Home
Camera

ஒரே நேரத்தில் 16 புதிய டிஜிட்டல் கேமராக்கள்: ப்யூஜிஃபிலிம் சரவெடி

By Karthikeyan
ஒரே நேரத்தில் 16 புதிய டிஜிட்டல் கேமராக்கள்: ப்யூஜிஃபிலிம் சரவெடி

நேற்று பிஜிபில்ம் நிறுவனம் முதன் முதலாக ஒரு புதிய இன்டர் சேஞ்சபுள் கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த புதிய கேமராவிற்கு எக்ஸ்-பிஆர்ஒ1 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதோடு மேலும் பல கேமராக்களை பிஜிபில்ம் அறிமுகம் செய்தது.

அவற்றின் பெயர்கள் முறையே இஎக்ஸ்ஆர் வரிசையில் வரும் எச்எஸ்25இஎக்ஸ்ஆர் மற்றும் எப்660இஎக்ஸ்ஆர், டி வரிசையில் டி350, ஜே வரிசையில் ஜேஎக்ஸ்500 மற்றும் ஜேஸட்100, எ வரிசையில் எஎக்ஸ்550, எஸ் வரிசையில் எஸ்எல்260, எஸ்4200, எஸ்2980, எல் வரிசையில் எல்30 மற்றும் சி வரிசையில் சி25 போன்ற கேமராக்கள் ஆகும்.

இந்த கேமராக்களின் அறிமுகத்தின் போது பிஜிபில்மின் இந்தியாவிற்கான மேலாளர் கூறும் போது " புதிய 16 கேமராக்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் இன்டர் சேஞ்சபுள் லென்ஸ் கொண்ட கேமராவை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறோம்" என்று கூறினார்.

அறிமுகம் செய்யப்பட்ட எல்லா கேமராக்களுமே உயர்தர பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளன. அதுபோல் இவற்றில் டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேசன், மோஷன் பனோரமா மோட், போஸ் டிடக்சன் தொழில் நுட்பம், பிக்சர் சேர்ச், சீன் ரிகக்னிசன் ஆட்டோ, ப்ளிங்க் டிடெக்சன் மற்றும் ஸ்மைல் சூட் மோட் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

எக்ஸ்-ப்ரோ 1 கேமரா 16 மெகா பிக்சல் எபிஎஸ்-சிமோஸ் இமேஜ் சென்சார் மற்றும் பிஜிபில்ம் இஎக்ஸ்ஆர் ப்ராசஸிங் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதன் விலை ரு.99999 ஆகும்.

சிவப்பு, கருப்பு, ஊதா, வெள்ளி மற்றும் பர்ப்பிள் போன்ற பல வண்ணங்களில் வரும் ஜேஸட் கேமரா ரூ.7999க்கு வருகிறது. எஸ் வரிசையில் வரும் எஸ்எல்260 ரூ.17999க்கும், எஸ்4200 கேமரா ரூ.15999க்கும் எஸ்2980 கேமரா ரூ.12999க்கும் விற்கப்படும்.

டி350 கேமரா ரூ.9999க்கும், ஜேஎக்ஸ்500 கேமரா ரூ.7999க்கும், எஎக்ஸ்550 கேமரா ரூ.5799க்கும், சி25 கேமரா ரூ.3499க்கும் இறுதியாக எல்30 கேமரா ரூ.3999க்கும் விற்கப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X