ஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி?

கடந்த 2014ஆம் ஆண்டு மெட்டீரியல் டிசைனின் முதல் வெர்ஷன் கூகுள் நிறுவனத்தின் டிசைனர்களில் ஒருவரான மாட்டியாஸ் டூரட்டி என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது.

|

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வசதிகளில் ஒன்று மெட்டீரியல் டிசைன் 2 என்பது. இது ஆண்ட்ராய்டு மெசேஜ்களை ரீடிசைன் செய்ய உதவுகிறது. மெட்டீரியல் டிசைனை அப்டேட் செய்வதன் மூலம் ஆண்ட்ராய்டு செயலிகளில் உள்ள அதிகபட்ச புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி?

கடந்த 2014ஆம் ஆண்டு மெட்டீரியல் டிசைனின் முதல் வெர்ஷன் கூகுள் நிறுவனத்தின் டிசைனர்களில் ஒருவரான மாட்டியாஸ் டூரட்டி என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகிளின் அனைத்து தயாரிப்புகளையும் ஒன்றிணைப்பதற்கும் மேலும் சிறிது கலையம்சத்துடன் கூடிய மகிழ்ச்சிக்கும் உதவும் வகையில் இருந்தது. சில ஆண்டுகள் கழித்து அண்ட்ராய்டு மற்றும் கூகிள் பயன்பாடுகள் மட்டுமின்றி ஜிமெயில், காலண்டர் போன்ற அம்சங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் கூகுள் விஷூவல் அப்டேட்ஸ் காரணமாக அனைத்திலும் வெள்ளை நிற பின்னணி மற்றும் வளைந்த கார்னர் மற்றும் புதிய வகையான ஃபாண்ட்ஸ்கள் கிடைத்தது. இந்த புதிய ஐடியாவும் டூரட்டியின் கைவண்ணமே ஆகும். இந்த புதிய வெர்ஷனைத்தான் தற்போது நாம் 'மெட்டீரியல் டிசைன் 2' என்று அழைக்கின்றோம்

இந்த புதிய மெட்டீரியல் டிசைன் 2 வினால் நமக்கு கிடைக்கும் புதிய வசதிகள் குறித்து பார்ப்போமா

1) வெள்ளை நிற இடைவெளி மற்றும் டிரான்ஸ்யூசென்ஸ்

2) வண்ணமயமான ஐகான்கள்

3) கூகுள் ஃபாண்டுகள்[எழுத்துரு]

4) வட்டமான கார்னர்கள்

5) வட்டமான டேப் இண்டிகேட்டர்கள்

6) வட்டமான செலக்சன் ஹைலைட்ஸ்

7) பெரிய அளவில் செயலியின் பார் பாட்டம்

தற்போதைய ஆண்ட்ராய்ட் மெசேஜ் பயன்படுத்தி வருபவர்கள் இந்த புதிய வசதிகளை பெற கூகுளை அப்டேட் செய்தால் போதும். மேலும் ஆண்ட்ராய்டு மெசேஜில் இருந்து மெட்டீரியல் டிசைனுக்கு எனேபிள் செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்

1) நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் மிக்ஸ்புளோரரை இன்ஸ்டால் செய்ய வ் ஏண்டும். இது எக்ஸ்.டி.ஏ லேபில் கிடைக்கும். தரவு பகிர்வில் சேமிக்கப்பட்ட அமைப்புகளை மாற்ற, நீங்கள் இந்த பயன்பாட்டை செய்ய வேண்டும்.

2) பின்னர் மிக்ஸ்புளோரரை அதில் உள்ள ரூட் பிரிவுக்கு சென்று செல்ல வேண்டும். அந்த பகுதிக்கு சென்ற பின்னர் data/data/com.google.android.apps.messaging/shared_prefs/ க்கு செல்ல வேண்டும். அங்கு வந்த பின்னர் PhenotypePrefs.xml. ஓப்பன் செய்தால் அதில் ஒரு பாப் அப் தோன்றும் அதில் எடிட்டை தேர்வு செய்து அதன் பின்னர் கோட் எடிட்டரைத் தேர்வு செய்ய வேண்டும்


3. பின்னர் வலது மேல் புறத்தில் உள்ள மூன்று கோடுகளை க்ளிக் செய்து அதில் ஃபைண்ட் என்பதை கண்டுபிடித்து பின்னர் bugle_phenotype__enable_m2 என்பதை சியர்ச் செய்ய வேண்டும்

4. இதன் முடிவில் ஃபால்ஸ் என்று இருக்கும். நீங்கள் அதை ட்ரூ என்று செட் செய்ய வேண்டும்

5. பின்னர் நீங்கள் மீண்டும் ஃபைண்ட் ஆப்சனுக்கு சென்று பின்னர் அதில் bugle_phenotype__enable_phenotype_override என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதிலும் அதேபோல் ட்ரூவை செட் செய்ய வேண்டும்

6. இதனை செய்து முடித்தவுடன் மெசேஜ் செயலியை மூடிவிடலாம்

இப்போது நீங்கள் மீண்டும் செயலிகளை ஓப்பன் செய்தால் உங்கள் முன் மெசேஜ் செயலியில் மெட்டீரியல் டிசைன் 2 தோன்றும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை ஒவ்வொரு முறையும் நீங்கள் செயலியை மூட வேண்டிய நிலை இருக்கும். இந்த பயன்பாட்டை மூடுவதன் மூலம், பயன்பாட்டை மூடுவதன் மூலம் பயன்பாட்டை மூட விரும்பினால், பயன்பாட்டின் அசல் வடிவமைப்புக்கு மீட்டமைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to enable Material Theme redesign on Android Messages : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X