Home
Camera

நவீன தொழில்நுட்பத்துடன் ஓர் புதிய கேமரா!

By Karthikeyan
நவீன தொழில்நுட்பத்துடன் ஓர் புதிய கேமரா!

வரும் மே 10 மற்றும் 11 ஆகிய நாள்களில் பெர்லினில் நடைபெறும் கேமரா கண்காட்சிக்கு லெயிக்கா நிறுவனம் தனது புதிய நவீன கேமராவோடு தயாரக இருக்கிறது. அந்த கண்காட்சியில் லெயிக்கா எம்10 என்ற புதிய கேமராவை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஏற்கனவே வந்த லெயிக்கா எம்9 கேமரா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோல் இந்த புதிய எம்10 கேமராவைப் பற்றிய எதிர்பார்ப்பு நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இப்போது இந்த எம்10 கேமரா வரும் மே 10ல் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த எம் 10 கேமராவைப் பற்றிய அதிக தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும் இந்த கேமரா முந்தைய எம் 9 கேமராவின் மேம்படுத்தப்பட்ட கேமராவாக வரும் என்று தெரிகிறது. இந்த எம் 9 கேமரா உலகிலேயே மிகச் சிறிய கேமரா ஆகும்.

மேலும் இது ஒரு முழுமையான ப்ரேம் இன்டர் சேன்ஜபுள் லென்ஸ் கேமரா ஆகும். இந்த கேமராவில் 18 மெகா பிக்சல் சிசிடி சென்சார் உள்ளதால் இது எடுக்கும் படங்கள் மிகத் துல்லியமாக அதே நேரத்தில் மிகத் தெளிவாக இருக்கும். ஆனால் வரும் புதிய எம் 10 கேமரா இதைவிட மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இணையதளங்களில் இந்த புதிய எம் 10 கேமராவின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த கேமரா மிகவும் எளிமையாக அதே நேரத்தில் சூப்பராக உள்ளது. இதன் முன்பகுதியில் ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது.

லெயிக்கா எம் 10 கேமராவின் விலை இன்னும் தெரியவில்லை. ஆனால் எம் 9 கேமராவீன் விலை ரூ.400000 ஆகும். இந்த விலையைவிட எம் 10ன் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. வரும் மே 10ல் இந்த கேமராவைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X