வண்ணப் புகைப்படங்களை வழங்கும் புதிய பியூஜிஃபில்ம் கேமரா!

Posted By: Staff
வண்ணப் புகைப்படங்களை வழங்கும் புதிய பியூஜிஃபில்ம் கேமரா!
பியூஜிஃபில்ம் நிறுவனம் கேமரா உலகிற்கு மீண்டு்ம் ஓர் புதிய கேமராவினை அளிக்கிறது. இதில் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும். ஃபைன்பிக்ஸ் எச்எஸ்-30-இஎக்ஸ்-ஆர் என்ற இந்த புதிய கேமராவின் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசிதியனை பயன்படுத்தலாம்.

இதில் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை கொண்ட 3.0 இஞ்ச் திரை வசதியினையும் பெற முடியும். இந்த கேமராவின் மூலம் உயர்ந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை சிறப்பாக பெறலாம். கேமரா என்பதால் நிச்சயம் இதன் மெகா பிக்ஸல் பற்றிய விவரத்தினை தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

இதில் 16 மெகா பிக்ஸலின் மூலம் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் சிறப்பாக பயன்படுத்தலாம். இன்னும் பல தொழில் நுட்பங்களை இந்த கேமரா வழங்கும். உயர்ந்த நவீன வசதிகளுக்கெல்லாம் ஒத்துழைக்கும் வகையில் இதில் லித்தியம் அயான் பேட்டரியினை பெறலாம்.

இதில் ஒவ்வொருமுறை சார்ஜ் செய்யும் போதும் 600 ஷாட்களை பெறலாம். அந்த அளவு சிறப்பான ஆற்றலை இதன் பேட்டரியில் பெற முடியும். இந்த ஃபைன்பிக்ஸ் எச்எஸ்-30-இஎக்ஸ்-ஆர் கேமராவை ரூ. Rs. 26,999 விலையில் பெறமுடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot