சூப்பர்சூம் வசதியுடன் பியூஜிஃபில்ம் வழங்கும் புதிய கேமரா!

Posted By: Karthikeyan
சூப்பர்சூம் வசதியுடன் பியூஜிஃபில்ம் வழங்கும் புதிய கேமரா!

பிஜிபில்ம் நிறுவனம் ஒரு புதிய 14 எம்பி சூப்பர்சூம் கேமராவை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு பிஜிபில்ம் பைன்பிக்ஸ் எஸ்4500 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வெகு தூரத்தில் இருப்பவற்றையும் மிகத் தெளிவாகப் படம் பிடிக்க வசதியாக இந்த கேமராவில் 30எக்ஸ் பிஜினன் லென்ஸ் உள்ளது.

மேலும் இந்த கேமராவில் சிசிடி ஷிப்ட் அடிப்படையில் இருக்கும் ஸ்டெபிலைசேஷன் சிஸ்டம் இருப்பதால் போட்டோ எடுக்கும் போது இந்த கேமரா அசைந்தாலும் போட்டோ மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் போட்டோவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

இந்த சூப்பர் கேமராவில் ஏராளமான உயர்தர சூட்டிங் வசதிகள் உள்ளன. குறிப்பாக மோஷன் பனோராமா, சூப்பர் மேக்ரோ சூட்டிங், ட்ராக்கிங் ஆட்டோ போக்கஸ், இன்ஸ்டன்ட் சூம், சூம் ப்ராக்கெட்டிங் மோட் ஆகியவை உள்ளன. அதன் மூலம் இந்த கேமரா மிக தெளிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும். மேலும் இதன் வேகமும் மிக அபாரமாக இருக்கும்.

இந்த பைன்பிக்ஸ் கேமராவில் இருக்கும் பவர் சூம் லென்ஸ் மிகத் தரமான போட்டோக்களை எடுக்கும் என்று பிஜிபில்ம் இந்தியாவின் தலைவர் டனக்கா கூறுகிறார். குறிப்பாக காடுகளைப் படம் பிடிக்க, பயணத்தில் படம் பிடிக்க அதுபோல் விளையாட்டில் இருக்கும் வீரர்களில் அதிவேக செயல்பாடுகளை மிகத் தெளிவாகப் படம் பிடிக்க இந்த கேமரா ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

இந்த கேமராவின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த கேமரா மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot