Home
Camera

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி! ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..

இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு நான்கு முக்கிய விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் அனைத்தும் வரும் கோடைகாலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட தயாராகி வருகின்றன.

பூமியும் செவ்வாய் கிரகம்

பூமியும் செவ்வாய் கிரகம்

இந்த ஆண்டு ஜூலை மாதம், பூமியும் செவ்வாய் கிரகமும் விண்கலங்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக ஒன்றுக்கொன்று பொருத்தமாக நிலையில் வரும் என்பதால், இக்காலகட்டத்தில் ஏராளமான விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

மூன்று உயரினங்களின் பண்டைய அறிகுறிகள்

மூன்று உயரினங்களின் பண்டைய அறிகுறிகள்

மேற்கூறிய நான்கு மிஷன்களில் மூன்று, உயரினங்களின் பண்டைய அறிகுறிகளைத் தேடி செவ்வாய் கிரகத்தில் ரோவர்களை தரையிறக்கும் வகையில் திட்டமிட்டுள்ள நிலையில், மற்றொரு மிஷனில் ஐக்கிய அரபு அமீரகம் கட்டமைத்த சுற்றுப்பாதை விண்கலம் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும்.

வணிக ரீதியாக இயக்கப்படும்

வணிக ரீதியாக இயக்கப்படும்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வணிக ரீதியாக இயக்கப்படும் முதல் விண்கலன் உட்பட, 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாத நூற்றுக்கணக்கான விண்வெளி பயண திட்டங்களும் உள்ளன.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஒன்வெப்

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஒன்வெப்

மேலும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஒன்வெப் ஆகியவை, அவற்றின் 'கிளஸ்டர்களின்' ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பவுள்ளன.

நாசா மார்ஸ் 2020 ரோவர்

நாசா மார்ஸ் 2020 ரோவர்

ஜூலை மாதத்திற்குள் அனைத்து பேச்சுகளும் செவ்வாய் கிரகம் பற்றியதாகவே இருக்கும். ஏனெனில் செவ்வாய் கிரகத்திற்கான ரோவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் ஏவப்படுகின்றன.

செவ்வாயில் பாறை மாதிரிகள்

செவ்வாயில் பாறை மாதிரிகள்

செவ்வாயில் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும்வகையில் நாசா மார்ஸ் 2020 ரோவர் மற்றும் செவ்வாய் ஹெலிகாப்டர் ஸ்கவுட் ஆகியவற்றை ஒருங்கே விண்ணில் செலுத்தவுள்ளது.

ஜூலை அல்லது ஆகஸ்ட் 2020

ஜூலை அல்லது ஆகஸ்ட் 2020

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் 2020ல் கேப் கனாவெரல் விமானப்படை தளத்திலிருந்து புறப்படும். இது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் வழங்கிய இரண்டு கட்ட அட்லஸ் வி -541 ராக்கெட்டில் பயணிக்கும்.

ராஸ்காஸ்மோஸ் எக்ஸோமார்ஸ் மிஷன்

ராஸ்காஸ்மோஸ் எக்ஸோமார்ஸ் மிஷன்

ஐரோப்பிய மற்றும் இரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து கசச்சோக் லேண்டரைப் பயன்படுத்தி ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை விண்ணில் செலுத்த பணியாற்றிவருகின்றனர். முன்னதாக எக்ஸோமார்ஸ் என அழைக்கப்பட்ட இது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்பதை அறிய விண்ணில் ஏவப்படுகிறது.

சீனாவின் மார்ஸ் குளோபல் ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ஸ்மால் ரோவர் மிஷன்

ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர்

ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர்

சீனா மார்ஸ் குளோபில் ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர் மற்றும் ஸ்மால் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. இது அதன் சொந்த ஏவுகலனை பயன்படுத்தி மற்றொரு கிரகத்திற்கு ஏவப்படும் முதல் சீன மிஷன் ஆகும்.

கடந்தகால உயிரிகளின் சான்றுகள்

கடந்தகால உயிரிகளின் சான்றுகள்

செவ்வாயில் கடந்தகால உயிரிகளின் சான்றுகளைத் தேடுவதற்கும், கிரகத்தின் சூழலை மதிப்பிடுவதற்கும் இந்த சீன மிஷன் 2020 ஜூலை மார்ச் 5 அன்று ஹெவி லிப்ட் ராக்கெட்டில் ஏவப்படவுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் ஹோப் மார்ஸ் மிஷன்

ஐக்கிய அமீரகத்தின் ஹோப் மார்ஸ் மிஷன்

ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது. அவர்கள் ஜூலை 2020 இல் ஜப்பானிய ராக்கெட்டில் ஹோப் மார்ஸ் மிஷன் சுற்றுப்பாதையில் செலுத்துகின்றனர்.

இந்த ஆய்வு விண்கலம் ஒவ்வொரு நாளும் செவ்வாய் கிரகத்தின் காலநிலையையும், பருவகால சுழற்சிகள் மூலமாகவும் தூசி புயல்கள் போன்ற குறைந்த வளிமண்டலத்தில் வானிலை நிகழ்வுகளை சிறப்பாக ஆராயும்.

மேற்கூறிய நான்கு விண்வெளி பயணங்களும் பிப்ரவரி 2021 செவ்வாய் கிரகத்தை அடைந்து, அவற்றின் நோக்கங்களின் ஒரு பகுதியாக உயிரினங்களின் பண்டைய சான்றுகளை தேட உள்ளன.

Best Mobiles in India

English summary
Missions to Mars and a trip to the moon are among 2020's space launches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X