Home
Camera

ரெட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஃபேஸ்புக் அறிமுகம் செய்வது என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் நிறுவனம் தனித்தன்மையுடன் கூடிய விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிராவை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

By Siva Lingam

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் என்ற இடத்தில் டெவலப்பர்கள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டின் முதல் நாளில் ஃபேஸ்புக் நிறுவனம் பல புதிய அறிவிப்புகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஃபேஸ்புக் தனது பயனாளிகளுக்கு வழங்கும் புதிய வசதிகள் மற்றும் செயலிகள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் நேற்று அறிவித்த முக்கிய அறிவிப்புகளில் ஒன்று பயனாளிகளுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு புதிய வசதிதான். மற்ற சமூக வலைத்தளங்களை விட முன்னேற்றம் காண இந்த அறிவிப்புகள் உதவும்.

ரெட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஃபேஸ்புக்.!


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா முறைகேடு குறித்த புகார்களால் ஃபேஸ்புக் நிறுவனம், தனது ஸ்மார்ட் ஸ்பீக்கர் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், அந்த நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் திட்டத்தை அவ்வளவு எளிதாக கைவிட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. நிச்சயம் கூடிய விரைவில் இந்த அறிமுகம் இருக்கும்.

ஒருசில இணையதளங்களில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின்படி ஃபேஸ்புக் நிறுவனம், அதன் தனித்தன்மையுடன் கூடிய விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிராவை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறியபோது இந்த திட்டம் தற்போது டெவலப்பிங் ஸ்டேஜில் இருப்பதாகவும், இதற்காக ரெட் டிஜிட்டல் சினிமா என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிராவில் 3டியில் இமேஜ் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், இதுகுறித்த டெமோ வரும் டெவலப்பர்கள் மாநாட்டில் இருக்காது என்றே கருதப்படுகிறது.

ரெட் டிஜிட்டல் நிறுவனத்துடன் கைகோர்த்து உருவாக்கப்படும் இந்த விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிரா குறைந்த வெளிச்சத்தில் செயல்படும் வகையில் இருப்பது மட்டுமின்றி உயர்ந்த தரத்தில் இமேஜ் தெரியும்படியும் இருக்கும் என்றும், மேலும் இதற்காக விஆர் ஹெட்செட் ஒன்றையும் ஆக்குலஸ் ரிஃப்ட் என்ற நிறுவனத்திடம் பெறவும் ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.


மேலும் இந்த விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிராவில் 360 டிகிரியில் படமெடுக்கும் அம்சங்கள் இருக்கும் என்றும், கடந்த 2016ஆம் ஆண்டு மாநாட்டிலேயே ஃபேஸ்புக் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ரீதியில் இன்னும் பல வசதிகளை பயனாளர்களுக்கு செய்து கொடுக்க, ஃபேஸ்புக் நிறுவனம் இன்னும் பல ஹார்ட்வேர்கள் நிறுவனத்துடன் கைகோர்த்து பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

அதே நேரத்தில் இந்த விர்ட்சுவல் ரியாலிட்டி கேமிராவின் விலை குறித்தோ அல்லது இந்த டிவைஸ் எங்கு கிடைக்கும் என்பது குறித்தோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் இந்த டிவைஸ் அறிமுகம் செய்யும் நாளும் வெகு விரைவில் இல்லை என்பதும் தெரிகிறது. இதனால்தான் ஃபேஸ்புக் இந்த டிவைஸ் குறித்த டெமோவை வெளிய்யிடவில்லை. இதனால் இந்த டிவைஸ்க்காக நாம் சில நாட்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்.

ரெட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஃபேஸ்புக்.!

அதே நேரத்தில் ரெட் நிறுவனம் உற்பத்தி செய்யும் கேமிராக்கள் சந்தையில் அதிக விலைகளில் தான் விற்பனையாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான வெப்பன் 8K கேமிராவின் விலை இந்திய மதியில் சுமார் ரூ.53 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook teams up with RED to create Professional VR camera; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X