தங்கத்துகள்கள் சிதறிகிடக்கும் செப்பு கால அரச கல்லறைகள் கண்டுபிடிப்பு!

|

கிரேக்கத்தின் தெற்கில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களான செப்பு கால கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஒருகாலத்தில் சுவற்றில் பதிக்கப்பட்ட தங்க இழைகள் துகள்களாக அங்கு சிதறிக்கிடக்கின்றன.

கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பிராந்தியத்தில் உள்ள, ஹோமரின் ஒடிஸியில் இடம்பெற்ற மைசீனிய காலத்து பைலோஸின் அரண்மனைக்கு அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தோலோஸ் பாணியில் கட்டமைப்பு

தோலோஸ் பாணியில் கட்டமைப்பு

தோலோஸ் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இவை தேனீக்கள் போன்ற பெரிய குவிமாடம் கொண்ட நிலத்தடி கட்டுமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான கல்லறைகள் பொதுவாக மைசீனிய அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டன.

இந்த கல்லறைகளில் நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் நிறைந்த புதையல் இருப்பதாகவும், அவற்றை கண்டுபிடிப்பதன் மூலம் ஆரம்பகால கிரேக்க நாகரிகத்தைப் பற்றிய நமது வரலாற்றில் இடைவெளிகளை நிரப்ப வரலாற்றாசிரியர்களுக்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கல்லறை மற்றும் சுவர்கள்

கல்லறை மற்றும் சுவர்கள்

இரண்டு கல்லறைகளில் பெரியது தரை மட்டத்தில் 40 அடி (12 மீட்டர்) விட்டம் கொண்டது மற்றும் அதன் கல் சுவர்கள் 15 அடி (4.5 மீட்டர்) உயரத்திற்கு பிரம்மாண்டமாக உள்ளன. இது அதன் உண்மையான உயரத்தில் பாதிக்கும் குறைவானது.

மற்றொரு கல்லறை, முந்தையதன் அளவில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் அதன் சுவர்கள் 6.5 அடி (இரண்டு மீட்டர்) உயரத்தில் உள்ளன.

கிரேக்க கலாச்சார அமைப்பு

கிரேக்க கலாச்சார அமைப்பு

கிரேக்க கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இரு கல்லறைகளின் குவிமாட வடிவ கூரைகள் பழங்காலத்தில் இடிந்து விழுந்ததால், அதன் அறைகள் மண் மற்றும் இடிபாடுகளால் நிரப்பியதால் கல்லறை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்றபட்டதாக தெரிவிக்கிறது.

ஆனால் இந்த கல்லறைகள் சந்தர்ப்பவாத திருடர்களால் குறிவைக்கப்படுவதிலிருந்து விடுபடவில்லை. பல தலைமுறை கிரேக்கர்கள் கிமு 1,000 முதல் இந்த புனித இடத்தை தொந்தரவு செய்துவந்தனர்.

இரண்டு கல்லறைகளிலிருந்து மீட்கப்பட்ட கல்லறை பொருட்களில் ஒரு தங்க முத்திரை மோதிரம் மற்றும் பண்டைய எகிப்திய தெய்வமான ஹாத்தோரின் தங்க தாயத்து ஆகியவை அடங்கும்.

வானம், பெண்கள், கருவுறுதல் மற்றும் அன்பு

வானம், பெண்கள், கருவுறுதல் மற்றும் அன்பு

வானம், பெண்கள், கருவுறுதல் மற்றும் அன்பு ஆகியவற்றின் பெண்தெய்வமான ஹாத்தோர், பொதுவாக பசுவின் தலை, பசுவின் காதுகள் அல்லது வெறுமனே மாடு வடிவத்தில் உள்ள ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார்.

கிரேக்க புராணங்களின் மைய நபர்களில் ஒருவரான ஹதோர், வான கடவுள் ராவுடன் நெருக்கமாக தொடர்புடையவர்.

தானிய குவியலால் சூழப்பட்ட இரண்டு காளைகளை காட்டும் இந்த தங்க மோதிரம், இந்தத் திட்டத்தில் ஆலோசித்த ஒரு பேலியோபொட்டனிஸ்ட்டால் பார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

'இது கால்நடை வளர்ப்பின் ஒரு சுவாரஸ்யமான காட்சி - தானிய உற்பத்தியில் கலந்த கால்நடைகள்.

'இது கால்நடை வளர்ப்பின் ஒரு சுவாரஸ்யமான காட்சி - தானிய உற்பத்தியில் கலந்த கால்நடைகள்.

இது விவசாயத்தின் அடித்தளம் 'என்று சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், 18 மாதங்கள் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தவருமான ஜாக் டேவிஸ் கூறுகிறார்.

கல்லறையின் தங்க- இழைகளை கொண்ட சுவர்களுக்குள் காணப்படும் தங்கப் பொருள்கள் உள்ளே உள்ள மற்றவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன.

நிலத்தடி கல்லறை முழுவதும், கணிசமான கலை புராண உயிரினங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

அகேட் சீல்ஸ்டோன் ஜீனி

அகேட் சீல்ஸ்டோன் ஜீனி

இரண்டு சிங்கம் போன்ற உயிரினங்களால் அலங்கரிக்கப்பட்ட அகேட் சீல்ஸ்டோன் ஜீனி என்று அழைக்கப்படுகிற விலங்கு, துடிப்பான நகம் கொண்ட கால்களில் நிமிர்ந்து நிற்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஜீனிக்கு மேலே 16 புள்ளிகள் கொண்ட நட்சத்திரம் உள்ளது. அதே 16 புள்ளிகள் கொண்ட நட்சத்திரம் கல்லறையில் வெண்கலம் மற்றும் தங்க கலைப்பொருட்களிலும் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

'இது அரிதானது. மைசீனிய ஐகானோகிராஃபியில் 16 புள்ளிகள் கொண்ட நட்சத்திரங்கள் அவ்வளவாக இல்லை. இரண்டு வெவ்வேறு தளங்களில் (அகேட் மற்றும் தங்கம்) 16 புள்ளிகளுடன் கூடிய இரண்டு பொருள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 'என்று தொல்பொருள் மேற்பார்வையாளர் ஷரோன் ஸ்டாக்கர் கூறினார்.

Best Mobiles in India

English summary
Archaeologists uncover two Bronze Age 'royal' tombs lined with GOLD that promise to unlock secrets about life in ancient Greece 3,500 years ago

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X