இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.!

இணையத்தில் பிரத்யேக பொழுதுபோக்கு வீடியோக்கள், நிகழ்ச்சிகளை வழங்குவதில் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமான சேவையாக அறியப்படுகிறது.

|

இணையத்தில் பிரத்யேக பொழுதுபோக்கு வீடியோக்கள், நிகழ்ச்சிகளை வழங்குவதில் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமான சேவையாக அறியப்படுகிறது. பல்வேறு தொடர்களை ஓளிபரப்பி வரும் நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் தனது புதிய தொடருக்கான டிரெயிலரை வெளியிட்டது.

இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்

இன்சட்டையபிள் என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் புதிய தொடர் ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் திருநங்கைகளை இழுவுப்படுத்தும் வகையில் இருப்பதாக இணையத்தில் பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 கல்லூரி நண்பர்கள்

கல்லூரி நண்பர்கள்

இத்தொடரில் வரும் பேட்டி எனும் கதாபாத்திரம், உடல் பருமனாக இருப்பதை போன்று துவங்குகிறது. பேட்டியின் உடல் பருமனாக இருப்பதை அவரது கல்லூரி நண்பர்கள் நக்கலடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று பின் எதிர்பாராத விபத்து காரணமாக பேட்டி தன் உடல் எடையை குறைத்து, கச்சிதமான உடல்வாகு பெறுகிறார்.

அழகான பேட்டி

அழகான பேட்டி

புதிய தோற்றத்தில் அழகான பேட்டி, அதன் பின் தன்னை இழிவுப்படுத்தியவர்களை பழிவாங்குகிறார். இதற்கென பேட்டி அழகு போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற காட்சிகளுடன் டிரெயிலர் நிறைவுறுகிறது. டிரெயிலர் முழுக்க ஒருவரின் உடல் தோற்றம் கொண்டு இழிவுப்படுத்தும் காட்சிகள் பலரது எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு மட்டுமின்றி பெண்களின் உடல் அமைப்புகளை இழிவுப்படுத்துவதாக இந்த தொடரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆகஸ்டு 10-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரை ரத்து செய்யக் கோரி சுமார் 2,29,400 பேர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் சிலர் டிரெயிலரில் தோன்றும் சில காட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கடுமையாக விமர்சிக்கும் வகையில்

கடுமையாக விமர்சிக்கும் வகையில்

இத்துடன் பலர் தொடரின் டிரெயிலரில் வரும் வசனங்கள் ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களை மனரீதியாக துன்புறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தொடர் பிரச்சனைகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது என நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களுக்கான துணை தலைவர் சின்டி ஹொலான்டு தெரிவித்தார்.

எச்சரிக்கும் கதை

எச்சரிக்கும் கதை

பிரச்சனைகளை ஆழமாக தீர்க்க வெளிப்புறங்கள் எவ்வளவு முக்கியமானவை என்ற நம்புவது எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கும் கதை இது. தயவு செய்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தொடரை உருவாக்கிய லாரென் குசிஸ் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
New Netflix Series Insatiable Faces Fat-Shaming, Homophobia Accusations: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X