இந்திய கேமரா சந்தையைக் குறிவைக்கும் பிஜிபில்ம்

Posted By: Karthikeyan
இந்திய கேமரா சந்தையைக் குறிவைக்கும் பிஜிபில்ம்

ஜப்பானைச் சேர்ந்த கேமரா நிறுவனமான பிஜிபில்ம் இந்த கேமரா சந்தையில் 32 சதவீத வளர்ச்சியை அடைய பலவாறான திட்டங்களைத் தீட்டி வருகிறது. மேலும் இந்தியாவில் தனது 2.5 லட்சம் கேமராக்களை விற்கவும் திட்டமிட்டிருக்கிறது.

தற்போது இந்தியாவில் பிஜிபில்ம் 12 வகையான கேமரா மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த வருட ஏப்ரல் முதல் இந்த வருட மார்ச் வரை 2 முதல் 2.5 லட்சம் வரை தமது கேமராக்களை விற்க பிஜிபில்ம் திட்டமிட்டிருந்தது. ஆனால் 1.8 லட்சம் கேமராக்களை விற்றதாக பிஜிபில்மின் இந்திய மேலாளர் கெனிச்சி டனக்கா தெரிவித்திருக்கிறார்.

மேலும் 2012 - 2013 ஆண்டில் ரூ.800 கோடி வருமானத்தை பெற திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த வர்த்தக ஆண்டுல் ரூ.500 கோடி வருமானம் ஈட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மார்ச் 31, 2012 வரை இந்த பிஜிபில்ம் நிறுவனம் உலக அளவில் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் எக்ஸ்எப்1 என்று ஒரு புதிய கேமராவை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது. மேலும் இந்த கேமராவை விற்பனை செய்ய இந்த தீவாளி நேரத்தில் ரூ.15 கோடியை செலவிடவும் பிஜிபில்ம் தீர்மானித்திருக்கிறது. அதோடு அடுத்த ஆண்டு வாட்டர் ப்ரூப் கொண்ட ஒரு புதிய கேமராவையும் இந்தியாவில் பிஜிபில்ம் களமிறக்க இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot