சியோமி அறிமுகப்படுத்தும் மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன்.!
மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் பொறுத்தவரை 2.4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மிகவும் எளிய வடிவவல் உருவாக்கப்பட்ட கேமரா எனக் கூறப்படுகிறது. இதன் எடைப் பொறுத்தவரை 99 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவில் அதிய ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்துவருகிறது சியோமி நிறுவனம், தற்சமயம் அட்டகாசமான கேமரா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த கேமரா மாடல் பெயர் மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் எனக் கூறப்படுகிறது, இந்த மாடல் அதிநவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த அட்டகாசமான மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் கேமரா தறடபோது சீனாவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன்:
மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் பொறுத்தவரை 2.4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மிகவும் எளிய வடிவில் உருவாக்கப்பட்டகேமரா எனக் கூறப்படுகிறது. இதன் எடைப் பொறுத்தவரை 99 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைட் ஆங்கிள் லென்ஸ்:
இந்த மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் கேமராவில் 3.2எம்எம் குவிய நீளம் மற்றும் 145-டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது,
மிகத்துள்ளியமான போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முடியும்.

4கே வீடியோ:
இக்கருவி 4கே போட்டோ மற்றும் வீடியோ தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 1080 வீடியோ பிக்சல் கொண்டவையாகஉள்ளது இந்த மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன் கேமரா.

பேட்டரி:
இந்த கேமரா பேட்டரி பொறுத்தமட்டில் 2மணி நேரம் வரை போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவு செய்யமுடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் 64ஜிபி மெமரி கார்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேமரா.

விலை:
இக்கருவியின் இந்திய விலைமதிப்பு பொறுத்தவரை ரூ.6,700ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications