Home
Camera

ஸ்மார்ட்போன் கேமராவில் இந்த தவறுகள் பண்ணிடாதீங்க! கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ..

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் நமது அனைத்து தேவைகளுக்கும் பயன்படுகிறது. அதாவது வங்கி சார்ந்த வேலைகள் முதல் துல்லியமான வீடியோக்கள், புகைப்படங்கள் எடுப்பது வரை அனைத்திற்கும் பயன்படுகின்றன.

அதுவும் தரமான கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் இப்போது மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதேசமயம் சிலர் தரமான கேமரா போன்களை வாங்கினாலும் அதை சரிவரப் பராமரிப்பதில்லை என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இதன் விளைவாக போன்களின் கேமரா சேதமடைந்து நல்ல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியாமல் போகிறது.

ஸ்மார்ட்போன் கேமராவில் இந்த தவறுகள் மட்டும் பண்ணிடாதீங்க..

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது போனின் கேமராவை பாதுகாக்க என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

செய்யக்கூடாத தவறுகள்:

உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவில் தூசி இருந்தால் அதை சுத்தம் செய்ய தண்ணீர் அல்லது திரவங்களை நேரடியாகத் தெளிப்பது மிகவும் தவறு. குறிப்பாக இது ஸ்மார்ட்போன் கேமராவின் உள் பாகங்களைச் சேதப்படுத்தி, அதைப் பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஸ்மார்ட்போன் கேமராவில் உங்கள் கைரேகைகள் படிந்தால் உடனே விரல்கள் மூலம் அழுத்தித் துடைக்க கூடாது. இப்படி செய்தால் கேமரா லென்ஸில் கீறல்களை ஏற்படுத்தி புகைப்படங்களின் தரத்தைக் குறைக்கும்.

அதேபோல் கேமராவை சுத்தம் செய்ய கடினமான துணிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் போன்றவற்றைப் பயன்படுத்துவது தவறு. இவை போனின் கேமரா லென்ஸில் கீறல்களை ஏற்படுத்தி கேமராவை சேதப்படுத்தி விடும்.

ஸ்மார்ட்போனின் கேமராவை சூரிய ஒளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது அதிக வெப்பம் கேமராவின் சென்சாரை பாதித்து புகைப்படங்களை தரத்தை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் போனின் கேமரா அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம் என்றாலும், அதிகமாக சுத்தம் செய்து நல்லது கிடையாது. இது கேமரா லென்ஸின் மேற்பூச்சை பாதித்து, புகைப்படங்களில் பிரதிபலிப்பு ஏற்படலாம்.

கேமராவை பாதுகாக்க வழிமுறைகள்:
பொதுவாக லென்ஸ் கவர் கேமராவை கீறல்கள் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும். எனவே, தரமான லென்ஸ் கவரை எப்போதும் பயன்படுத்துவது நல்லது.

கேமராவை சுத்தம் செய்ய கடினமான துணிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது நல்லது. இது கேமராவை சேதப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் கேமராவில் இந்த தவறுகள் மட்டும் பண்ணிடாதீங்க..

அதேபோல் ஸ்மார்ட்போன் கேமராவை சுத்தம் செய்ய லென்ஸ் கிளீனர் அல்லது எலக்ட்ரானிக் கிளீனரைப் பயன்படுத்தலாம். ஆனாலும் அதை நேரடியான லென்ஸில் தெளிக்க வேண்டாம் மைக்ரோஃபைபர் துணியில் தெளித்துப் பயன்படுத்தவும்.

குறிப்பாக நாம் வாங்கும் விலை உயர்ந்த ஸ்மார்டபோனின் கேமராவை பாதுகாக்க எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் செய்யும் சிறிய தவறு மூலம் ஸ்மார்ட்போனின் கேமரா முற்றிலும் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் போன் தவறுதலாக கீழே விழுந்து கேமரா பகுதி ஏதாவது பொருளில் மோதி சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே ஸ்மார்ட்போனை எப்போதும் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to protect your smartphone camera? What are the mistakes that should not be made
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X