இரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்!
அந்த ஆய்வகத்தின் கருத்து படி, அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மிகுந்த சிரத்தை எடுத்து இந்த குறிப்பிடத்தகுந்த காணொளிகளை மீட்டெடுத்து, தற்போது யூடியூப்-ல் பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்க ஆய்வு கூடம் ஒன்று இதுவரை வெளியாகாத வரலாற்றின் மிகப்பெரிய இரகசிய பனிப்போர் காணொளிகளான, நூற்றுக்கணக்கான அணு சோதனை காணொளிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் நேசனல் லைப்ரரி என்ற ஆய்வு கூடத்தால் வெளியிடப்பட்ட இக்காணொளிகள், 1945 முதல் 1962 வரை அமெரிக்காவின் மிக இரகசிய பரிசோதனை தளங்களில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான அதிசக்திவாய்ந்த அணு வெடிப்புகளை காட்டுகின்றன.
அந்த ஆய்வகத்தின் கருத்து படி, அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மிகுந்த சிரத்தை எடுத்து இந்த குறிப்பிடத்தகுந்த காணொளிகளை மீட்டெடுத்து, தற்போது யூடியூப்-ல் பதிவிட்டுள்ளனர்.சமீபத்திய வெளியிடாக, கடந்த வியாக்கிழமை 250 க்கும் மேற்பட்ட காணொளிகளின் மிகப்பெரிய தொகுப்பை இந்த ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
" இந்த காணொளிகள் ஒன்றுக்கும் பயனற்ற வகையில் அழிவின் விளிம்பில் உள்ளன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த காணொளிகளை மீட்டெடுத்க பல ஆண்டுகள் ஆயின. இவற்றை பார்த்த பின்பு, இந்த சோதனைகள் பற்றி வெளியான பெரும்பாலான தகவல்கள் தவறாவை என்பது அறிவியலாளர்களுக்கு தெரிந்தது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத 1950களில், ஆராய்ச்சியாளர்களால் அணு வெடிப்புகளின் அளவு மற்றும் திறனை துல்லியமாக கணக்கிட முடியவில்லை" என்கிறார் அந்த ஆய்வகத்தில் உள்ள கீரிக் ஸ்பிரிக்ஸ்.

எனவே இந்த ஆய்வகத்தை சார்ந்த ஆய்வாளர்கள், இந்த காணொளிகள் மூலம் எவ்வளவு தரவுகளை சேகரிக்க முடியுமோ அத்தணையையும் சேகரிக்க முடிவுசெய்துள்ளனர்.
"இந்த காணொளிகளை பார்க்கும் போது, 1950களில் ஆராயாத பல்வேறு மாறுபட்ட தகவல்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.மேலும் முன்பு எப்போதும் பார்த்திராத இந்த வெடிபொருட்கள் பற்றிய புதிய தகவல்களை தற்போது கண்டறிந்துள்ளோம். இந்த காணொளிகளை நாங்கள் மறுஆய்வு செய்ய முடிவுசெய்துள்ளோம். அதன் மூலம் கிடைக்கும் சிறந்த தரவுகளின் அடிப்படையில் அணு ஆயுதங்களை புரிந்து கொள்ள முயல்வோம்" என்கிறார் கீரிக்.
இந்த புதிய டிஜிட்டல் வடிவிலான காணொளிகள், 1945 முதல்1962வரை அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பல்வேறு 210 உள்நாட்டு அணு ஆயுத பரிசோதனைகளை ஆவணப்படுத்துகின்றன.ஆனால் வளிமண்டல பரிசோதனை நடத்தப்பட்ட 7 வெடிப்புகள் மட்டும் இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவற்றின் செயல்திறன் எப்போதும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.
1962ல் நடைபெற்ற ஆபரேசன் டோமினிக்-ன் காணொளிகள், 1955ல் நடந்த ஆபரேசன் டீபாட், 1958ல் நடந்த ஹார்ட்டேக்2 காணொளிகளும் இந்த தொகுப்பில் உள்ளன.

100 கிலோ டன் எடையுள்ள குண்டுகள் பூமியில் போடப்பட்டு, மிகப்பெரிய காளான் போல வெடிக்கும் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தின் கணக்குபடி, இந்த பரிசோதனைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடல் அல்லது நெவேடா பாலைவனங்களில் நடைப்பெற்றுள்ளன. உண்மையாக 10,000காணொளிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதில் ஏற்கனவே 6500 காணொளிகளை மீட்டுவிட்ட நிலையில், 4200 மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிறார் கீரிக். மீட்டெடுக்கப்பட்ட 6500 காணொளிகளில், 400-500 காணொளிகள் ஏற்கனவே ஆராயப்பட்டு விட்டன. இதன் மூலம் முக்கிய தரவுகளை விட்டுங்செல்வதன் மூலம், அவை ஆயுத இயற்பியலாளர்கள் பயன்படும் என்கிறார் கீரிக்.


Click it and Unblock the Notifications