Subscribe to Gizbot

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கிளிப் கேமராவை அறிமுகப்படுத்திய கூகுள்.!

Posted By: Vivek Sivanandam

ஆல்பபெட்-ன் கூகுள் நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று கூகுள் கிளிப்ஸ் என்ற கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. DSLR வகையிலான எத்தனேயே கேமராக்கள் சந்தையில் உள்ள போது, கூகுள் ஏதேனும் சுவாரஸ்யமான விஷயம் இல்லாமல் இந்த கேமராவை அறிமுகப்படுத்தியிருக்குமா?. பாக்கெட் சைஸ் டிஜிட்டல் கேமராவான இது, ஆச்சரியமானவற்றை தானாகவே முடிவெடுத்து புகைப்படம் எடுக்கவல்லது.

249டாலர் (16,200ரூபாய்) விலையுள்ள இது, வீட்டு உபயோக பொருட்கள் உட்பட எதிலும் எளிதாக பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதாவது அசைவு ஏற்படும் போதோ அல்லது நேரம் வைத்து போட்டோ எடுக்கும் கேமரா போல இல்லாமல், கிளிப் கேமரா தனது வியூ ஃபைன்டர் உள்ளே வரும் எதையும் தானாகவே புகைப்படம் எடுக்கும். மனித முகங்கள், சிரிப்புகள், நாய்கள், பூனைகள், தொடர் நிகழ்வுகளை கண்டறியும் வகையில் கிளிப்பின் மிண்ணனு மூளைக்கு பயிற்சியளித்துள்ளது கூகுள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 பதிவிறக்கம்

பதிவிறக்கம்

பெற்றோர் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், தங்கள் குழந்தைகள், செல்லப்பிராணிகளின் கேன்டிட் (இயல்பான) புகைப்படங்களை எடுப்பதில் உள்ள சிரமங்களை நிவர்த்தி செய்துள்ளது. 7 நிமிட ஒலியில்லா வீடியோவாக கிளிப்பில் எடுப்பவற்றை, GIF அல்லது HD போட்டோவாக மாற்றிக்கொள்ளலாம். அவற்றை ஸ்மார்ட்போனுக்கு பகிரலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்.

எலெக்ட்ரானிக்ஸ்

எலெக்ட்ரானிக்ஸ்

கூகுள் நிறுவனம் அதிகமாக முதலீடு செய்துள்ள செயற்கைநுண்ணறிவு (AI - Artificial Intelligence) பிரிவை சந்தைபடுத்தி பிரபலபடுத்துவதே அதன் குறிக்கோள். மென்பொருளுடன் வன்பொருளை நன்கு பிணைப்பதில் தான் வெற்றி உள்ளது என்கிறது தேடுபொறி உலகில் சாதிக்கும் கூகுள். இந்த எலெக்ட்ரானிக்ஸ் மூலம் நுகர்வோர்களை கவரமுடியும் என நம்புகிறது.

 குரோம்காஸ்ட் டிவி

குரோம்காஸ்ட் டிவி

கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர், குரோம்காஸ்ட் டிவி டாங்குள், பிக்சல் ஸ்மார்ட்போன் என தனது நுகர்வோரின் நன்மதிப்பை பெற்ற கூகுள், இதுபோன்ற புதிய கருவிகளால் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. பொழுபோக்கு மற்றும் ஷாப்பிங் துறையில், ஆப்பிள், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், வாடிக்கையாளர்களுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்தவும் இந்த புதிய கருவிகள் கூகுளுக்கு உதவும். செயற்கை நுண்ணறிவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக கிளிப் கேமராவை அறிமுகப்படுத்திய கூகுள், தொடர்ந்து தனது குறிக்கோளை அடைய முயற்சித்து வருகிறது. வீட்டில் நடக்கும் அனைத்தையும் பதிவு செய்து கண்காணிப்பதை காட்டிலும், ஏதேனும் நகர்வுகள் ஏற்படும் போது மட்டும் பதிவு செய்வது சிறந்தது என்கிறார் ஐ.எச்.எஸ் மார்கிட் நிறுவனத்தின் பிளேக் கோசாக்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

பல்வேறு டிஜிட்டல் கேமராக்கள் நிரம்பியுள்ள சந்தையில், கூகுள் கிளிப்கள் ப்ளாக்பஸ்டர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன்விலை அதிகமாக இருந்தாலும், பிரத்யோக வசதிகள் அதை மட்டுபடுத்துகிறது. பெட்க்யூப் என்ற செல்லபிராணிகளை தொலைதூரத்திலிருந்து கண்காணிக்கும் அதிக வசதி கொண்ட கேமராக்கள் இருக்கின்றன. ஆடியோ வசதி இல்லாதது, பேட்டரி லைப் குறைவு போன்ற குறைபாடுகள் கிளிப்பில் உள்ளன. என்ன இருந்தாலும்,மேம்படுத்தப்பட்ட கணிணி நோக்குகளை கொண்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் பொருட்களை கண்டறிவது கூகுளின் முயற்சி என்கிறார் HAX நிறுவனத்தின் நிறுவனர் சிரில்.

 புதிய கேன்டிட் கேமரா

புதிய கேன்டிட் கேமரா

அக்டோபரில் அறிவிக்கப்பட்ட கூகுள் கிளிப்ஸ், பலதரப்பட்ட மக்களின் விருப்ப புகைப்படங்களை ஆராய்ந்து உருவாக்கப்பட்டது. நுகர்வோர்கள் செல்பி, மற்ற போட்டோ போஸை காட்டிலும் கேன்டிட் என்ற இயல்பான புகைப்படங்களையே விரும்புகின்றனர். ஆனால் அந்த சிறப்பான தருணங்கள்,நம் மொபலை எடுப்பதற்குள் மாறி விடும். பின் எப்படி இயல்பான புகைப்படம் எடுப்பது.

 இயற்கை புகைப்பட கலைஞர்களுக்கு சிறந்த ஒன்று

இயற்கை புகைப்பட கலைஞர்களுக்கு சிறந்த ஒன்று

இயல்பாக இருப்பதை படம் எடுப்பதை கவனித்துவிட்டால்,இயல்புதன்மை வராது. அதை தவிர்த்து, சிறப்பான தருணங்களை பத்திரபடுத்தவே இந்த கூகுள் கிளிப் என்கிறார் அதன் வடிவமைப்பாளர் ஜஸ்டன். மேலும் அவர் கூறுகையில், இது ஒரு கேமராவாக மட்டுமில்லாமல், மென்பொருள் நிரம்பிய ஸ்மார்ட் கேமராவாக இருக்கும் என்கிறார். இந்த கருவியானது, பின்புலத்தை நீக்கி, ஒரே பொருளை மையப்படுத்தி படம் எடுப்பதால் இயற்கை புகைப்பட கலைஞர்களுக்கு சிறந்த ஒன்று. 2×2 இன்ச் அளவில்,2 அவுன்ஸ் எடையில் இருக்கும் இதை மேசை, மரக்கிளை என எங்கும் தொங்கவிடலாம். ஆனால் அணிய முடியாது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஸ்கை டைவிங்

ஸ்கை டைவிங்

3 அடி தூரத்திற்குள், அதன் ப்ரேமுக்குள் இருக்கும் எதையும் துல்லியமாக படம் எடுக்கும் இக்கருவியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் பயன்படுத்தலாம். கிளிப் கருவியானது, பெஸ்ட் பை, வெரிசான் போன்ற கடைகளிலும், கூகுள் ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கிறது. போட்டோ எடுக்கும் போது அலெர்ட் செய்ய வெள்ளை விளக்கு எரியும். மேலும் கூகுள் கிளவுட் உடன் இணைப்பதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டது. ஸ்கை டைவிங் போன்ற சாகசங்கள் செய்பவர்களை கூகுள் கிளிப் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வடிவமைத்த கிம் கூறுகையில், கிளிப் ஒரு சிறந்த சுற்றுபுற புகைப்பட வல்லுநர் என்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Google Clips Camera Now Available to All as Latest Effort to Bring AI to Home Gadgets ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot