கேலக்ஸி எஸ் கேமராவின் கான்செப்ட் மாடல்!

சாம்சங் வழங்க இருக்கும் இந்த கேமரா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்பம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த புதிய கேமரா 4.8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும்.
ஆனால் இந்த கேமரா கிட்டத்தட்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தினையும், வடிவமைப்பினையும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இந்த கேமரா ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்டு இயங்கும்.
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் இந்த கேமரா, 16 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் என்று கருதப்படுகிறது. இதில் மேலும் இரண்டு விதமான மாடல்களையும் பெறலாம்.
வைபை மற்றும் 3ஜி + வைபை என்று 2 விதமான மாடல்களையும் உருவாக்க உள்ளது. 3ஜி + வைபை வசதியினை கொண்டிருக்கும் கேமரா மாடலில், வாய்ஸ் வசதி இருக்காது என்று கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இந்த கேமராவின் அறிமுகம் பற்றி விவரமான தகவல்களை பெறலாம்.


Click it and Unblock the Notifications