உங்கள் மொபைலில் ஜியோ டியூனை காலர் டியூனாக அமைப்பது எப்படி?

|

பாலிவுட், பிராந்திய, சர்வதேச, மற்றும் பக்தி போன்ற வகைகளில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களின் காலர் டியூன் வழங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ புகழ் பெற்றது என்பது ரிலையன்ஸ் பயனர்கள் அறிந்ததே. பயனர்களுக்கு இந்த காலர் ட்யூன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இனிமேல் நீங்கள் உங்கள் காலர் ட்யூன்களை இடையில் மாற்ற எந்த செலவும் செய்ய தேவையில்லை. உங்கள் மனநிலைக்கு ஏற்ப அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கொண்டாட நீங்கள் ஒரு ஜியோ அழைப்பாளராக இருந்த உங்களுக்கு விருப்பமான பாடலை காலர் டியூனாக பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் இணைப்பில் ஜியோ காலர் ட்யூனை அமைக்க டெல்கோ பல தனித்துவமான வழிகளை வழங்குகிறது. மேலும், ஒரு பயனரிடமிருந்து ஜியோ காலர் ட்யூனை காப்பி செய்வதும் எளிதாக உள்ளது.

ஜியோ காலர் ட்யூனை எளிதாக பயன்படுத்தக்கூடிய  முறைகள்

ஜியோ காலர் ட்யூனை எளிதாக பயன்படுத்தக்கூடிய முறைகள்

இந்த கட்டுரையில், உங்கள் இணைப்பில் ஜியோ காலர் ட்யூனை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கிடைக்கக்கூடிய அனைத்து முறைகளையும் பார்ப்போம்.

மைஜியோ செயலியை பயன்படுத்தி ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு அமைப்பது?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ செயலியை பயன்படுத்தி நேரடியாக உங்கள் இணைப்பில் ஜியோ டியூன் அல்லது ஜியோ காலர் ட்யூனை தேர்வு செய்யலாம். மைஜியோ செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்களில் பதிவிறக்குவதற்கு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு செய்ய சுமார் 28 எம்பி தேவைப்படும். அதேசமயம் ஐ.ஓஎஸ் என்னும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக 225 எம்பிக்கும் அதிகமான அளவில் கிடைக்கிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு 5.0 லால்லிபாப் அல்லது ஐஓஎஸ் 10.0 இயங்கும் சாதனங்களில் மட்டுமே டவுன்லோடு செய்ய முடியும். மைஜியோ செயலியின் சமீபத்திய பதிப்பை நீங்கள் டவுன்லோடு செய்தவுடன், அழைப்பாளர் இசைக்கு அமைக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்.

பிடித்த ஜியோ டியூனைத் தேடவும்

பிடித்த ஜியோ டியூனைத் தேடவும்

1. மைஜியோ பயன்பாட்டின் மேல் இடது மூலையில் இருந்து ஹாம்பர்கர் ஐகானை அழுத்துவதன் மூலம் விருப்பமான ஜியோ டியூன்களை தேர்வு செய்து பின்னர் பாடல்களை தேர்வு செய்யவும். உங்களுக்கு பிடித்த ஜியோ டியூனைத் தேடி அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். தேர்வு செய்த பாடல் எந்த வகையாகவும் இருக்கலாம்.

இப்போது, முன்னோட்டத்தைக் கேட்க பாடலின் ஆல்பம் என்ற ஆப்சனுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள பிளே பட்டனை க்ளிக் செய்யவும். தேர்ந்தெடுத்த ஜியோடியூன் பட்டனை ஓகே என தட்டவும் மைஜியோ செயலியில் உறுதிப்படுத்தல் திரை மூலம் உங்கள் இணைப்புக்கு அமைக்கப்பட்டவுடன் அழைப்பாளர் பாடலாக நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் குறித்து ஜியோ உங்களுக்கு அறிவிக்கும். அழைப்பாளர் டியூன் சேவையின் செயல்பாட்டை உறுதி செய்யும். இதனை ஒரு எஸ்எம்எஸ் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஜியோசாவ்ன் செயலியை பயன்படுத்தி ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு அமைப்பது?

ஜியோசாவ்ன் செயலியை பயன்படுத்தி ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு அமைப்பது?

நீங்கள் மைஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஜியோ டியூனை அமைக்க ஆர்வமாக இருந்தால் உங்களுக்கு பிடித்த பாடல்களில் ஒன்றை தேர்வு செய்து ஜியோசாவ்ன் செயலியை கொண்டும் அமைக்கலாம். ஜியோசாவ்ன் செயலியும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. நீங்கள் அதை கூகுள் ப்ளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை டவுன்லோடு செய்ய குறைந்தது ஆண்ட்ராய்டு லால்லிபாப் அல்லது ஐஈஎஸ் 10.0 இயங்கும் சாதனங்கள் தேவை. சமீபத்திய ஜியோசாவ்ன் செயலியை பதிவிறக்கிய பிறகு, நீங்கள் உங்கள் ஜியோசாவ்ன் கணக்கில் உள்நுழைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.

1. நீங்கள் காலர் டியூனாக பாடலாக அமைக்க விரும்பும் ஜியோ சாவ்ன் பயன்பாட்டில் உங்களுக்கு பிடித்த பாடலைத் தேடுங்கள், பின்னர் அந்தப் பாடலை இயக்கவும். அந்தப் பாடலை திரையின் முன் கொண்டு வர கீழ் பட்டியில் இருந்து தட்டவும். இப்போது, நீங்கள் தேர்வு செய்த ஆல்பம் மற்றும் பாடல் தலைப்புக்குக் கீழே கிடைக்கும் செட் ஜியோ டியூன் பட்டனை அழுத்தி பின்னர் உங்கள் அழைப்பாளர் இசைக்கு முன்னோட்டம் கேட்கக்கூடிய இடத்திலிருந்து பாப்அப் திரையைப் பெறுவீர்கள். இப்போது, செட் ஜியோ டியூன் பொத்தானை அழுத்தவும். ஒரு விருப்பமான ஜியோ டியூன் செயல்படுத்தப்பட்டதும் ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி உங்கள் எண்ணை அடையும். நீங்கள் தேர்வு செய்த பாடலை செயலிழக்கச் செய்வதற்கான விவரங்களும் செய்தியில் இருக்கும்.

எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு அமைப்பது?

எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு அமைப்பது?

மைஜியோ அல்லது ஜியோசாவ்ன் பயன்பாடுகள் இல்லாத பயனர்களுக்கு, ஜியோ அழைப்பாளரை அமைக்க விருப்பம் உள்ளது என்றால் எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்புவதன் மூலம் காலர் டியூனை தேர்வு செய்யலாம்

1. கிடைக்கக்கூடிய ஜியோ டியூன்ஸ் அல்லது ஜியோ காலர் ட்யூன்களின் பட்டியலை ஆராய்ந்து, 56789 க்கு "ஜே.டி" (மேற்கோள்கள் இல்லாமல்) என்று எஸ்.எம்.எஸ் அனுப்பவும். நீங்கள் அனுப்பும் எஸ்எம்எஸ் செய்திக்கு "மூவி" (திரைப்படத்தின் பெயர்) மூலம் பதிலளிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைத் தேடலாம். அல்லது "ஆல்பம்" (ஆல்பத்தின் பெயர்) அல்லது ஒரு பாடகருடன் "சிங்கர்" (பாடகர் பெயர்) என்று பதிலளிப்பதன் மூலம் ஆல்பத்தைத் தேடலாம்.

ஒருமுறை அழைப்பாளர் இசைக்கு உங்களுக்கு பிடித்த பாடலைக் கண்டுபிடிக்க முடியும், எல்லா அழைப்பாளர்களுக்கும் அல்லது ஏதேனும் சிறப்பு எண்களுக்கும் இதை அமைக்க விரும்புகிறீர்களா என்பதை தேர்வு செய்ய ஜியோ உங்களிடம் கேட்கும்.

“Y” என பதிலளிக்க வேண்டும்

“Y” என பதிலளிக்க வேண்டும்

இப்போது, உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் செய்தி வரும், இது ஜியோ டியூன்ஸ் சேவையை செயல்படுத்த உங்கள் ஒப்புதல் தேவைப்படும். செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள அந்த செய்திக்கு "Y" என பதிலளிக்க வேண்டும். செயல்படுத்தும் செயல்முறையை நிறைவேற்ற உங்கள் பதில் செய்தியின் 30 நிமிடங்களுக்குள் ஜியோவை அடைய வேண்டும்.

அழைப்பாளர் டியூன் செயல்பாட்டை உறுதிப்படுத்த ஜியோ உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பும். எந்த நேரத்திலும், 56789 க்கு "STOP" என்ற உரையுடன் ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அனுப்புவதன் மூலம் உங்கள் ஜியோ காலர் ட்யூனை செயலிழக்கச் செய்ய முடியும்.

ஒரு ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு நகலெடுப்பது?

ஒரு ஜியோ காலர் ட்யூனை எவ்வாறு நகலெடுப்பது?

நீங்கள் ஒரு அழைப்பாளரின் காலர் டியூனை நகலெடுக்க விரும்பினால் உங்கள் ஜியோ தொடர்புகளில் ஒன்றிலிருந்து இசைக்கு, அந்த தொடர்பை டயல் செய்யும் போது "*" (நட்சத்திரக் குறியீடு) அழுத்த வேண்டும். உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் செய்தி வரும், உங்கள் ஒப்புதல் தேவைப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ அழைப்பாளர் பாடலை செயல்படுத்த அந்த செய்திக்கு "Y" என்று பதிலளிக்க வேண்டும். செயல்படுத்தலை உறுதிப்படுத்த ஜியோ உங்களுக்கு மற்றொரு எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பும். அதன்பின்னர் ஜியோ தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காலர் டியூன் இசையை வழங்கி வருகிறது. உங்களுடைய தற்போதைய ஜியோ அழைப்பாளர் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக மாற்றலாம். மேலும், அழைப்பாளர் காலர் டியூனை பொதுவான அழைப்பாக புதிய அழைப்புகளில் மட்டுமே செயல்படும். இதன் பொருள், நீங்கள் ஏற்கனவே அழைப்பில் இருக்கும்போது அழைப்பாளர் உங்கள் எண்ணை டயல் செய்வது உங்கள் செயல்படுத்தப்பட்ட அழைப்பாளர் இசைக்கு பதிலாக இயல்புநிலை அழைப்பு காத்திருப்பு செய்தியைக் கேட்கும்.

மேலும், காலர் டியூன் சேவை சாதனம் ஜியோ நெட்வொர்க்கை ஆதரிக்கும் அனைத்து கைபேசிகளிலும் வேலை செய்ய முடியும். ஜியோவைப் போலவே, ஏர்டெல் நிறுவனமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச காலர் ட்யூன்களை வழங்கத் தொடங்கியது. 15 மொழிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும். இது ஜியோவில் கிடைப்பதை விட கணிசமாக அளவாகும். ஏர்டெல் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் உள்ள விங்க் மியூசிக் பயன்பாட்டைப் பயன்படுத்தி தங்கள் எண்ணில் அழைப்பாளர் ட்யூனை அமைக்கலாம். மாற்றாக, பயனர்கள் 5432111 க்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் இருவரும் 30 நாட்கள் செல்லுபடியாகும் அழைப்பாளர் காலர் டியூனை வழங்குகின்றன என்பதை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும், பயனர்கள் முதல் 30 நாட்களை முடித்தவுடன் செல்லுபடியை நீட்டிக்க முடியும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Caller Tune: How to Set JioTunes on Your Number

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more