ஐபோனை கைகளால் தொடமாலேயே பயன்படுத்துவது எப்படி?

|

ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது சமயங்களில் அதனை குரல் மூலம் இயக்க பலருக்கும் ஆவல் அதிகமாக இருக்கும். தற்சமயம் ஸ்மார்ட்போன்களை குரல் மூலமாக இயக்க அதில் உள்ள சிரி ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தில் புதிதாக வாய்ஸ் கண்ட்ரோல் அம்சம் ஒன்றை சேர்த்து இருக்கிறது. இதனை கொண்டு ஐபோனின் பெரும்பாலான அம்சங்களை ஐபோனை தொடாமலேயே இயக்க முடியும்.

இந்த அம்சம் உண்மையில் மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது பலருக்கும் சில சமயங்களில் உப.யோகமான ஒன்றாக இருக்கும். உண்மையில் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போனினை தொடாமலேயே அதன் அம்சங்களை இயக்க வழி செய்யும் அம்சம் ஆகும்.

எவ்வாறு இயக்க வேண்டும்

எவ்வாறு இயக்க வேண்டும்

வாய்ஸ் கண்ட்ரோல்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்றும், இதனை எவ்வாறு சிறப்பாக இயக்க முடியும் என தொடர்ந்து பார்ப்போம்.

இந்த அம்சத்தை முழுமையாக பயன்படுத்த ஐபோனில் ஐ.ஒ.எஸ். 13 அல்லது அதன் பின் வெளியான இயங்குதளம் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும் சீரான இணை இணைப்பும் அவசியம் ஆகும்.

ஐபோனில் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

ஐபோனில் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

1 ஐபோனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 அக்சஸபிலிட்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

2 அக்சஸபிலிட்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

அக்சஸபிலிட்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

3 வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

3 வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

செட்டப் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்

செட்டப் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்

செட்டப் செய்யும் போது அனைத்து கமாண்ட், கண்ட்ரோல் உள்ளிட்ட விவரங்களை சரியாக பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். இதன் பின் அம்சங்களை பின்னணியில் இயக்க தேவையான அனைத்து ஃபைல்களும் தானாக டவுன்லோடு செய்யப்பட்டுவிடும்.

இதை கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்?

இதை கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஆப்பிள் வழங்கி இருக்கும் தகவல்களின் படி நேரடியாக கண்ட்ரோல் செய்வதற்கு மாற்றாக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவலை திறப்பதில் துவங்கி, அதனை டைப் செய்வது, மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை தேர்வு செய்வது என பெரும்பாலான அம்சங்களை இயக்க முடியும்.

ஸ்கிரீனில் நேவிகேட் செய்வது: மேல்புறம், கீழ்புறம், வலது மற்றும் இடதுபுறம்

சூம் இன், அவுட், ஸ்கிரால், ரோடேட், இருவிரல் க்ளிக், லாங் பிரஸ், பேன் அப் அல்லது டவுன் டபுள் டேப்

திரையில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்வது

மெனு ஆப்ஷன்களில் நேவிகேட் செய்து அவற்றை மாற்றுவது

நோட்டிஃபிகேஷன் சென்ட்டரை பார்ப்பது

மூன்றாம் தரப்பு செயலிகளான ஃபேஸ்புக், ட்விட்டர், பிரவுசர் போன்றவற்றை திறப்பது

புதிய பதிவிடுவது, பிரவுசரை திறப்பது

புதிய பதிவிடுவது, பிரவுசரை திறப்பது

திரையின் குறிப்பிட்ட பகுதியை க்ளிக் செய்வது குறிப்பு எடுப்பது

எழுத்துக்கள் அல்லது முழு தரவுகளை தேர்வு செய்வசு, காப்பி, பேஸ்ட், டிராக் மற்றும் டிராப்

நேவிகேட் டு ஹோம், கோ பேக், சிரியை திறப்பது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது. என மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
This is how you can use your iPhone without touching it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X