சிறுமியிடம் சிசிடிவி கேமரா மூலம் பேசிய ஹேக்கர்கள்: திகில் சம்பவம்.!

|

இப்போது வெளிவரும் அனைத்து புதிய தொழில்நுட்ப சாதனங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பாதுகாப்பு கருதி வீட்டில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் பாதுகாப்புக்காக வைக்கப்படும் அதுவே ஆபத்தாக முடியலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது ஒரு சம்பவம் அதுவும் அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ப்பி மாகாணத்தில்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

குறிப்பாக இப்போது வரும் சிசிடிவி கேமராக்களில் ஸ்மார்ட் வகைகள் உண்டு, அதன்படி மைக், ஸ்பீக்கர் ஸ்மார்ட்போன் உடன் கனெக்ட் செய்யும் வசதி என பல்வேறு அம்சங்களுடன் ரிங் என்ற அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த ரிங் நிறுவனத்தின் சிசிடிவி கேமரா ஒன்றை வாங்கி தனது 8வயது மகள் அலைசாவை கண்காணிப்பதற்காக வீட்டில்
மாட்டியிருக்கிறார் ஆஷ்ல லெமே என்றும் பெண். அதுவும் சமீபத்தில் நடந்து முடிந்த 'Black Friday' சிறப்பு விற்பனையில் இந்த சிசிடிவி கேமராக்களை அவர் வங்கியுள்ளார், வாங்கிய நான்கவது நாளே இந்த கேமரா ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.

நான்தான் சாண்டா கிளாஸ்

நான்தான் சாண்டா கிளாஸ்

நடந்தது என்னவென்றால் தனியாக படுக்கையறையிலிருந்த 8-வயது அலைசாவின் கேமராவிலிருக்கும் ஸ்பீக்கரில் Tiptoe through the Tulips என்ற பாடல் கேட்கத்தொடங்கியிருக்கிறது. இது திகில் படமான Insidious-ல் இடம்பெற்ற பாடல் ஆகும். பின்பு ஒரு மர்ம நபரின் குரல் அதிர் ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது, பயந்துபோன் அந்த சிறுமி யார் எனக் கேட்கிறாள், நான்தான் சாண்டா கிளாஸ், நாம ஏன் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாகக் கூடாது என்று பதறவைக்கிறது அந்தக் குரல்.

ஊடகங்கள் வழியே வெளியிட்டிருக்கிறார்

ஊடகங்கள் வழியே வெளியிட்டிருக்கிறார்

இதனால் அதிரந்துபோன தாய் ஆஷ்லி லெமே, பதிவான அந்த வீடீயோவை ஊடகங்கள் வழியே வெளியிட்டிருக்கிறார், அந்தவீடீயோவைப் பார்த்து என் இதயமே அப்படியே உறைந்துபோய் விட்டது. மேலும் வீடியோவின் முடிவில் அம்மா, அம்மா என
அவள் அலறுவதை இன்னொரு முறை பார்க்கும் மன தைரியம் என்னிடம் இல்லை என்கிறால் அந்த அம்மா.

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமரா

அமெரிக்காவில் வசித்து வரும் ஆஷ்லி லெமே, தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேர பணி செய்து வருகிறார். இவரின் பணிச்சுமை காரணமாக, இரவு நேரங்களில் மகளை பார்த்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி தேடிய ஆஷ்லி, தனது குழந்தை இருக்கும் அறையில், குழந்தையை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஸ்பீக்கரை பொருத்தியுள்ளார். இந்த கேமரா மூலம் குழந்தைகள் இன்னும் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று நினைத்திருக்கிறார் அவர். ஆனால், அதுவே அவர்களுக்குப் பயத்தை உண்டாக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.

ரிங் நிறுவனம்

இந்த ஹேக்கிங் சம்பவம் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இணையம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்காலம் என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது. மேலும் இதுகுறித்து விளக்கம் கொடுத்த ரிங் நிறுவனம், எங்கள் சர்வர் பாதுகாப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை, பாஸ்வேர்டு லீக்கால் இது நடந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்திருந்தது. அதாவது வேறேதேனும் வழயில் ஹேக்கருக்கு இந்த பாஸ்வேர் கிடைத்திருக்கவேண்டும் என்பதைய கூறுகிறது ரிங் நிறுவனம்.

 கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்

கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்

நீங்கள் உஷாராக இல்லையென்றால் உங்கள் அறையை உங்களுக்கு தெரியாமல் உங்கள் கேமரா வழியே ஒருவர் கண்காணித்துக்கொண்டிருக்க முடியும். எனவே இதுபோன்ற விஷயங்களில் நம்மால் முடிந்த கூடுதல் அக்கறைசெலுத்தவேண்டும்.

Best Mobiles in India

English summary
Hacker gained access to a family's 8-year-old daughter's Ring camera in her bedroom: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X