Home
Scitech

பூமிக்கு மிக அருகே செவ்வாய் கிரகம்: 15 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வு!

smartphone ,Technology, News, India, ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

By Abu Bakker Fakkirmohamed

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு ஜீலை 31, 2018 அன்று இரவு நிகழ்ந்தது. செவ்வாய் கிரகம் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் இருபுறமும் இருக்க, நடுவே பூமி தன் சுற்று வட்டப் பாதையில் சுழன்றது. அப்பொழுது, செவ்வாய் கிரகம், பூமி, சூரியன் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருந்தன. செவ்வாய் கிரகமும் பூமியும் நெருக்கமாக இருந்தாலும் இவை இரண்டுக்கும் இடையேயான தூரம் 57.6 மில்லியன் கி.மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு மிக அருகே செவ்வாய் கிரகம்:  அபூர்வ நிகழ்வு!

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இதுதான் மிக நெருக்கமான தூரமாக இருக்கும். பூமியிலிருந்து, செவ்வாய் கிரகத்தை இது போன்று தெளிவாக 15 அல்லது 17 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பார்க்க இயலும். ஜீலை 27 ஆம் தேதி சந்திர கிரகணத்தைப் பார்த்தவர்கள் வானத்தில் செவ்வாய் கிரகத்தையும் சேர்த்துப் பார்த்திருக்க முடியும். சந்திரனுக்குக் கீழாக செவ்வாய் கிரகத்தை அப்பொழுது கண்டிருக்கலாம். செவ்வாய் கிரகத்தை செப்டம்பர் மாதம் வரைப் பார்க்க முடியும். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையேயான தூரம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தற்போதைய நெருக்கமான துரத்தில் நிலைத்து நிற்காது.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அருகில் வந்த செவ்வாய் கிரகம்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அருகில் வந்த செவ்வாய் கிரகம்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக செவ்வாய் கிரகம் வருவது நம்முடைய தலைமுறைக்கு ஆச்சரியமான நிகழ்வுதான். இருந்தாலும், 2003 ஆம் ஆண்டு இது போன்று நெருக்கமாக வந்தபோது செவ்வாய் கிரகம் தற்போது தெரிந்ததைக் காட்டிலும் மிகவும் பெரியதாகத் தோற்றம் அளித்தது என்பது குறிப்பிடத் தக்கது. அப்பொழுது செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் 56 மில்லியன் கி.மீட்டராக இருந்தது. கடந்த 60,000 ஆண்டுகளில் இது போன்று நிகழ்ந்ததில்லை. மீண்டும் இது போன்ற நிகழ்வைக் காண வேண்டும் என்றால் 2287 ஆம் ஆண்டு வரைக் காத்திருக்க வேண்டும் என நாசா மதிப்பிட்டுள்ளது.

இது நிகழக் காரணம் என்ன?

இது நிகழக் காரணம் என்ன?

மற்ற கோள்களைப் போலவே பூமியும், செவ்வாய் கிரகமும் நீள் வட்டப் பாதையில் சுழல்கின்றன. செவ்வாய் தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு அருகே வரும் பொழுது அதன் எதிரே பூமியும் நெருக்கமாக வரும் நிலை அமைகிறது. இந்த நிலை, 2018 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27 ஆம் தேதி நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது அமைந்தது. செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே வருவதால் அதனுடைய தோற்றம் மிகப் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று சொல்ல முடியாது. உண்மையில், ஜீலை 27 ஆம் தேதிக்கும் ஜீலை 30 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்தான் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இந்தியாவில் தெரிந்த காட்சி

இந்தியாவில் தெரிந்த காட்சி

உலகத்தின் தெற்குப் பகுதியில் இருந்து பார்த்தவர்கள், பூமிக்கு நெருக்கமாக செவ்வாய் கிரகம் இருந்தததைத் தெளிவாகப் பார்த்தனர். இந்தியாவில் இருந்து பார்த்தவர்களுக்கு அந்த அளவுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தோருக்கு தெளிவான காட்சி கிடைத்தது. இருந்தாலும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து பார்த்தவர்களும் செவ்வாய் கிரகத்தை ஓரளவுக்குத் தெளிவாகப் பார்த்து ரசித்துள்ளனர். 6 இன்ஞ் முதல் 8 இன்ஞ் வரையிலான அளவு கொண்ட லென்ஸ் பொருத்தப்பட்ட தொலை நோக்கியின் மூலமாகத்தான் இதனைக் காண முடிந்தது.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

யூடியூப் வீடியோ இணைய தளத்தில் பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் தோன்றிய காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாசா நிறுவனத்தின் கிரிஃபித் வானியல் ஆய்வு மையத்தில் (Griffith Observatory) இருந்தும் இக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரகாசமாய்த் தெரியும் செவ்வாய் கிரகம்

பிரகாசமாய்த் தெரியும் செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே வரும் நிகழ்வு மிக நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தாலும், சூரிய மறைவுக்குப் பிறகும் சூரிய உதயத்திற்கு முன்னருமான நேரத்தில் பார்க்கும் பொழுதுதான் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். இரவு நேரத்தில் ஜீபிடர் கிரகத்தைவிடப் பிரகாசமாக செவ்வாய் கிரகம் வானில் காட்சியளிக்கும்.

Best Mobiles in India

English summary
Mars Closest to Earth in 15 Years Today Where How to Watch Live in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X