ஃபியூஜிஃபிலிம் களமிறக்கும் நவீன ரக கேமரா!

ஃபியூஜிஃபிலிம் நிறுவனம் வழங்கும் கேமராக்கள் எப்போதுமே உயர்ந்த தரத்தில் இருக்கும். குறிப்பாக புகைப்படத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு அவை ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். இப்போது ஃபியூஜிஃபிலிம் பழைய தலைமுறை கேமராக்களின் டிசைனையும் மற்றும் ஸ்டைலையும் எடுத்துக் கொண்டு அவற்றில் நவீன இமேஜிங் தொழில் நுட்பத்தை புகுத்தி புதியதொரு கேமராவை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய கேமராவின் பெயர் பைன்பிக்ஸ் எக்ஸ்100 ஆகும்.
இந்த கேமரா பார்ப்பதற்கு பழைய கால கேமராக்களைப் போல் தோன்றினாலும் இதில் பல புதிய தொழில் நுட்பங்கள் உள்ளன. அதாவது இதைப் பயன்படுத்துவோர் இதை மிக எளிதாக இயக்க முடியும்.
இந்த பைன்பிக்ஸ் கேமராவை உள்ளங்கையில் மிக அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும். இதன் இயங்கு மற்றும் கட்டுப்பாட்டு பட்டன்கள் இதனைப் பயன்படுத்துவோர் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அருமையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைன்பிக்ஸ் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 12.3 மில்லியன் பிக்சல்களைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் 23.6 x 15.8 எம்எம் சிஎம்ஒஎஸ் சென்சார் மற்றும் எஸ்டி/எஸ்டிஎச்சி மெமரி கார்டு ஸ்லாட் போன்ற வசதிகள் உண்டு. மேலும் இந்த கேமராவில் 1280 x 720 பிக்சல் வீடியோவை ஸ்டீரியோ ஒலி அமைப்புடன் பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய கேமராவில் 20எம்பி இன்டர்னல் மெமரி உள்ளது. மேலும் ஆட்டோமேட்டிக் சீன் அறியும் திறன், ஆட்டோ ப்ளாஷ், புஜினன் சிங்கில் போக்கல் நீள லென்ஸ் மற்றும் உயர்தர வியூவ் பைன்டர் போன்ற அம்சங்களையும் இந்த கேமராவில் பார்க்க முடியும்.
இந்த பைன்பிக்ஸ் கேமரா 2.8 இன்ச் அளவில் டிஎப்டி வண்ண எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த கேமராவில் யுஎஸ்பி 2.0, லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எச்டிஎம்ஐ மினி கனக்டர் போன்ற வசதிகளும் உண்டு.
இந்த கேமராவில் இருக்கும் உயர்தர வியூவ் பைன்டர் ஆப்டிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் வியூவ் பைன்டர்களின் செயல்பாடுகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்த இரண்டு செயல்பாடுகளை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதன் போக்கஸ் 23 மீமீ வரை இருக்கும். இதன் லென்ஸ் எப்2 அபர்சரைக் கொண்டுள்ளது. இவ்வளவு உயர்தரம் வாய்ந்த இந்த கேமராவின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications