தொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் முகேஷ் அம்பானி: எதற்கு?!

தற்போது அம்பானியின் உறவினர்கள் நிகில் , ஹிடல் மேஸ்வானி உட்பட அனைத்து முழுநேர இயக்குநர்களுக்கும் நல்ல சம்பள உயர்வு மார்ச்31 2018ல் முடிந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

|

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்று வருகிறார். 2008-09 லிருந்து சம்பளம், பணப்பலன்கள், படித்தொகை மற்றும் தரகுத்தொகை அனைத்தும் சேர்த்து ரூ15 கோடியை பெற்றுவரும் அம்பானி, ஆண்டுக்கு சுமார் ரூ24 கோடியை விட்டுக்கொடுக்கிறார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் அம்பானி.!

தற்போது அம்பானியின் உறவினர்கள் நிகில் , ஹிடல் மேஸ்வானி உட்பட அனைத்து முழுநேர இயக்குநர்களுக்கும் நல்ல சம்பள உயர்வு மார்ச்31 2018ல் முடிந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ15 கோடி

ரூ15 கோடி

அனைத்து மட்டத்திலும் ஊதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என விருப்பத்திற்கு ஏற்ப, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானியில் ஊதியம் ரூ15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது ரிலையன்ஸ்.

தரகுத்தொகை

தரகுத்தொகை

2017-18க்கான இந்த ஊதிய உயர்வு, ரூ4.49 கோடி சம்பளம் மற்றும் படித்தொகையை உள்ளடக்கியது. இது 2016-17 ல் வாங்கிய ரூ4.16 கோடியைவிட அதிகம். தரகுத்தொகையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ9.53 கோடி எனவும், பணப்பலன்கள் ரூ60 லட்சத்திலிருந்து ரூ27 லட்சமாக குறைத்தும், ஓய்வூதிய பலன்கள் ரூ71லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரிகளின் சம்பளங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற விவாதங்களுக்கு மத்தியில், 2009 அக்டோபரில் தாமாக முன்வந்து தனது சம்பளத்தை அதிகபட்சமாக ரூ15கோடி என நிர்ணயித்தார். இன்ன பிற செயல் இயக்குநர்களின் ஊதிய விகிதங்கள் உயர்ந்துவரும் நிலையில், இவரின் சம்பளம் மட்டும் அப்படியே தொடர்கிறது.

அம்பானியின் உறவினர்

அம்பானியின் உறவினர்

அம்பானியின் உறவினர்களான நிகில் மேஸ்வானி மற்றும் ஹிடல் மேஸ்வானியின் சம்பளம் தலா ரூ19.99கோடியாக உயர்ந்துள்ளது. 2016-17 ல் அவர்கள் ரூ16.58கோடி பெற்றனர். 2015-16ல் நிகில் ரூ14.42 கோடியும், ஹிடல் ரூ14.41 கோடியும் பெற்றனர். 2014-15ல் இருவரும் ரூ12.03 கோடி பெற்றனர். மேலும் முக்கிய செயல் இயக்குனரான பி.எம்.எஸ் பிரசாத்தின் சம்பளம், ரூ8.99 கோடியாக உயர்ந்துள்ளது. அவர் 2016-17ல் 7.87கோடியும், 2015-16ல் ரூ7.23 கோடியும், 2014-15ல் ரூ6.03 கோடியும் சம்பளமாக பெற்றார்.

 ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

சுத்தகரிப்பு பிரிவின் தலைவரான பவன் குமார் கபிலின் சம்பளம் ரூ3.47 கோடியாக உயர்ந்துள்ளது. 2015-16ல் ரூ2.64 கோடி பெற்ற இவர், 2016-17ல் ரூ2.54 கோடி என்ற குறைவான சம்பளமே பெற்றார். நீடா அம்பானி உள்பட ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்படா இயக்குநர்கள் அனைவரும் ரூ1.5 கோடியை தரகாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு தரகாக ரூ1.3 கோடி தரப்பட்டது.

அசோக் மிஸ்ரா

அசோக் மிஸ்ரா

அம்பானியின் மனைவியும், செயல்படா இயக்குனர்களில் ஒருவருமான நீடா அம்பானி, அந்நிறுவன போர்டில் இருப்பதற்காக ரூ6 லட்சம் கட்டணமாக பெற்றுள்ளார்.அம்பானியை தவிர்த்து அந்த உயர்மட்ட குழுவில் மேஸ்வானி சகோதரர்கள், பிரசாத் மற்றும் கபில் முழுநேர இயக்குனராக உள்ளனர்.

நீடா அம்பானியை தவிர்த்து, செயல்படா இயக்குனராக மான்சிங் பக்தா, யோகேந்திரா திரிவேதி, டி.வி கபூர்,அசோக் மிஸ்ரா, தீபக் ஜெயின்,ரகுநாத் மசெல்கர், அடில் ஜெய்னுல்பாய்,ரமீன்தர் சிங், சாமீட் பானர்ஜி போன்றோர் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Mukesh Ambani keeps salary capped at Rs 15 cr for 10th yr in a row : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X