உங்களது டிஜிட்டல் கேமரா சுத்தம் செய்ய தலைசிறந்த டிப்ஸ்

|

புகைப்பட கலைஞர்களுக்கு கேமராவை சுத்தம் செய்வது மிக கடினமான பணிகளில் ஒன்று ஆகும். ஒவ்வொரு முறையும் லென்ஸ் மாற்றும் போது அதனை நாம் தூசு மற்றும் இதர அசுத்துங்களில் வெளிப்படுத்துகிறோம்.

உங்களது டிஜிட்டல் கேமரா சுத்தம் செய்ய தலைசிறந்த டிப்ஸ்

எனினும் கேமராவின் உள்புறங்களை பாதுகாப்பது முக்கியமான பணிகளில் ஒன்றாகும். இதனை சரியாக மேற்கொள்ளாத போது, கேமராவில் உள்ள தூசு புகைப்படங்களை சிறப்பானதாக வெளிப்படுத்தாது. இங்கு கேமரவை சுத்தம் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆட்ட கிளீன் அம்சத்தை பயன்படுத்தலாம்

ஆட்ட கிளீன் அம்சத்தை பயன்படுத்தலாம்

பெரும்பாலான டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களில் சென்சார்களை தானாக சுத்தம் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. இதனை செய்யும் போது கேமரா சிறிய அதிர்வுகளின் மூலம் தூசியை அகற்றுகிறது. இந்த அம்சம் உங்களது கேமராவில் இல்லை எனில் அதனை நீங்களாகவே செய்ய வழிமுறைகள் இருக்கின்றன.

கேமராவை நீங்களாகவே சுத்தம் செய்யும் முன் இவை உங்களிடம் இருப்பதை சரிபார்க்க வேண்டும்.

- கிளீனிங் ஸ்வாப் உங்களது சென்சார்களை சுத்தம் செய்ய கச்சிதமான ஒன்றாக இருக்கும்.

- கேமரா சென்சார் சுத்தம் செய்யும் திரவம்

- ஏர் பிளோவர்

சென்சாரை சுத்தம் செய்வது எப்படி?

சென்சாரை சுத்தம் செய்வது எப்படி?

வழிமுறை 1 : கேமராவை நீங்களாக சுத்தம் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க வேண்டும்.

வழிமுறை 2 : இந்த ஆப்ஷனை தேர்வு செய்ததும் மிரர் லாக் பேக் மற்றும் சென்சார் சத்தம் கேட்கும்.

வழிமுறை 3 : கேமராவை தலைகீழாக பிடித்து கொண்டு ஏர் பிளோவர் கொண்ட கேமராவினுள் காற்றை பீய்த்து அடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிளோவர் முனை கேமரா சென்சாரை தொடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிமுறை 4 : இதனை செய்து முடித்ததும் கேமராவை ஆஃப் செய்து லென்ஸ் மாற்ற வேண்டும்.

முதல் லட்டு ரூ.6,000/-க்கு நோக்கியா 2; இரண்டாவது லட்டு - நோக்கியா 9.!முதல் லட்டு ரூ.6,000/-க்கு நோக்கியா 2; இரண்டாவது லட்டு - நோக்கியா 9.!

சென்சாரை வெட் கிளீன் செய்வது எப்படி?

சென்சாரை வெட் கிளீன் செய்வது எப்படி?

வழிமுறை 1 : மேனுவல் கிளீனிங் ஆப்ஷனை கிளிக் செய்து மிரர் லாக் அப் செய்ய வேண்டும்.

வழிமுறை 2 : ஏர் பிளோவர் கொண்டு சில முறை மேல் இருக்கும் தூசியை அகற்ற வேண்டும்.

வழிமுறை 3 : இனி ஸ்வாப் மேல்புறம் இரண்டு துளி சொல்யூஷனை விட வேண்டும்.

வழிமுறை 4 : ஸ்வாபினை சரியாக சென்சாரின் ஒருபுறத்தில் வைத்து, மென்மையாக சென்சாரில் அசைக்க வேண்டும். இதே வழிமுறையை மற்ற புறங்களிலும் செய்ய வேண்டும்.

வழிமுறை 5 : இனி லென்ஸ் மாற்றி விட்டு புகைப்படங்களை எடுத்த சோதனை செய்யலாம். இனியும் புகைப்படங்களில் தூசு இருப்பதை உணர்ந்தால் முந்தைய வழிமுறையை மீண்டும் செய்யலாம்.

ஒருவேளை டிஜிட்டல் பயின்ட் அண்ட் ஷூட் கேமராவாக இருந்தால் பேப்பர் டவல் அல்லது மென்மையான துணி கொண்டு சுத்தம் செய்யலாம். டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுடன் ஒப்பிடும் போது டிஜிட்டல் கேமராக்களை எளிமையாக சுத்தம் செய்ய முடியும்.

லென்ஸ் அல்லது எல்சிடி திரையில் உள்ள தூசியை சரியான பொருளை கொண்டு கீறல் விழாமல் அகற்ற வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Cleaning a camera can be more complicated and dreaded one for photographers. oday, we have compiled a list of on how to clean your digital camera easily.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X