நாசாவை புத்திசாலி என்று நம்புபவர்கள் முதலில் இதை படிக்கவும்!

யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு அருகில் ஒரு எரிமலை உள்ளது. அது உலகின் மீதி பகுதிகளில் இதுற்கும் சராசரி எரிமலையை போன்றது அல்ல.

|

யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு அருகில் ஒரு எரிமலை உள்ளது. அது உலகின் மீதி பகுதிகளில் இதுற்கும் சராசரி எரிமலையை போன்றது அல்ல. அது நூற்றுக்கணக்கான மீட்டர்கள் ஆழமானது, ராட் தீவு எனும் மாநிலத்தை விடவும் பெரியது, நாமும் நம் வரலாறும் இதுவரை கண்ட மாபெரும் வெடிப்புகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான வன்முறை வெடிக்கும் திறனை கொண்டது.

அந்த வெடிப்பு ஓரி சூப்பர் வல்கனோ வெடிப்பாக (பூமியின் அழிவை உறுதி செய்யும் இயற்கை பேரழிவுகளில் ஒன்று) இருக்கும் என்பதில் ஐயமே வேண்டாம். அமெரிக்காவில் உள்ள மூன்று மாபெரும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும், இருந்தாலும் ஏனைய எரிமலைகளை காட்டிலும் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சறுத்தலாக இருப்பது - இந்த எரிமலை தான்.

உலகத்தின் அழிவு ஆரம்பமாகும்?

உலகத்தின் அழிவு ஆரம்பமாகும்?

யெல்லோஸ்டோன் எரிமலை வெடிக்கும் பட்சத்தில் ஓரு பேரழிவு ஏற்படும். அந்த வெடிப்பு எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானதாக இருக்கும். ஒரு மீட்டருக்கும் மேலான உயரத்தில் சாம்பலை மண் மீது தூவும். அது நகரங்களை மூடும். வெடிப்பு ஏற்பட்ட அடுத்த பல தசாப்தங்களுக்கு சூரியனை தடுக்கக்கூடிய மாபெரும் கருப்பு மேகங்கள் உருவாகும். உலகளாவிய வெப்பம் குறையும், தாவரங்கள் இறக்கும், மற்றும் விவசாயம் தோல்வியடையும். (ஐ நா அறிக்கையின் படி) வெடிப்பு நிகழ்ந்த அடுத்த இரண்டு மாதங்களில் உலகின் ஒட்டுமொத்த உணவும் காலி ஆகும். இறுதியில் உலகத்தின் அழிவு ஆரம்பமாகும்.

இந்த வெடிப்பு சாத்தியமா?

இந்த வெடிப்பு சாத்தியமா?

சாத்தியம் தான். ஏனெனில் கூறப்படும் யெல்லோஸ்டோன் இஎரிமலை ஆனது கடந்த காலத்தில் வெடிப்புகளை கண்டுள்ளது. இது கடந்த 2.1 மில்லியன் ஆண்டுகளில் மூன்று முறை வெடித்து உள்ளது. ஆக கிட்டத்தட்ட 600,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். சரி கடைசியாக இது எப்போது வெடித்தது? என்று கேட்டால் சுமார் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு.! ஆக தற்போது வெடிக்க போகிறது அப்படித்தானே என்று கேட்டால் - இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது.

சரி எப்போது தான் வெடிக்கும்?

சரி எப்போது தான் வெடிக்கும்?

ஆய்வாளர்களின் கணிப்பின் படி, இந்த யெல்லோஸ்டோன் எரிமலை ஆனது நாளையோ அல்லது அடுத்த 1000 ஆண்டுகளிலோ வெடிக்க வாய்ப்பில்லையாம். அதற்காக இது வெடிக்காமலேயே இருக்கும் என்று அர்த்தம் இல்லை. சரி எப்போது தான் வெடிக்கும் என்று கேட்டால் - இன்னும் சில மில்லியன் ஆண்டுகளுக்கு இது நடக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட ஒரு யோசனையை சாத்தியம் ஆக்கினால் இந்த யெல்லோஸ்டோன் எப்போதும் வெடிக்காமல் இருக்க செய்யலாம் என்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா.

அதென்ன யோசனை?

அதென்ன யோசனை?

கடந்த 2015 ஆம் ஆண்டில் நாசாவின் பல விஞ்ஞானிகள் ஒன்றுகூடி, எரிமலை வெடிப்பில் இருந்து உலகை காப்பாற்றுவடிகற்கான ஒரு யோசனையை கண்டு அறிந்தனர்.வேறு ஒன்றுமில்லை, எரிமலையின் அடிப்பகுதியை குளிர்விக்க முடிவு எடுத்து உள்ளனர். எரிமலை வெடிப்பிற்கு பிரதான காரணாம் வெப்பம் தான், அந்த வெப்பம் பூமியின் மையத்திலிருந்து வெளிப்பட்டு உயர்கிறது, ஒருகட்டத்தில் மையத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள எரிமலைக் குழாய்களுக்கு உச்சக்கட்ட அழுத்தம் ஏற்படும், பின் எரிமலை வெடிக்கும்.

இது சாத்தியமா?

இது சாத்தியமா?

யெல்லோஸ்டோனுக்கும் இதே முறை தான். ஒவ்வொரு ஆண்டும் ஆறு ஆற்றல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி போதுமான வெப்பத்தை இந்த இந்த எரிமலை வழங்கி வருகிறது. அந்த வெப்பத்தின் சுமார் 60 முதல் 70% பழைய நீரூற்று போன்ற வெப்ப நீரூற்றுகள் மற்றும் வாயுக்களின் வழியாக தப்பித்து செல்கிறது. ஆனால் மீதமுள்ள வெப்பம் நிலத்தடியில், எரிமலையின் மாக்மா (எரிமலை குழம்பு) அறைகளின் உள்ளேயே தங்கி விடுகிறது. அதையும் வெளியேற்றுவதே நாசா விஞ்ஞானிகளின் திட்டம்.

காலப்போக்கில் காய் கனியும்!

காலப்போக்கில் காய் கனியும்!

இந்த திட்டத்தின் கீழ், எரிமலையின் மேற்பார்வை சுற்றுப்புறத்தை சுற்றி பல கிணறுகளை வெட்ட வேண்டும். இந்த கிணறுகள் உலகின் மிகவும் ஆழமான கிணறுகளாக இருக்கும். அதாவது மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழம் வரை செல்லும். அந்த கிணறுகள் குளிர்ந்த நீரால் நிரப்பப்படும். வெப்பமாகும் நீர் வெளியேற்றப்படும் மறுகையில் மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீர் உட்செலுத்தப்படும். இந்த திட்டம் இரண்டு காரியங்களை சாத்தியப்படுத்தும். ஒன்று எரிமலையை வெடிக்காமல் பார்த்துக்கொள்ளும். இரண்டாவது யெல்லோஸ்டோன் எரிமலையை ஒரு பெரிய புவிவெப்ப ஆற்றல் நிலையமாக மாற்றும்.

அறிவா? அதிர்ஷ்டமா?

அறிவா? அதிர்ஷ்டமா?

இந்த கோட்பாடு நிச்சயமாக வேலை செய்யும். ஆனால் உண்மையில் இது முயற்சி செய்யப்படுமா? என்று கேட்டால்? - அநேகமாக இல்லை. ஏனெனில் இது சாத்தியமாக சுமார் 3.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இது நாசாவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 20% ஆகும். இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், எரிமலை பாறைகளை குளிர்ச்சியாக்கும் போது, அதன் மாக்மா அறைகளில் முறிவுகள் ஏற்படலாம். அது ஒரு மாபெரும் வெடிப்பை தூண்டி விடலாம். ஆக மொத்தத்தில் நாசாவின் இந்த திட்டத்தில் அறிவை விட அதிர்ஷ்டமே அதிக வேலை செய்யும் என்பது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
NASA has a $3.5 billion idea to save Earth from a supervolcano apocalypse : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X