உயர்ரக கேமராக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய லீக்கா.!
அமேசானில் விற்கப்படும் மிக விலையுயர்ந்த லீக்கா கேமராவான வி-லக்ஸ், 25-400mm டெலிபோட்டோ லென்ஸ் போல 16 மடங்கு (16X) ஜூம் செய்யும் வசதி கொண்டது.
கேமரா மற்றும் லென்சுகளை தயாரிக்கும் ஜெர்மன் நிறுவனமான லீக்கா, அமேசான் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 3 அதிநவீன கேமராக்களை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. சோபோர்ட், டி-லக்ஸ், வி-லக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள கேமராக்கள், பலவித கேமரா மற்றும் பைனாக்குலர்களை விற்கும் அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கும்.

எளிதில் வாங்கக்கூடிய வகையில் உள்ள போலராய்டு வகை கேமராவான அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே படம்பிடிக்க சோபோர்ட் , ஆட்டோமேடிக், செல்ப் டைமர், பார்ட்டி,மேக்ரோ மற்றும் பல்ப் என பல்வேறு மோட்களை(Mode) கொண்டுள்ளது. 10 பிலிம்கள் உள்ள கேட்ரிஜ் கொண்ட இந்த கேமரா, சதுர பெட்டி வடிவில் இருப்பதால் மற்ற லீக்கா தயாரிப்புகளில் இருந்து தனித்து இருக்கிறது. இந்தியாவில் லீக்கா சோபோர்ட் வகை கேமராக்களின் விலை ரூ. 25,000 ஆக இருக்கும்.
ரூ.85,000 க்கு விற்கப்படும் லீக்கா சோபோர்ட் கேமரா, அதன் விலைக்கு ஏற்றவாறு 12.8 மெகாபிக்சல் திறனுடன், உட்பகுதி முழுவதும் உலோகத்தாலும், பின்புறத்தில் எல்.சி.டி திரையையும் கொண்டுள்ளது. 4/3 இன்ச் DC-Vario Summilix லென்ஸ் மூலம் எளிதில் f/1.7 - f/2.8 தொலைவிற்கு துல்லியமாக படம்பிடிக்கலாம்.

அமேசானில் விற்கப்படும் மிக விலையுயர்ந்த லீக்கா கேமராவான வி-லக்ஸ், 25-400mm டெலிபோட்டோ லென்ஸ் போல 16 மடங்கு (16X) ஜூம் செய்யும் வசதி கொண்டது. 1 இன்ச் சென்சாரின் உதவியோடு, 4K வீடியோக்கள் வரை பதிவு செய்யும் வசதி கொண்டது.

தொலைதூர புகைப்படம் (Telephoto) எடுப்பதற்கு வசதியாக f4 -f2.8 தொலைவு வரை படம்பிடிக்கும் வசதி கொண்டது. பல்வேறு கோணங்களில் திருப்பும் வசதி கொண்ட 3இன்ச் எல்.சி.டி திரையை இதில் லீக்கா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்தியாவில் லீக்கா வி-லக்ஸ் கேமராவின் விலை ரூ.90000 ஆக இருக்கும்.
லீக்கா நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதியின் எம்.டி சுனில் கவுல் கூறுகையில், இந்தியாவில் புகைப்படத்துறை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், இந்த பிராண்டின் மூலம் வாடிக்கையாளர்களை இணைத்து, புதியதோர் சமூகத்தை உருவாக்குகிறோம் என்கிறார்.


அமேசான் இந்தியாவுடன் கூட்டு வைத்ததன் மூலம் இணையத்தில் வலுவாவது மட்டுமில்லாமல், நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் அணுக இயலும் என்கிறார். அமேசான் இந்தியாவின் நுகர்வோர் மிண்ணனு பொருட்கள் பிரிவின் தலைவர் நதீம் கர்பாரி கூறுகையில், கையால் தயாரிக்கப்பட்ட கேமாராக்களால் உலக புகைப்பட துறையில் முடிசூடா மன்னனாக இருக்கிறது லீக்கா. இந்தியாவில் லீக்கா கேமராக்களை விற்க அமேசானை தேர்வு செய்ததற்கு மிகவும் பெருமைபடுகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications