்கூடியது.

டெஸ்லா பவர் கிரிட்டிற்கான மாற்று மின்னோட்டத்தை செயல்படுத்த முயன்றார், ஏனெனில் இது மலிவானது மற்றும் பாதுகாப்பானது. இதன் பாதுகாப்பை நிரூபிக்க, அவர் டெஸ்லா சுருளைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்க தன் வழியே மின்சாரத்தை செலுத்தினார். நேரடி மின்னோட்டத்தை செயல்படுத்த எடிசன் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் முயற்சிகள் எடுத்தபோதிலும், டெஸ்லா மின்னூட்டங்களுக்கான போரில் வெற்றி பெற்றார்.

முதல் நீர் மின் உற்பத்தி நிலையம்

முதல் நீர் மின் உற்பத்தி நிலையம்

நிக்கோலா டெஸ்லாவும் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸும் இணைந்து உலகின் முதல் நீர் மின் நிலையத்தை நயாகரா நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் கட்டினர். இந்த மின் உற்பத்தி நிலையம் இன்றுவரை அருங்காட்சியகமாக இருந்தாலும், இது உலகத்தை மின்மயமாக்கும் செயல்முறையைத் தொடங்கிய முதல் எரிசக்தி உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகும்.

எக்ஸ்-ரே

எக்ஸ்-ரே

டெஸ்லாவின் வாழ்க்கையில், ​​அயனியாக்கும் கதிர்வீச்சு மற்றும் மின்காந்தவியல் ஆகியவை பெரிதும் ஆய்வு செய்யப்பட்ட பாடங்களாக இருந்தன. எக்ஸ்ரே இமேஜிங்கில் அவரது ஆரம்பகால சோதனைகள் இறுதியில் மருத்துவத் துறையில் செயல்படுத்த வழிவகுத்தது. எக்ஸ்-கதிர்களின் கண்டுபிடிப்பு, டெஸ்லா தன்னைச் சுற்றியுள்ள உலகில் காணப்படாத சக்திகளைப் புரிந்துகொள்வதற்கான தனது தேடலின் மூலம் கண்டறிந்தது. இதுதான் இறுதியில் டெஸ்லாவை அத்தகைய ஆழமான ஆச்சரியமான கண்டுபிடிப்பாளராக மாற்றியது.

டெஸ்லாவின் இன்டக்சன் மோட்டார்

டெஸ்லாவின் இன்டக்சன் மோட்டார்

இதுவரை கண்டுபிடித்ததிலேயே 10 மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட டெஸ்லாவின் இன்டக்சன் மோட்டார், பயன்பாட்டு சாதனங்கள் துறையில் புரட்சியை சாத்தியமாக்கியது. மின்சார ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடும் என்பதற்கான முதல் நிகழ்வு இது. இதுவே பின்னர் சலவை இயந்திரங்கள் முதல் சிறிய கலவை இயந்திரங்கள் வரை பல சாதனங்களுக்கு வழிவகுத்தது. மின்சார மோட்டார்கள் பயன்படுத்தும் அனைத்து நவீன மின்னணுவியல் சாதனங்களும் டெஸ்லாவிற்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.

காந்தப் பாய்வு அடர்த்தி கணக்கீடு

காந்தப் பாய்வு அடர்த்தி கணக்கீடு

டெஸ்லாவின் சாதனைகளில் பெரிதும் அறியப்படாத ஒன்று, காந்தப் பாய்வு அடர்த்தியை அளவிடுவதில் நம்பகமான அலகுக்கான அடித்தளமாகும். டெஸ்லா 1882 ஆம் ஆண்டில் சுழலும் காந்தப்புலங்களைக் கண்டுபிடித்தார். இது மாற்று மின்னோட்டத்தைச் சுற்றியுள்ள ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக செயல்பட்டது. தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள எம்ஆர்ஐ இயந்திரம் போன்று பரவலான துறைகளில் சுழலும் காந்தப்புலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டில் காந்தப்புலங்களின் வலிமையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பாய்வு அடர்த்தியின் சர்வதேச அலகுடன் டெஸ்லா கவுரவிக்கப்பட்டார்.

கம்பியில்லா தொலைதொடர்பு (வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன்)

கம்பியில்லா தொலைதொடர்பு (வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன்)

டெஸ்லாவின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளில் வயர்லெஸ் தரவு மற்றும் ஆற்றல் பரிமாற்றம் முக்கியமானது. தரவுகள் பகிரப்படும் அதிர்வெண்களைக் கண்டுபிடிக்கும் குறிக்கோளுடன் J.P. மோர்கன் நிறுவனம் டெஸ்லாவின் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் பரிசோதனையில் 150,000 டாலர் முதலீடு செய்தது. டெஸ்லா கட்டிய கோபுரம் உலகின் முதல் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் அமைப்பாகும். மேலும் இந்த துறையில் அவரது கருத்துக்கள் நவீன வயர்லெஸ் தரவுகளின் சாத்தியத்திற்கான அடித்தளத்தை அமைத்தன.

டெஸ்லாவின் அறிவுத்திறன் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும். அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியதுடன், பல சாதனங்களை வடிவமைத்து உருவாக்கியிருந்தாலும் ஜனவரி 1943ல் தனது 86 வயதில் வறுமையில் தான் இறந்தார்.

டெஸ்லாவின் மிகச்சிறந்த 10 கண்டுபிடிப்புகளைப் அறிந்துகொள்ள, கீழேயுள்ள வீடியோவைப் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Nikola Tesla's Greatest Achievements
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X