இராணுவம் மற்றும் விண்வெளிக்காக பிரத்யோக கேமரா.!

இந்த இம்பெர்க்ஸ் கேமரா உள்கோட்டு பரிமாற்ற சிசிடி சென்சார்களை பயன்படுத்துகிறது மற்றும் கலர், மோனோக்ரோம், ட்ரூசென்ஸ் ஸ்பார்ஸ் சிஎப்ஏ போன்ற வசதிகளும் உள்ளன.

|

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட, முரட்டுத்தனமான மற்றும் அதீத அளவில் ப்ரோகிராம் செய்யக்கூடிய கேமராக்களான இம்பெர்க்ஸ் பாப்கேட் 2.0, இராணுவம் மற்றும் விண்வெளி சந்தையை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டவை. இந்த பாப்கேட் 2.0 கேமராக்கள் வெப்பத்திற்கு உகந்த வடிவமைப்பை பெற்றதாகவும், 14பிட் உள்ளார்ந்த தரவு செயலாக்கமும், 8,10,12 அல்லது 14 பிட் தேர்ந்தெடுத்த வெளியீடும், குறைந்த இரைச்சல், 60dBக்கும் அதிகமான மாறக்கூடிய அளவு போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

இராணுவம் மற்றும் விண்வெளிக்காக பிரத்யோக கேமரா.!

இந்த இம்பெர்க்ஸ் கேமரா உள்கோட்டு பரிமாற்ற சிசிடி சென்சார்களை பயன்படுத்துகிறது மற்றும் கலர், மோனோக்ரோம், ட்ரூசென்ஸ் ஸ்பார்ஸ் சிஎப்ஏ போன்ற வசதிகளும் உள்ளன.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அனைத்து கேமராக்களும் தொழில்துறை தரத்திலான பாகங்களை பயன்படுத்துவதால்,-40˚C முதல் +85˚C வரையிலான எந்தவொரு வெப்பநிலையையும், >1000G/100G அதிர்வு செயல்திறனை தாங்கக்கூடியதாக உள்ளன. இம்பெர்க்ஸ் உடைய வடிவமைப்பு MIL SPEC 810F என்ற தயாரிப்பும் மற்றும் MTBF of > 660,000 hours @ 40˚C (Telcordia SR-332) என்ற சான்றிதழும் பெற்றுள்ளது.

இம்பெர்க்ஸ் கேமரா

இம்பெர்க்ஸ் கேமரா

மிகக்குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் இது, வடிவமைப்பிலும் சிறியதாக இருப்பதால் குறைந்த அளவு இடமே தேவைப்படும். மேலும் இந்த இம்பெர்க்ஸ் கேமரா சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான லென்ஸ்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

இமேஜ் கண்ட்ரோல் - கண்களால் பார்க்கமுடியாததையும் பார்க்கலாம்

இமேஜ் கண்ட்ரோல் - கண்களால் பார்க்கமுடியாததையும் பார்க்கலாம்

பாப்கேட் 2.0 கேமராவில் 0 முதல் 36dB அனலாக் கண்ட்ரோல், ப்ரீ-அம்ப்ளிபையர் கெய்ன் கண்ட்ரோல், டிஜிட்டல் கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் பிட் ஷிப்ட் போன்ற வசதிகள் உள்ளன. லுக்அப் டேபிள், ப்ரோகிராமபிள் க்னீ கரெக்சன்கள் அல்லது படம் மேம்படுத்துதல்(இமேஜ் என்கேஸ்மென்ட்) போன்றவற்றின் உதவியுடன், பயனர்கள் தங்களின் கண்களால் பார்க்க முடியாதவற்றை கூட பார்க்கமுடியும். இந்த வசதிகளின் மூலம் பயனர்கள் புகைப்படத்தின் அடர்த்தியை மட்டுப்படுத்தல் மற்றும் இரைச்சலின் செயல்திறனை குறைத்தல் போன்றவற்றை செய்ய முடியும். இந்த கேமராவால் நிறங்களை சரிபடுத்துதல், நிகழ்நேரத்தில் தானாக வெள்ளை நிறத்தை சமன்படுத்துதல், டிபெக்டிவ் ,ஹாட் பிக்சல் கரெக்சன் மற்றும் ப்ளேட் பீல்டு கரெக்சன் போன்றவற்றையும் கையாள முடியும்.

ஆட்டோ எக்ஸ்போசர்/கெய்ன்

ஆட்டோ எக்ஸ்போசர்/கெய்ன்

பிரகாசமான சூர்ய ஒளி, தூசி, தண்ணீர், மேகம் போன்றவற்றால் அடிக்கடி மாறிக்கொண்டே ஒளி சூழ்நிலைகள் கேமரா இமேஜில் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு சமன்படுத்த இந்த ஆட்டோமேடிக் கெயின் மற்றும் எக்ஸ்போசர் போன்ற வசதிகள் பயன்படுகின்றன. சுமூகமான மாற்றத்திற்கு வேகமாக வரைபடுத்துடன் சேர்க்க இம்பெர்க்ஸ் வழிவகை செய்கிறது. ஆனால் அதீத துல்லியமான எக்ஸ்போசர்/கெய்ன் கட்டுப்பாடுகள் உள்ளன. பயனர்கள் கேமராவின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எக்ஸ்போசர் வரம்புகளை ப்ரோகிராம் செய்யமுடியும். இதன் மூலம் கேமரா சராசரி அடர்த்தியை நகர்வுகளை கருத்தில் கொள்ளாமல் சரியாக எடுத்துக்கொள்ளும்.

லென்ஸ் கண்ட்ரோல்

லென்ஸ் கண்ட்ரோல்

பாப்கேட் 2.0 கேமராக்கள் பல்வேறுவித லென்ஸ்கள் மற்றும் லென்ஸ் மவுண்ட்களுக்கு(CS, C, T, M42, F, Canon EOS, Rodenstock) ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலிகளுக்கு நிலையான போகஸ், நிலையான ஐரிஸ், ஆட்டோ ஐரிஸ், ஆட்டோ போகஸ், முழு 3 மோட்டார்(போகஸ், ஜூம் மற்றும் ஐரிஸ்) லென்ஸ் போன்றவை தேவைப்படும் நிலையில், இவை அனைத்தையும் இந்த கேமராவே பார்த்துக்கொள்ளும். கேமராவின் பயனர்இடைமுகம் அல்லது எஸ்டிகே மூலம் லென்ஸ்களை கட்டுப்படுத்த முடியும்.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

*8,10,12 அல்லது 14 பிட் தேர்ந்தெடுத்த வெளியீடு

* 1மைக்ரோ செக்கெண்டு ப்ரோகிராமபில் எக்ஸ்போசர்

*ஆட்டோ எக்ஸ்போசர்/கெய்ன்

*7 ப்ரோகிராமபில் விருப்பப் பகுதிகள்

*ஆட்டோ ஐரிஸ்

*ஐரிஸ், போகஸ், ஜூம் மோட்டரைஸ்டு லென்ஸ் கட்டுப்பாடு

*12 பிட் எல்.யூ.டி

*தானாக வெண்மையை சமன்படுத்துதல்

*.MTBF > 660,000 hours @ 40˚C சான்றிதழ்

* 4 உள்ளீடுகள், 2வெளியீடுகள்

*-40˚C to+85˚C வெப்பநிலை

* ஆட்டோடேப் பேலன்ஸ் & பிக்சல் கரெக்சன்

Best Mobiles in India

English summary
Military and Aerospace Cameras: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X