Home
Camera

பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மறைக்க 90மில்லியன் டாலர் ! சிக்கலில் கூகுள்..

ரூபின் கூகுளில் இருந்த சமயத்தில், சட்டவிரேதமாக பெண்களை பாலியல் வலையில்வீழ்த்தி, ஆயிரக்கணக்கான டாலர்களை பெண் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ராய்டு தந்தை ஆண்டி ரூபின் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மறைக்கும் விதமாக, 90மில்லியன் டாலரை நிறுவனத்தை விட்டு வெளியேறும் தொகையாக கொடுத்ததாக கடந்த அக்டோபரில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது. கூகுளை விட்டு 2014ல் வெளியேறிய ரூபின் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மறைக்க 90மில்லியன் டாலர் ! கூகுள்.

அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன் இராஜினாமா செய்ய சொன்னதாக கூகுள் கூறிவரும் நிலையில், அந்த சம்பவங்களை மறைத்து இணக்கமாக வெளியேற்றியதை போல செய்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் ரூபினின் புதிய எசென்சியல் போன் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.

ஆல்பாபெட்

ஆல்பாபெட்

தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர், ரூபினுக்கு கூகுள் போர்டு 90 மில்லியன் டாலர் வழங்கியதற்கு எதிராகவும், மற்ற இயக்குநர்களை பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் காப்பாற்றியதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சத்திமில்லாமல் இராஜினாமா

சத்திமில்லாமல் இராஜினாமா

"பாலியல் சர்ச்சை தொடர்பாக நடைபெற்ற உள்விசாரணையில் ரூபின் மீதான குற்றாச்சாட்டில் நம்பகத்தன்மை உள்ளது தெரிந்த பின்னர், லாரி பேஜ் மற்றும் செர்ஜீ பிரின் இருவரும் ரூபின் சத்திமில்லாமல் இராஜினாமா செய்ய அனுமதித்துள்ளனர்" என்பதன் அடிப்படையில் கடந்த வியாழன்று கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கூகுளின் பெருநிறுவன நிர்வாக கொள்கை

கூகுளின் பெருநிறுவன நிர்வாக கொள்கை

கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின், கூகுள் சி.ஈ.ஓ சுந்தர்பிச்சை உள்ளிட்ட ஆல்பாபெட் நிறுவனத்தின் 12 இந்நாள் மற்றும் முன்னாள் இயக்குனர்களின் பெயர்கள்,ரூபினை ஹீரோ போல வழியனுப்பியதற்கான வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் கூகுளின் பெருநிறுவன நிர்வாக கொள்கைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் மேம்படுத்தவேண்டியவை பற்றி கேள்விஎழுப்புகிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூகுள் எதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.ரூபின் கூகுளில் இருந்த சமயத்தில், சட்டவிரேதமாக பெண்களை பாலியல் வலையில்வீழ்த்தி, ஆயிரக்கணக்கான டாலர்களை பெண் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டுகள்

பாலியல் குற்றச்சாட்டுகள்

இந்த சர்ச்சைகள் எழுத்த குறுகிய காலத்திலேயே, உலகம் முழுவதும் உள்ள 20,000 கூகுள் பணியாளர்கள், நிறுவனத்தின் பணி கலாச்சாரம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கையின்மைக்கு எதிராக வாக்அவுட் செய்து போராட்டம் செய்தனர். அதேநேரம் கூகுள்நிறுவனம் தனது பணியிட கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொண்டு, இனிமேல் பாலியல் நடத்தை தொடர்பான பிரச்சனைகளில் பணியாளர்கள் நேரடியாக நீதிமன்றங்களுக்கு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

மெமோ

மெமோ

கடந்த நவம்பர் மாதம் கூகுள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மெமோவில்" கூகுளின் உயர்மட்ட கொள்கைகளில் மாற்றம் செய்யவேண்டும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. இனிவரும் காலங்களில், எப்படி பிரச்சனைகளை எழுப்பவது, எப்படி அதை கையாளுவது என்பதில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவோம். தங்களது பிரச்சனைகளை எழுப்புபவர்களுக்கு சிறந்த கவனிப்பையும் ஆதரவையும் வழங்குவோம்.பிரதிநிதித்துவமான, நியாயமான மற்றும் மரியாதைக்குரிய பணியிடத்தை வழங்குவதில் இருமடங்கு உறுதியாக இருப்போம்.

Best Mobiles in India

English summary
Google board sued for hushing up sexual misconduct case paying Android creator90 M at exit: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X