அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!

  விண்வெளி பந்தயத்தில் ரஷ்யாவை வெற்றிகொள்ள நம்பிக்கையில்லாத அமெரிக்க அரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கியது போன்று மாயபிம்பத்தை ஏற்படுத்த இரகசிய செட் அமைத்து படம்பிடித்ததாக சதிகோட்பாட்டு வல்லுநர்கள் எப்போதும் நம்புகின்றனர்.

  மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!

  அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.!

  ஆனால் தற்போது அந்த சதிகோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் புதிய ஆதாரமாக, கடந்த சனிக்கிழமை ஆளில்லாத சீனா விண்கலமான சேன்ஜ்3 (Chang’e 3) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.'

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  யார் பொய்யர்? நிலவில் பழுப்பு நிற மண்?

  சீன அரசு தொலைக்காட்சியின் தகவலின் படி, சேன்ஜ்13 விண்கலம் பூமியில் இருந்து 13 நாள் பயணத்திற்கு பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்தில் யூடு அல்லது ஜேட் ரேபிட்(Jade Rabbit or Yutu in Mandarin Chinese) என அழைக்கப்படும் சூர்யசக்தியில் இயங்கும் ரோபோட் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

  சைனஸ் இரிடியம்

  இது திட லாவா-ஆல் உருவாக்கப்பட்டுள்ள மென்மையான சமதள பரப்பான சைனஸ் இரிடியம் அல்லது ரெயின்போ பே-ஐ பலமணிநேரத்திற்கு பிறகு ஆராயத் துவங்கவுள்ளது.

  சீன தேசிய விண்வெளி ஆணையம்

  ஆனால் சீன தேசிய விண்வெளி ஆணையம் நிலவு மண்ணின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட பின்பு, அது சாம்பல் நிறத்தில் இல்லாமல் பழுப்பு நிறமாக இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

  சிதறடிக்கப்பட்ட பாறை

  நிலவின் பரப்பு பொதுவாக சிதறடிக்கப்பட்ட பாறைகளுடன் கூடிய பழுப்பு நிறத்தில் இருக்கும் என கூறுகின்றனர் சர்ச்சையாளர்கள். முதல்முறையாக இவ்வளவு அருகில் சுதந்திரமாக நிலவின் பரப்பை அதன்உண்மையான நிறத்தில் பார்ப்பதால் இப்படி தெரியலாம் என்கின்றனர் பலர்.

  நாசா

  இந்த மாதத்தின் துவக்கத்திலேயே சீனாவின் நிலவு திட்டத்தை தள்ளிவைக்குமாறு நாசா கேட்டுக்கொண்டதாக அடித்துக் கூறுகின்றனர்.சீன தலைவர்களின் நிலவு திட்டத்திற்கான இறுதி நோக்கங்கள் தங்களை கவலை கொள்ளச் செய்வதாக நாசா கூறியுள்ளது.

  ரஷ்ய தளமான வெஸ்டி

  சமீபத்தில் ரஷ்ய தளமான வெஸ்டி(Vesti) கூறுகையில், சீன நிலவில் பெரிய அளவிலான ஏவுகணை சோதனைகளை நடத்தி அதனை டெத் ஸ்டார்( Death Star) ஆக மாற்ற முயல்வதாக தெரிவித்துள்ளது.

  அதிபர் ஜூ ஜிங்பிங்

  சீனா விண்வெளியின் சூப்பர்பவராக மாறவேண்டும் என்ற சீன அதிபர் ஜூ ஜிங்பிங்-ன் கருத்துடன் இது ஒத்துப்போவதில் ஆச்சர்யமில்லை.

  அமெரிக்கா

  சீன தேசிய விண்வெளி ஆணையம்(National Space Administration of China -CNSA) வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள், உலகில் அமெரிக்கா மட்டும் தான் நிலவில் கால்வைக்க முடியும் என்ற எண்ணத்தை உடைத்துள்ளது. அதேநேரம் இது மற்றுமொரு போலியான நிலவு தரையிறங்கல் என்கின்றனர் மற்றவர்கள். நாங்கள் எப்போதும் கூறுவது போல, அனைவரும் அவரவரது கருத்துக்களை உருவாக்கிறார்கள்.

  நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

  வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..!

  அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

  முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!

  தேடல் :

  உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசம் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது..!

  வரலாற்று பெருமை :

  ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..!

  நாசா முயற்சி :

  அப்படியாகிய அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..!

  உறுதி :

  2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!

  உயிரினங்கள் :

  நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..!

  எங்களுக்கு தெரியும் :

  மேலும் எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..!

  தொழில்நுட்பம் :

  பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்..!

  பாதை :

  "ஆக, நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம்..!" என்று உறுதிப்பட கூறியுள்ளார் எல்லன்..!

  ஆய்வு :

  2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..!

  நேரடி ஆய்வு :

  அதுமட்டுமின்றி 2030-ஆம் ஆண்டு வாக்கில், செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்கள் நேரடியாக சென்று ஏலியன்கள் சார்ந்த ஆய்வை மேற்க்கொள்ளும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

  தொல்லுயிர் எச்சம் :

  விரைவில் விண்வெளி பாறைகள் உடைக்கபடும், அதனுள் இருந்து தொல்லுயிர் எச்சம் தேடப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது..!

  தொலைநோக்கி :

  உடன் 2018-ஆம் ஆண்டு, 8.8 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட உள்ள, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (James webb space) தொலைநோக்கியானதும், இந்த ஏலியன் தேடலில் உட்படுத்தப்பட இருக்கிறதாம்..!

  திட்டம் :

  மேலும் 2020-ஆம் ஆண்டில் அகச்சிவப்புகதிர் (Infrared) தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

  கருத்து :

  எல்லனின் கருத்துக்கு ஆதரவாய் முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் நாசாவில் இணை நிர்வாகியாக பணிபுரியும் 'ஜான் கிரன்ஸ்பெல்ட்'டும் கருத்து தெரிவித்துள்ளார்..!

  விரைவில் :

  ஏலியன்கள் சார்ந்த அறிகுறி எதிர்பார்ப்பதை விட விரைவில் கிடைக்கும் என்றும், நம் சூரிய மண்டலத்தில் மட்டுமில்லாது அதை தாண்டிய அண்டவெளிகளில் இருந்தும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  சுற்றுசூழல் :

  சமீபத்திய ஆராய்ச்சிகளில் இருந்து அண்டத்தில், உலக ஜீவராசிகளை தவிர்த்து வேறு உயிரினங்கள் வாழும்படியான சுற்றுசூழல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

  நீர் இருப்பு :

  எடுத்துக்காட்டுக்கு ஜுப்பிட்டர் கிரகத்தில், அதிக அளவிலான நீர் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதையும், செவ்வாய் கிரகம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலால் சூழப்பட்டிருந்தததையும் சுட்டிக்காட்டியுள்ளார், ஜான் கிரன்ஸ்பெல்ட்..!

  மூலக்கூறுகள் :

  மேலும் நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் கார்பன் அடங்கிய உடல் உறுப்புகள் சார்ந்த மூலக்கூறுகளையும், 'நிலையான' நைட்ரஜனையும் கண்டுபிடித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  தேடுதல் பணி :

  இந்த ஏலியன் சார்ந்த தேடுதல் பணியில் நாசாவின் கேப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

  உறுதி :

  ஏலியன் இருப்பு உறுதி என்பதை உணர்த்தும் வகையில் "பால்வழி மண்டலமானது நீரால் ஊறிப்போன ஒரு இடம்..!" என்று கருத்து தெரிவித்துள்ளார் நாசாவின் வான் இயற்பியல் துறையின் இயக்குநர் பால் ஹெர்ட்ஸ்.

  ஏலியன் வேட்டை :

  வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மேற்க்கண்ட தகவல்கள் மூலம் உறுதியாகிறது..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  NASA TREMBLES CHINESE SPACE MISSION REVEALED THAT THE US NEVER STEPPED ON THE MOON : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more