ககன்யான் திட்டம்! இரஷ்ய பயிற்சி மையத்தில் இந்திய விண்வெளிவீரர்கள்..

|

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்தை நோக்கி பணியாற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அறிவித்துள்ளது. ககன்யான் என்று இந்நிறுவனத்தால் அழைக்கப்படும் இத்திட்டம், 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இரஷ்ய விண்வெளி அதிகாரி

மூத்த இரஷ்ய விண்வெளி அதிகாரி

மூத்த இரஷ்ய விண்வெளி அதிகாரி இதுகுறித்து கூறுகையில், இப்பயிற்சி அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்றார். இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்துள்ளார். மூன்று விண்வெளி வீரர்கள் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என்று கூறப்படும் நிலையில், இந்த மூவரும் இந்திய இராணுவ படைகளில் சோதனை விமானிகளிடையே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா உதவும்

இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா உதவும்

ககன்யான் திட்டத்திற்காக இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா உதவும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

கிளாப்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி லோஸ்குடோவ், துபாய் ஏர்ஷோ 2019 இல் டாஸ் செய்தி நிறுவனத்துடன் உரையாடியபோது, ​​"விண்வெளி பயிற்சி மையத்தில் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி, அடுத்த ஆண்டு தொடங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும்பாலும் ஆரோக்கிய அளவீடுகள் மற்றும் இந்திய தரப்பினரின் தேர்வு மற்றும் அவர்கள் இறுதியாக யாரைத் தேர்ந்தெடுத்து பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்புவது என்பதற்கான காலக்கெடு ஆகிய முடிவுகளைப் பொறுத்தது" என தெரிவித்தார்.

கிளாவ்கோஸ்மோஸ் மற்றும் இஸ்ரோ

கிளாவ்கோஸ்மோஸ் மற்றும் இஸ்ரோ

கிளாவ்கோஸ்மோஸ் மற்றும் இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக ஜூலை 1 ம் தேதி ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் பயிற்சியில் உதவும் என்று கூறப்படுகிறது.

காஸ்மோனாட் பயிற்சி மையம்

காஸ்மோனாட் பயிற்சி மையம்

காஸ்மோனாட் பயிற்சி மையத்தை சேர்ந்த வல்லுநர்கள், வரும் இலையுதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்களின் முதல் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆகஸ்ட் 22 அன்று ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் அறிவித்துள்ளார்.

ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை

ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை

ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதரான ரஷ்ய விண்வெளி வீரர் யூரி அலெக்ஸீவிச் ககாரின் பெயரில் இயங்குகிறது . சரியான பயிற்சி, விண்வெளி ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் விண்வெளியில் பாதுகாப்பு போன்றவற்றை இந்த விண்வெளி மையம் உறுதிசெய்கிறது. ​​தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் ரஷ்ய நிபுணர்களுடன் தங்கள் பயிற்சியை எப்போது தொடங்குவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
ISRO (Indian Space Research Organisation) has announced that it is working towards India's first manned space mission.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X