2019ம் ஆண்டின் மிகமுக்கிய விண்வெளி நிகழ்வுகள்..

|

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புதமான மற்றும் துடிப்பான காலகட்டத்தில் நாம் இப்போது வாழ்ந்துவருகிறோம். இந்த நிகழ்வுகள் இடைவேளையில்லாமல் வேகமாக நடைபெறுகின்றன. மேலும் இது தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட தினமும் மாறுகின்றன. இந்த காரணத்திற்காகவே "சமீபத்திய" விண்வெளி பயணத்தின் எந்தவொரு அறிவிப்பும் விரைவில் தேவையற்றதாகிவிடும்.

குறிப்பிட்ட தகவல்கள்

குறிப்பிட்ட தகவல்கள்

பின்வரும் பட்டியல் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், சமீபகாலமாக விண்வெளி ஆராய்ச்சியில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சில மைல்கற்கள் பின்வருமாறு:

1) ஜனவரி 2019 - நிலவு மற்றும் அல்டிமா துலே

1) ஜனவரி 2019 - நிலவு மற்றும் அல்டிமா துலே

2019 புத்தாண்டு தினத்தன்று நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம், கைபர் பெல்ட்-ல் உள்ள அல்டிமா துலேவிற்கான தனது பயணத்தை முடித்தது. சூரியகுடும்பத்தில் நம்மால் சென்றடைய முடிந்த தொலைதூர கிரகம் இது.

சீனாவும் தனது சேன்ஜ் -4 லேண்டரை சந்திரனின் வெகு தொலைவில் ஜனவரி மாதம் தரையிறக்க முடியும் என்று நம்பியது. அம்மாதம் 4 ஆம் தேதி, அவர்களின் கடின உழைப்பு மூலம் சந்திரனின் பெரும்பாலும் ஆராயப்படாத பக்கத்தில் லேண்டர் தரையிறங்கியது.

19 பிப்ரவரி அன்று, வழக்கத்தை விட பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்த நிலவு வானில் சூப்பர்மூனாக காட்சியளித்தது.

2)பிப்ரவரி 2019 - செவ்வாய் துளையிடல், தோல்வியடைந்த நிலவு தரையிறக்கம், சூப்பர் மூன்

2)பிப்ரவரி 2019 - செவ்வாய் துளையிடல், தோல்வியடைந்த நிலவு தரையிறக்கம், சூப்பர் மூன்

பிப்ரவரி மாத துவக்கத்தில் செவ்வாய் நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் எச்பி3 கிரகத்தில் அதன் உட்புற வெப்பநிலையை அறிய துளையிட துவங்கியது. 5மீட்டர் ஆழம் வரை துளையிட திட்டமிட்ட நிலையில், சில தொழில்நுட்ப சிக்கல்களால் 30செமீ க்கு மேல் செல்ல இயவில்லை.

இதே மாதம், இஸ்ரேல் தனியார் விண்வெளி அமைப்பான ஸ்பேஸ்ஐஎல், தனது முதல் மூன் லேண்டரை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கான் 9 மூலம் விண்ணில் ஏவியது.

3) மார்ச் 2019 -ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ கேப்சூல்

3) மார்ச் 2019 -ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ கேப்சூல்

மார்ச் மாதம், ஸ்பேஸ்எக்ஸ் தங்களது மனிதர்கள் செல்லும் டிராகன் 2 விண்கலங்களில் ஒன்றை ஏவி சோதனை செய்தது. டெமான்ஸ்ட்ரேசன் மிஷன் 1 (டி.எம் -1) என அழைக்கப்படும் இந்த விண்கலம் மனிதர்களை வைத்து பரிசோதிக்கவில்லை எனினும் சேகரித்த தரவு எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு வழிகாட்டும்.

3) மார்ச் 2019 -ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ கேப்சூல்

3) மார்ச் 2019 -ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ கேப்சூல்

மார்ச் மாதம், ஸ்பேஸ்எக்ஸ் தங்களது மனிதர்கள் செல்லும் டிராகன் 2 விண்கலங்களில் ஒன்றை ஏவி சோதனை செய்தது. டெமான்ஸ்ட்ரேசன் மிஷன் 1 (டி.எம் -1) என அழைக்கப்படும் இந்த விண்கலம் மனிதர்களை வைத்து பரிசோதிக்கவில்லை எனினும் சேகரித்த தரவு எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு வழிகாட்டும்.

4) ஏப்ரல் 2019 - சூரியனை கிட்டத்தட்ட தொட்ட நாசா

4) ஏப்ரல் 2019 - சூரியனை கிட்டத்தட்ட தொட்ட நாசா

நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வு, சூரியனை நெருங்கிய அணுகுமுறையுடன் ஏப்ரல் மாதம் அற்புதமாகத் தொடங்கியது. இது 2018 இன் பிற்பகுதியில் நிகழ்ந்த பிற அணுகுமுறைகளைப் பின்பற்றியிருந்தாலும், கடைசியானது அல்ல.

மேலும் இம்மாதம், ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் விண்கலம் மற்றும் ஹெவி ஃபால்கானை வெற்றிகரமாக பரிசோதித்தது.

5) மே 2019 - விண்வெளி செய்தியால் பரபரப்பை கிளப்பிய மாதம்

5) மே 2019 - விண்வெளி செய்தியால் பரபரப்பை கிளப்பிய மாதம்

மே மாதம் விண்வெளி ஆய்வில் அமைதியான மாதமாக இருந்தாலும் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இருந்தன.

மே 6 அன்று நடந்த எட்டா அக்வாரிட் விண்கல் மழை, சோதனையின் போது வெடித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் க்ரூ கேப்சூல், பூமிக்கு மிக நெருக்கமாக 3.5மில்லியன் மைல் தொலைவில் உரசி சென்ற விண்கல் என பல பரபரப்புகள்.

6) ஜூன் 2019 -ஸ்ட்ராபெர்ரி மூன், யூரோபாவில் உப்புநீர், பூமியை போன்ற எக்ஸோ ப்ளானெட்

6) ஜூன் 2019 -ஸ்ட்ராபெர்ரி மூன், யூரோபாவில் உப்புநீர், பூமியை போன்ற எக்ஸோ ப்ளானெட்

இந்த மாதத்தின் மிகவும் அற்புதமான விண்வெளி நிகழ்வுகளில் ஒன்று ஸ்ட்ராபெரி மூன். உலகெங்கிலும் இந்த காட்சியைப் காண முடிந்த பலர் திகைத்துப் போயினர்.

ஜூன் மாத மத்தியில் வெளியான புதிய ஆய்வில், வியாழனின் ஒரு நிலவான யுரோபாவில் உப்புநீர் இருக்கலாம் என கூறியது.

பூமியை போன்று அச்சுஅசலாக இதேபோன்ற அம்சங்களை கொண்ட எக்ஸோப்ளான்ட் ஒன்றை கண்டறிந்துள்ளதாக ஜூன் மாத இறுதியில் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

7) ஜூலை 2019 - முழு சூரியகிரகணம்

7) ஜூலை 2019 - முழு சூரியகிரகணம்

இம்மாத துவக்கத்தில், நட்சத்திரங்கள் மோதாமல் கருந்துளைகள் உருவாக வழி உள்ளது என கண்டறிந்தனர். மேலும் 2017க்கு பிறகு முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவின் ஒன்லூகரில் நிகழ்ந்தது.

இம்மாத இறுதியில், இந்தியா சந்திராயன் 2 என்ற மூன் லேண்டர் மற்றும் ரோவரை நிலவிற்கு செலுத்தியது.

8) ஆகஸ்ட் 2019 - பிரம்மாண்ட கருந்துளைகள் மற்றும் ஏரியா51 முற்றுகை

8) ஆகஸ்ட் 2019 - பிரம்மாண்ட கருந்துளைகள் மற்றும் ஏரியா51 முற்றுகை

40பில்லியன் சூரியன்களின் நிறைக்கு ஈடான மிக பிரம்மாண்டமான கருந்துளை கண்டறியப்பட்டது.

சீன தனியார் விண்வெளி நிறுவனமான லிங்க்ஸ்பேஸ் உடன் இணைந்து மறுபயன்பாடு செய்யும் வகையிலான ராக்கெட்கள் பரிசோதிக்கப்பட்டன.

20 செப்டம்பர் 2019 அன்று திட்டமிடப்பட்ட "ஏரியா51 முற்றுகை" படுதோல்வியடைந்தது

9) செப்டம்பர் 2019 - பரிசு மழை

9) செப்டம்பர் 2019 - பரிசு மழை

இம்மாதத்தின் முக்கிய செய்தி, கருத்துளையின் முதல் புகைபடத்திற்கு மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது. 8 பேர் கொண்ட குழு 3 மில்லியன் டாலர் பரிசை பகிர்ந்துகொண்டனர்.

சிறு துணுக்கு செய்தியாக, விண்வெளியில் முதன்முதலாக சிமெண்ட் உருவாக்கப்பட்டது.

நிலவை சென்றடைந்த இந்தியாவின் சந்திராயன் 2, விக்ரம் லேண்டர் உடனான தொடர்பை இழந்தது.

10)அக்டோபர் 2019- இன்செலடஸில் உயிர்வாழ்வதற்கான காரணிகள்

10)அக்டோபர் 2019- இன்செலடஸில் உயிர்வாழ்வதற்கான காரணிகள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில உற்சாகமான செய்திகள் வந்தன. சனி கிரகத்தின் சந்திரனான என்செலடஸில் உயிர் வாழ்விற்கான அடிப்படை காரணிகள் இருப்பதை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஒரு நாசா பொறியாளர் ஒருவர், ஒளியின் வேகத்தில் 99% அடையக்கூடிய ஒரு புதிய வடிவ உந்துவிசை பற்றிய தகவல்களை வெளியிட்டார். இது எம்ட்ரைவ் என்று அழைக்கப்படுகிறது, இதற்கு எந்த உந்துசக்தியும் தேவையில்லை மற்றும் இது விண்வெளி ஆராய்ச்சியின் எதிர்காலம் என்பதை நிரூபிக்க முடியும்.

11) நவம்பர் 2019 - சனியை கடந்த நிலவு

11) நவம்பர் 2019 - சனியை கடந்த நிலவு

நவம்பர் 2 ஆம் தேதி வளையம் நிறைந்த கிரகமான சனியின் முன்னால் சந்திரன் கடந்து சென்றது. நியூசிலாந்தில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இதன் சிறந்த காட்சிகளைப் பெற்றனர்.ஆனால் பூமியைச் சுற்றியுள்ள மற்ற இடங்களில் இது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

நவம்பர் 11 ஆம் தேதி, புதன் பூமியிலிருந்து பார்க்கும் வகையில் சூரியனை கடத்த உள்ளது. இது 2039 வரை மீண்டும் நடைபெறாது.

12) டிசம்பர் 2019 - பூமிக்கு திரும்பும் ஹயாபூசா, விண்கல் புயல்

12) டிசம்பர் 2019 - பூமிக்கு திரும்பும் ஹயாபூசா, விண்கல் புயல்

ஜப்பானின் ஹயாபூசா-2 விண்கலம் ரயூகு விண்கல்லில் இருந்து புறப்பட்டு மீண்டும் டிசம்பர் மாதத்தில் பூமிக்கு திரும்பவுள்ளது.

டிசம்பர் என்றாலே ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவுக்கான நேரம் இது. இந்த விண்கல் மழை 3200 பைதான் என்ற சிறுகோளின் குப்பைகளால் ஏற்படுகிறது.

டிசம்பர் மாதம் முழுவதும் பண்டிகை காலம் என்றபோதும், இந்த ஆண்டு பாக்ஸிச் டே அன்று அரிதான வருடாந்திர சூரிய கிரகணமும் நிகழவுள்ளது.

Best Mobiles in India

English summary
2019 has been a very exciting year for space-related news. Here is a summary of some of the highlights.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X