Home
Camera

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 512ஜிபி மெமரி.. AI அம்சம்.. 20X ஜூம்.. Honor செக்யூரிட்டி கேமரா அறிமுகம்.. என்ன விலை?

ஹானர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ (Honor Xiaopai Smart Camera Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். இந்த புதிய செக்யூரிட்டி கேமரா ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ மாடலின் விலை மற்றும் அம்சஙகைளப் பார்க்கலாம்.

ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ அம்சங்கள் (Honor Xiaopai Smart Camera Pro Specifications): 4எம்பி டெலி போட்டோ மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ்கள் கொண்ட டிரிபிள்-லென்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் ஓயைழியை ஸ்மார்ட் கேமரா ப்ரோ. எனவே இந்த கேமரா உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Honor செக்யூரிட்டி கேமரா அறிமுகம்.. என்ன விலை?

அதேபோல் F/1.6 அபெக்சர் (Aperture) கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ்கள் இதில் இருப்பதால், ஒரு இடத்தில் இருக்கும் அனைத்தையும் துல்லியமாகப் பதிவ செய்ய முடியும். அதே நேரத்தில் ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ மாடலில் உள்ள டெலி போட்டோ லென்ஸ் விரிவான தொலைதூரப் படங்களைப் பிடிக்க உதவுகிறது.

இதுதவிர 20x ஹைப்ரிட் ஆப்டிகல் ஜூமை ஆதரிக்கிறது இந்த புதிய செக்யூரிட்டி கேமரா. இன்டெலிஜென்ட் டூயல்-லைட் ஃபுல்-கலர் நைட் விஷன் ( intelligent dual-light full-color night vision), இன்பிராரெட் (infrared), ஹை-பவர் வார்ம் ஃபில் லைட்ஸ் (high-power warm fill lights) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் கேமரா வெளிவந்துள்ளது.

குறிப்பாக இரவு, பகல் என அனைத்து நேரங்களில் தெளிவாகப் படம் பிடிக்கும் அம்சங்களுடன் இந்த ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ மாடல் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். மேலும் ஏஐ (AI) அம்சங்களும் இந்த கேமராவில் உள்ளன. இது மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகளைப் புத்திசாலித்தனமாகக் கண்காணிக்கப் பயன்படுகிறது.

Honor செக்யூரிட்டி கேமரா அறிமுகம்.. என்ன விலை?

அதேபோல் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் யாரேனும் நுழைந்தால் அலாரங்களை கொடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பை மேம்படுத்த, எல்லை தாண்டிய பகுதிக்குள் வந்தால் தானாகவே உயர் டெசிபல் அலாரத்தை வெளியிடும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ.

குறிப்பாக 360° ஹாரிசாண்டல் விஷுவல் ரேஞ்ச் மற்றும் வெர்டிகல் 125° விஷுவல் ரேஞ்ச் ஆதரவைக் கொண்டுள்ளன ஹானர் கேமராக்கள். மேலும் இதில்டூயல் லென்ஸ்கள் இருப்பதால் ஒருநேரத்தில் இரண்டு இடங்களில் வீடியோ பதிவும் செய்ய முடியும். அதேபோல் 2.4GHz, 5GHz மற்றும் வயர்டு நெட்வொர்க் போர்ட் உள்ளிட்ட டூயல் நெட்வொர்க் கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Honor செக்யூரிட்டி கேமரா அறிமுகம்.. என்ன விலை?

512ஜிபி வரையிலான மெமரி கார்டை பயன்படுத்த எஸ்டி கார்டுகளை ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ மாடலில் பயன்படுத்த முடியும். ஹானர் ஸ்மார்ட் ஸ்பேஸ் ஆப் மூலம் கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவை தனித்தனியாக வாங்குவதற்குக் கிடைக்கும். குறிப்பாக இந்த செக்யூரிட்டி கேமராவின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

தற்போது சீனா மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஹானர் Xiaopai ஸ்மார்ட் கேமரா ப்ரோ மாடல். விரைவில் இந்த கேமரா இந்தியாவுக்கும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த கேமராவின் விலை 249 yuan (இந்திய மதிப்பில் ரூ.2,925)-ஆக உள்ளது.

photo courtesy: gizmochina.com, passionategeekz.com, Honor

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Xiaopai Smart Camera Pro Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X