பணம் இல்லாமல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: இதோ வழிமுறைகள்

|

இந்த திட்டத்தின்படி பயணிகள் தங்களுடைய பயணத்திற்கேற்ற டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு அதன்பின்னர் 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம்.

இந்தியன் ரயில்வே கேடரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்

இந்தியன் ரயில்வே கேடரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்

ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்தியன் ரயில்வே கேடரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் தற்போது பயணிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு ‘இப்போது புக் செய்யுங்கள், பணத்தை பின்பு செலுத்துங்கள்' என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தின்படி பயணிகள் தங்களுடைய பயணத்திற்கேற்ற டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு அதன்பின்னர் 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம். அதற்கும் மேல் கால தாமதம் ஆனால் 3.5% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ இந்த கட்டுரையில் பார்ப்போம்

‘பே ஆன் டெலிவரி’ அல்லது ‘பே லேட்டர்’

‘பே ஆன் டெலிவரி’ அல்லது ‘பே லேட்டர்’

1. முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும்

2. அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, பேமெண்ட் ஆப்சனுக்கு வரவேண்டும்

3. அதில் ‘பே ஆன் டெலிவரி' அல்லது ‘பே லேட்டர்' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இது 'இபே' என்பதில் இருக்கும்

பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்கள்

பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்கள்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் லாகின் செய்தவுடன் உங்கள் பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் அதன் பின் நீங்கள் பயணம் செய்யும் ஊருக்கு எத்தனை ரயில்கள் உள்ளது என பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் செளகரித்திற்கு ஏற்ற ரயிலை தேர்வு செய்து பயணிகள் விபரத்துடன் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும்

‘கேப்ட்சாவை’ எண்டர் செய்யவும்

‘கேப்ட்சாவை’ எண்டர் செய்யவும்

அதன்பின்னர் ‘கேப்ட்சாவை' எண்டர் செய்து பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்கு வரவேண்டும். அதில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வாலட், பே ஆன் டெலிவரி என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் பே ஆன் டெலிவரியை தேர்வு செய்து பின்னர் அதற்கு கீழ் உள்ள பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

‘மேக் பேமெண்ட்’, ‘இபே’

‘மேக் பேமெண்ட்’, ‘இபே’

அதன் பின்னர் ‘மேக் பேமெண்ட்' என்ற ஆப்சன் தோன்றும். அதனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் ‘இபே' என்ற அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும். அதன்பின்னர் உங்களுடைய மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும். நீங்கள் பயணம் செய்து முடித்த பின்னர் டிக்கெட் புக் செய்த 14 நாட்கள் கழித்து பணம் செலுத்தினால் போதும்.

Best Mobiles in India

English summary
How to book train tickets using IRCTC’s Pay Later service

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X