வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. கம்மி விலை.. அறிமுகானது சியோமி செக்யூரிட்டி கேமரா.. என்னென்ன அம்சங்கள்?
சியோமி நிறுவனம் அசத்தலான சாதனங்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய செக்யூரிட்டி கேமரா ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோம்.
அதாவது தற்போது சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமராவை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை கேமரா ஆனது கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை வழங்கும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா அம்சங்கள் (Xiaomi 360 Home Security Camera specification): பெயருக்குத் தகுந்தபடி இந்த புதிய கேமரா 360 டிகிரி பானரோமா வியூ மூலம் அறையின் ஒவ்வொரு மூலைகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யும் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய கேமரா ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் மனிதர்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது என சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் இந்த கேமராவை சியோமி ஹோம் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக வைஃபை கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது இந்த கேமரா. பின்பு 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்டோரேஜ்-ஐ ஆதரிக்கிறது இந்த சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா. குறிப்பாக 2கே ரெசல்யூஷன் மற்றும் 2,304 x 1,296 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேமரா.

சியோமி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை ரூ.3,200-ஆக உள்ளது. இந்த கேமராவை அமேசான், பிளிப்கார்ட், எம்ஐ தளங்களில் வாங்க முடியும். இதன் விற்பனை வரும் ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. குறிப்பாக இந்த கேமராவுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 14 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி 14 அல்ட்ரா விவரக்குறிப்புகள்: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சியோமி 14 அல்ட்ரா போன் 6.7-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி Sony LYT900 பிரைமரி சென்சார் + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்டபோன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் என 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner), டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5180 எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W wired charging support), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ( 50W wireless charging support) வசதியும் உள்ளன. IP68 ரேட்டிங், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








