பூமியை ஒத்த மனிதர்கள் வாழக்கூடிய உலகை கண்டுபிடித்த நாசா!

|

கிரகங்களை கண்டறியும் நாசாவின் செயற்கைக்கோளான டெஸ்( TESS), நமது பூமியின் அளவிலான உலகைக் கண்டுபிடித்ததுள்ளது. அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய எல்லைக்குள்ளேயே இருக்கும் அக்கிரகம், திரவ நீர் இருப்பதை அனுமதிக்கவல்லது என தெரியவந்துள்ளது.

டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட்

டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட்

டெஸ் என அழைக்கப்படும் டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட்-ன் முதல் கண்டுபிடிப்பு, இரண்டு நட்சத்திரங்கள் சுற்றிவரும் ஒரு உலகம் ஆகும். ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் டாட்டூயின் கிரகத்தை ஒத்த இதில், நமக்கு தெரிந்தவரை உயிரினங்கள் வாழ வாய்ப்பில்லை.

"TOI 700 d" என்று பெயரிடப்பட்ட மனிதர்கள் வாழ சாத்தியமான மற்றொரு கிரகம், ஒப்பீட்டளவில் பூமிக்கு நெருக்கமாக உள்ளது( 100 ஒளி ஆண்டுகள் மட்டுமே!) என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் திங்களன்று ஹவாயின் ஹொனலுலுவில் நடைபெற்ற குளிர்கால அமெரிக்க வானியல் சங்க கூட்டத்தின் போது தெரிவித்துள்ளது.

பூமிக்கு மிக நெருக்கமான நட்சத்திரமான ப்ராக்ஸிமா செண்டூரி, வெறும் நான்கு ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூமியின் அளவிலான கிரகங்கள்

பூமியின் அளவிலான கிரகங்கள்

"அருகாமையில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பூமியின் அளவிலான கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்காக டெஸ் வடிவமைக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்டது" என்று நாசா வானியற்பியல் பிரிவு இயக்குனர் பால் ஹெர்ட்ஸ் கூறுகிறார்.

டெஸ் ஆரம்பத்தில் நட்சத்திரங்களை தவறாக வகைப்படுத்தியது. அதாவது இதன்காரணமாக கிரகங்கள் உண்மையில் இருப்பதை விட பெரியதாகவும் அதிக வெப்பமானதாகவும் தோன்றின. ஆனால் டெஸ் குழுவின் உறுப்பினர்களுடன் பணிபுரியும் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆல்டன் ஸ்பென்சர் உட்பட பல தொடக்கநிலை வானியலாளர்கள் இந்த பிழையை அடையாளம் கண்டனர்.

ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

"நட்சத்திரத்தின் அளவுருக்களை நாங்கள் சரிசெய்தபோது, ​​ கிரகங்களின் அளவுகள் வீழ்ச்சியடைந்தன. மேலும் வெளிப்புற கிரகமானது பூமியின் அளவிலேயே உயிரினங்கள் வாழக்கூடிய பகுதியாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்" என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர் எமிலி கில்பர்ட் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பானது பின்னர் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்ற வேறு சில கிரகங்களும் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சில கிரகங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் 2018ல் விண்ணில் செலுத்தப்பட்ட டெஸ் விண்கலம் கண்டுபிடித்த முதல் கிரகம் இதுவாகும்.

TOI 700

TOI 700

பொருள்கள் - கிரகங்கள் - நட்சத்திரங்களுக்கு முன்னால் செல்கிறதா என்பதைக் கண்டறிய வானத்தின் ஒரு பகுதியில் டெஸ் தன்னை முதலில் நிலைப்படுத்துகிறது. இது நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தற்காலிக வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் டெஸ் ஒரு கிரகத்தின் இருப்பை, அதன் அளவு மற்றும் சுற்றுப்பாதையை யூகிக்கமுடிகிறது.

TOI 700 நட்சத்திரம் சிறியதாக இருந்தாலும், இது நமது சூரியனில் 40 சதவிகிதம் அளவும், பாதி வெப்பமும் கொண்டுள்ளது.

TOIS 700 b, c மற்றும் d என பெயரிடப்பட்ட மூன்று கிரகங்களை சுற்றுப்பாதையில் டெஸ் கண்டுபிடித்திருந்தாலும், "கோல்டிலாக்ஸ் மண்டலம்" என்று அழைக்கப்படும் பகுதியில் "d" மட்டுமே உள்ளது. இது நட்சத்திரத்திலிருந்து வெகு தொலைவிலும் இல்லாமல் மிக நெருக்கமாக இல்லாமல் இருப்பதால், அங்குள்ள வெப்பநிலை திரவவடிவ நீரை இருப்பதை அனுமதிக்கிறது.

 20 சதவீதம் பெரிய TOI 700 d கிரகம்

20 சதவீதம் பெரிய TOI 700 d கிரகம்

பூமியை விட 20 சதவீதம் பெரிய TOI 700 d கிரகம், 37 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இது சூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலில் 86 சதவீதத்தைப் பெறுகிறது.

பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த கிரகம், அடர்த்தியான, கார்பன்-டை-ஆக்சைடு ஆதிக்கம் நிறைந்த வளிமண்டலத்தால் மூடப்பட்டுள்ளது என விவரிக்கிறது நாசா.

Best Mobiles in India

English summary
NASA Discovers Potentially Habitable Earth-Sized World in Star's 'Goldilocks' Zone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X