Home
Camera

ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: LG கொண்டுவந்தது புத்தம் புதிய சாதனம்.!

எல்ஜி நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக எல்ஜி நிறுவனம் சற்று உயர்வான விலையில் சாதனங்களை அறிமுகம் செய்தாலும் அதற்குத் தகுந்த தரமான அம்சங்கள் அந்த சாதனங்களில் இருக்கும். இந்நிலையில் எல்ஜி நிறுவனம் ஒரு கேமராவை அறிமுகம் சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது எல்ஜி ஸ்மார்ட் கேம் 1080P (LG Smart Cam 1080p) எனும் ஸ்மார்ட் டிவிகளுக்கான கேமராவை தான் அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளுக்கான கேமரா ஆனது குறைவான எடையுடன் தரமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த எல்ஜி ஸ்மார்ட் கேம் 1080P அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு குட் நியூஸ்: எல்ஜி ஸ்மார்ட் கேம் அறிமுகம்!

அதாவது எல்ஜி ஸ்மார்ட் கேம் 1080P ஆனது ஃபுல் எச்டி வீடியோ கேமரா என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட் கேம் எல்ஜி-இன் webOS-இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் கேம் எல்ஜி ஸ்மார்ட் டிவி பயன்பாட்டை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த கேமராவின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் வீடியோ அழைப்புகளுக்கும் தகுந்தபடி அனைத்து சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் கேமரா. பின்பு 1080 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேமரா. மேலும் டூயல் மைக்ரோஃபோன்கள் மற்றும் மல்டி-வியூ செயல்பாட்டை வழங்குகிறது இந்த அட்டகாசமான எல்ஜி ஸ்மார்ட் கேம் 1080P மாடல்.

ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு குட் நியூஸ்: எல்ஜி ஸ்மார்ட் கேம் அறிமுகம்!

பிரைவசி ஸ்லைடர், யுஎஸ்பி 2.0 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கான கேமரா வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த கேமராவுக்கு 1 வருடத்திற்கான வாரண்டி உள்ளது. அதேபோல் ஃபன் மிரர் ஆபர் பில்டர், போட்டோ எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த கேமராவில் உள்ளன.

குறிப்பாக ஆன்லைன் மீட்டிங், வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த எல்ஜி கேமரா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்ஜி ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட் கேம் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜி நிறுவனத்தின் webOS 22 மற்றும் webOS 23 மூலம் இயங்கும் டிவிகளில் இந்த ஸ்மார்ட் கேமராவைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி ஸ்மார்ட் கேம் (VC23GA) கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த எல்ஜி ஸ்மார்ட் கேம் 1080P விலை USD 99.99 (இந்திய மதிப்பில் ரூ.8.190) ஆக உள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த எல்ஜி ஸ்மார்ட் கேம் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும். மேலும் எல்ஜி நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு புதிய அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டரை அறிமுகம் செய்தது.

ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு குட் நியூஸ்: எல்ஜி ஸ்மார்ட் கேம் அறிமுகம்!

அதாவது மற்ற மாணிட்டர்களை போன்றே அகலமாக இல்லாமல், உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது எல்ஜி நிறுவனத்தின் புதிய மானிட்டர். பின்பு இந்த புதிய எல்ஜி மானிட்டர் 28MQ750 என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் இதன் ஸ்கிரீன் அளவு 27.6 இன்ச் அளவில் உள்ளது. இதில் எல்ஜி நானோ IPS பேனல் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர 2560x2880 பிக்சல், அகலமான வைடு கலர் கமுட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டர். மேலும் இதில் இன்-பில்ட் டூயல் 7 வாட் ஹை பவர் ஸ்பீக்கர்கள் உள்ளன. பின்பு இதில் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக எல்ஜி டூயல் அப் மானிட்டர் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.49096-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG Smart Cam 1080P camera launched for smart TVs: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X