Home
Camera

35 கிராம் எடை கொண்ட சூப்பரான கேமரா அறிமுகம் செய்யப்பட்டது: விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது இந்திய சந்தையில் சிறிய கேமராக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சிறிய வகை கேமராக்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக இந்த சிறிய கேமராக்கள் யூடியூப் சேனல்களில் வீடியோவை பதிவிட மிகவும் உதவியாக இருக்கின்றன.

இந்நிலையில் இன்ஸ்டா360 நிறுவனம் புதிய கோ 3 ஆக்ஷன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய கேமரா தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட கோ 2 மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த புதிய வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

35 கிராம் எடை கொண்ட சூப்பரான கேமரா அறிமுகம் செய்யப்பட்டது.!

இந்த புதிய இன்ஸ்டா360 கோ 3 மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆக்ஷன் பாட் (Action Pod) ஆகும். மேலும் இதில் ப்ளிப் செய்யக்கூடிய டச் ஸ்கிரீன் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 35 கிராம் எடை கொண்டு இந்த இன்ஸ்டா360 கோ 3 மாடல் வெளிவந்துள்ளது. எனேவ இந்த கேமராவை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்று மிக அருமையாகப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக இந்த கேமராவின் டிசைன் கூட மிகவும் அருமையாக உள்ளது. பின்பு இதில் உள்ள கேமரா f2.2 அப்ரேச்சர், 11.24mm ஃபோக்கல் லென்த் கொண்டிருக்கிறது. மேலும் இது பல்வேறு ரெசல்யூஷன் மற்றும் ஃபார்மேட்களில் (INSP, DNG போட்டோ, வீடியோக்களுக்கு MP4) புகைப்படங்களைப் படமாக்கச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

35 கிராம் எடை கொண்ட சூப்பரான கேமரா அறிமுகம் செய்யப்பட்டது.!

வீடியோ எடுக்க இந்த கேமரா மிகவும் அருமையாகப் பயன்படும். அதாவது வீடியோக்களை 1080 பிக்சல்ஸ், 1440 பிக்சல் மற்றும் 2.7K ரெசல்யூஷன்களில் 24, 25, 30 மற்றும் 50 ஃபிரேம் ரேட்களில் பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது இந்த இன்ஸ்டா360 கோ 3 மாடல். இதுதவிர மூன்று வீடியோ பதிவு செய்யும் மோட்கள் கொண்டுள்ளது இந்த கேமரா.

அதாவது பிரீ-ரெக்கார்டிங், லூப் ரெக்கார்டிங் மற்றும் டைம்டு கேப்ச்சர் என மூன்று மோட்கள் கொண்டு இந்த இன்ஸ்டா360 கோ 3 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இதில் டைம்டு கேப்ச்சர் மோட் உள்ளது. இதைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் கேமரா ரெக்கார்ட்டிங் தானாக ஸ்டார்ட் செய்ய வைக்க முடியும்.

புதிய இன்ஸ்டா360 கோ 3 மூலம் டைம்-லேப்ஸ் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் வீடியோக்கள் சீராகவும், ஃபிரேம்கள் அதிர்வுகள் இன்றி தெளிவாகவும் இருக்க 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப், ஃபுளோஸ்டேட் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 360 ஹாரிசான் லாக் போன்ற அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய கேமரா.

குறிப்பாக 2.2-இன்ச் ஃபிளிப் ட்ச் ஸ்கிரீன், வாய்ஸ் கமான்ட் வசதி, 1270 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமரா வெளிவந்துள்ளது. பின்பு ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது இந்த புத்தம் புதிய கேமரா.

35 கிராம் எடை கொண்ட சூப்பரான கேமரா அறிமுகம் செய்யப்பட்டது.!

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பல்வேறு தளங்களில் வீடியோக்களை பதிவிட இந்த கேமரா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக இந்த கேமரா வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமராவின் ஆரம்ப விலை 380 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.31,155-ஆக உள்ளது. தற்போது இந்த கேமரா அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த கேமரா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Insta360 GO 3 Camera Launched at Budget Price: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X