குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கேமரா!

Posted By: Karthikeyan
குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கேமரா!

உலகப் புகழ் பெற்ற ஜெனரல் இமேஜிங் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய கேமராவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு ஜிஇ எக்ஸ்400 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா மிகவும் பிரபலமான ஜிஇ பவர் பிஆர்ஒ வரிசையில் வருகிறது.

இந்த புதிய இஜி கேமரா உயர்ந்த தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது இந்த கேமரா 2.7 இன்ச் எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. 14 மெகா பிக்சல் இமேஜ் ரிசலூசன், 4.9 - 73 எம்எம் சூம் லென்ஸ் மற்றும் 15 எக்ஸ் ஆப்டிக்கல் சூம் போன்ற சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

மேலும் இன்டக்ரேட்டட் பாப் அப் ப்ளாஷ், 20 சீன் மோட், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேசன், 3200 ஐஎஸ்ஒ, 13 எம்பி இன்டர்னல் மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் எஎ பேட்டிரிகள் போன்ற மற்ற அம்சங்களும் இந்த கேமராவில் உள்ளன.

இந்த கேமராவில் லென்ஸ் சற்று பெரியதாக இருப்பதால் இந்த கேமராவும் சற்று பெரியதாக இருக்கிறது. ஆனால் இதில் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை மிகவும் துல்லியமாக மற்றும் தெளிவாக இருக்கும். அதுபோல் இதில் எச்டிஆர் வசதியும் உள்ளதால் வெளிச்சம் இல்லாத இடங்களிலும் கூட மிகத் தெளிவாக படங்களை எடுக்க முடியும்.

இந்த ஜிஇ கேமராவின் விலையைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது இதன் விலை ரூ.6500 மட்டுமே. அதனால் இந்த கேமரா அதிக அளவில் விற்பனையாகும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot