கோடாக் 50-inch 4KUHDX ஸ்மார்ட் டி.வி. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா?

போட்டிகள் அதிகம் உள்ள டெலிவிஷன் தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடாக் நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது.

|

கோடாக் நிறுவனம் அனைவரும் அறிந்த பெயராக இருந்தாலும், டெலிவிஷன் தயாரிப்பில் சமீபத்தில்தான் கால் பதித்துள்ளது. போட்டிகள் அதிகம் உள்ள டெலிவிஷன் தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடாக் நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்புத் துறையில் தற்போது புதியதாக நுழைந்துள்ள Xiaomi நிறுவனத்தால் போட்டியும் கடுமையாகி உள்ளது. கோடாக் நிறுவனத்தின் புதிய வெளியீடான 50 இன்ஞ் 4KUHDX ஸ்மார்ட் டிவியின் சிறப்பு அம்சங்களை இங்கு பார்ப்போம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

மாறுபட்ட வடிவமைப்பு இல்லாவிட்டால் அனைத்து டிவிகளும் பார்வைக்கு ஒரே மாதிரியதகத்தான் இருக்கும். உற்றுக் கவனித்தால் சில வேறுபாடுகளைக் காணலாம். கோடாக் ஸ்மார்ட் டி.வி. மற்ற டி.வி.க்களைப் பேலத்தான் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றிலும் சற்றுத் தடினமான கருப்பு நிறப் பேனலைக் கொண்டுள்ளது. ரிமோட் பயன்பாட்டுக்கான சென்சார் டி.வி.யின் அடிப்பாகத்தில் வலது புறமாக உள்ளது. பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு ஏற்பப் பல நுழைவுப் பகுதிகளை (Ports) இந்த டி.வி.யில் உள்ளன.

மூன்று HDMI போர்ட்டுகள், இரண்டு USB போர்ட்டுகள், SD கார்டுகளுக்கான ஸ்லாட்டுடன் சேர்த்து இரண்டு AV IN ஸ்லாட்டுகள் உள்ளன. 3.5 மி.மீ. ஹெட்போன் ஜாக் ஒன்றும் உள்ளது. அனைத்துப் போர்ட்டுகளும் பின் பகுதியில் அமைந்துள்ளன. பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எளிதாக எட்டும் வகையில் அமைந்துள்ளன.

திரைப்பகுதி

திரைப்பகுதி

50 அங்குல அளவு கொண்ட இந்த எல்.இ.டி. டி.வி. 3840x2160 பிக்சல் அளவுக்குப் படங்களைத் தெளிவாகக் காட்டும். 500-nits அளவுக்குக் காட்சிகள் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரியும் வகையில் டி.வி.யின் திரைப்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

4000 பிக்சல்கள் கொண்ட (4K) இந்த ஸ்மார்ட் டி.வி.யில் வழக்கமான HD டி.வி.யைக் காட்டிலும் தெளிவான காட்சிகளுக்கு உத்திரவாதம் உள்ளது. யூ டியூப் வீடியோக்கள் மற்றும் பிற வீடியோக்களை HD மற்றும் UHD வடிவத்தில் பார்க்கும் பொழுது அவை திரையில் வெளிப்படுவதற்கு ஏற்ப ஏதேனும் சிறு குறைபாடுகளை உணரலாம்.

செயல்திறன்

செயல்திறன்

Kodak UHDX ஸ்மார்ட் டி.வி். Mali-T720 GPU உடன் 1.4GHz திறன் கொண்ட டுயல்-கோர் பிராசசரைக் கொண்டுள்ளது. 1GB RAM உடன் 8GB அளவுக்கு அகச் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 5.1.1. வெர்சனில் இந்த டி.வி. இயங்கக் கூடியது. Gmail, YouTube, Facebook போன்ற பல பயன்பாட்டுச் செயலிகள் இந்த டி.வி.யுடன் இணைந்திருக்கும். WMA, WMV, ASF, MP4, MPG, MPEG, VRO, VOB, FLV, MP2, மற்றும் MP3 போன்ற பல வகையான ஆடியோ வடிவங்களையும் இயக்கக் கூடிய வகையில் இந்த டி.வி. வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ரிமோட்டின் மூலமாக மிக விரைவாக, வேண்டிய பகுதிகளை இயக்கிக் கொள்ளும் வகையில் சிறப்புப் பட்டன்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உதராணமாக, YouTube மற்றும் Netflix-க்காகத் தனிப் பட்டன்கள் உள்ளன.

ஆன்ட்ராய்டு

ஆன்ட்ராய்டு

ஆன்ட்ராய்டு டி.வி.க்களில் பயன்பாட்டாளர்களின் விருப்பத்துக்கு ஏற்பப் பல அப்ளிகேசன்களை நிறுவிக் கொள்ளலாம் என்றாலும் ஆன்ட்ராய்டு டி.வி.க்களில் முன்கூட்டியே பல அப்ளிசேன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பயனாளர் இடைமுகத்தைப் (UI) பயன்படுத்திச் செயல்பாடுகளைக் கொண்டு வர வாடிக்கையாளருக்கு சில காலம் தேவைப்படும் என்றாலும் பழக்கத்துக்கு வந்துவிட்டால் எளிமையாகத் தோன்றும். பெரும்பாலான அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த டி.வி.யில் உள்ள 8GB அளவு மட்டுமே உள்ள அகச் சேமிப்பகம் போதுமானதாக இருக்காது.


இந்த டி.வி.யில் இரண்டு 10W ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் பிரமாதமாக இல்லாவிட்டாலும் சராசரிக்கு சற்று மேலானதாகவே உள்ளது. பொதுவாக அனைத்துவிதமான ஒலிகளையும் இந்த டி.வி. சிறப்பாக வெளிப்படுத்தினாலும் மெல்லிய ஒலிகளை (bass) வெளிப்படுத்துவதில் இதனுடைய திறன் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

 நிறைவாக

நிறைவாக

34,990 ரூபாய் விலையிலான ஸ்மார்ட் டி.வி.யை மிக அதிகமான எதிர்பார்ப்புகளுடன் எதிர் நோக்கக் கூடாது. டி.வி.யின் வடிவமைப்பு நன்றாக உள்ளது. திரைப் பகுதி நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. வண்ணங்களைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. எல்லா வகையான காட்சிகளையும் நன்றாக வெளிப்படுத்துகிறது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த டி.வி.யில் ஆடியோ செயல்பாடு இன்னும் மேம்படுத்தப்பட்டு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். டி.வி.பிராண்டுகளைப் பற்றி அதிகம் அக்கரையில்லை என்றால் இந்த டி.வி. நிச்சயம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஒரு ஸ்மார்ட் டி.வி.யை வாங்குவோர் என்னென்ன எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்களோ அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்ந டி.வி. உள்ளது.

Best Mobiles in India

English summary
Kodak 50 inch 4KUHDXSMART review Meets the expectations: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X