கேமிராமேன்களே! டெப்த் ஆஃப் பீல்டு என்றால் என்ன தெரியுமா?

கேமிராவில் உள்ள டெப்த் ஆப் ஃபீல்டு என்று கூறப்படும் சரியான தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

By Siva
|

தற்போதைய ஸ்மார்ட்போன் மாடல்களில் டூயல் கேமிரா என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் ஓனரும் ஒரு கேமிராமேன் தான். ஆனாலும் கேமிராவில் உள்ள டெப்த் ஆப் ஃபீல்டு என்று கூறப்படும் சரியான தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

கேமிராமேன்களே! டெப்த் ஆஃப் பீல்டு என்றால் என்ன தெரியுமா?

இது பழைய மாடல் கேமிராக்களின் டெக்னிக் என்றாலும் தற்போதைய ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதுகுறித்து படித்து தெரிந்து கொள்வது எளிது, ஆனால் நடைமுறையில் செயல்படுத்த ஓரிரண்டு நாட்கள் ஆகலாம்

டெப்த் ஆஃப் பீல்டு என்றால் என்ன?

டெப்த் ஆஃப் பீல்டு என்றால் என்ன?

ஒரு பொருளை புகைப்படம் எடுக்கும்போது கேமராவின் அருகிலோ, தூரத்திலோ பிரேமில் துள்ளியமா தெரிகிற பகுதியைத்தான் டெப்த் ஆப் பீல்டு என்று கூறுவார்கள், இந்த டெப்த் ஆஃப் பீல்டு மாறுபடும் தன்மை உடையது.

நீங்கள் புகைப்படம் எடுக்கும் பொருள், அதன் தூரம், நீங்கள் பயன்படுத்தும் கேமிரா, அதன் லென்ஸ் ஆகியவைகளை பொறுத்து இந்த டெப்த் ஆஃப் பீல்டு மாறுபடும்

அதேபோல் புகைப்படம் எடுக்க வேண்டிய பொருளின் அளவை பொறுத்தும் டெப்த் ஆஃப் பீல்டு மாறுபடலாம். இதனை நீங்கள் எளிதாக கையாள லென்ஸில் செட் அப் செய்து கொள்ளலாம். சிறிய பொருளை புகைப்படம் எடுக்கும் போது F எண்ணை சிறியதாகவும், பெரிய பொருளை புகைப்படம் எடுக்கும் F எண்ணை பெரிதாகவும் மாற்றி கொள்வதன் மூலம் இதனை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

தூரம்: ஒரு பொருளை எவ்வளவு தூரத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்பதை பொருத்துதான் உங்களது டெப்த் ஆஃப் பீல்டு ஆழமாகவோ அல்லது ஆழப்படுத்தவோ இருக்கும் வகையில் செய்யப்படும்

சரியான புள்ளியில் புகைப்படம்: வெவ்வேறு மோட்களை வைத்து டெப்த் ஆஃப் பீல்டை நீங்கள் எளிதாக கண்ட்ரோல் செய்யலாம். உதாரணமாக பொதுமக்கள் கூட்டம் ஒன்றை புகைப்படம் எடுக்க போட்ரியாட் மோட்-ஐயும், இயற்கை எழில் காட்சியை புகைப்படம் எடுக்கும்போது லேண்ட்ஸ்கேப் மோட்-ஐயும் பயன்படுத்தினால் டெப்த் ஆஃப் பீல்டு சரியான அளவில் எடுத்து கொள்ளப்படும்

எப்போது இதை பயன்படுத்த வேண்டும்: இந்த டெப்த் ஆஃப் பீல்டை நீங்கள் எப்போது பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய பொருள் அல்லது நபரின் பின்னணியை பற்றி கவலைப்படாமல் பொருளை மட்டும் போகஸ் செய்யும்போதுதான். குறிப்பாக வனவிலங்குகள் மற்றும் விளையாட்டு போட்டியை புகைப்படம் எடுக்கும்போது இந்த டெப்த் ஆஃப் பீல்டை பயன்படுத்தலாம்

மேலும் விபரம் தெரிய வேண்டுமா?

மேலும் விபரம் தெரிய வேண்டுமா?

இந்த டெப்த் ஆஃப் பீல்டு குறித்து மேலும் துல்லியமான விபரங்களை தெரிந்து கொள்ள உங்கள் கேமிரா மாடல், லென்ஸ் ஆகியவற்றை இண்டர்நெட்டில் குறிப்பிட்டு அதற்கான டெப்த் ஆஃப் பீல்டை நீங்கள் டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தற்போது இந்த டெப்த் ஆஃப் பீல்டை தெரிந்து கொள்ள பல செயலிகளும் வெளிவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் புகைப்படத்தில் உள்ள பெர்சனல் விபரங்களை நீக்குவது எப்படி?உங்கள் புகைப்படத்தில் உள்ள பெர்சனல் விபரங்களை நீக்குவது எப்படி?

மேலும் இவற்றை மனதில் கொள்ளுங்கள்

மேலும் இவற்றை மனதில் கொள்ளுங்கள்

டெப்த் ஆஃப் பீல்டை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்

*துளையை சிறிதாக்கி F எண்ணை அதிகப்படுத்த வேண்டும்

*பொருளில் இருந்து தள்ளி நிற்க வேண்டும்

*ஃபோகல் நீளத்தை குறைவாக வைத்து கொள்ள வேண்டும்

டெப்த் ஆஃப் பீல்டை குறைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்

*துளையை அகலப்படுத்தி f எண்ணை அதிகப்படுத்த வேண்டும்

*பொருளின் அருகில் நிற்க வேண்டும்

போகல் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும்

Best Mobiles in India

Read more about:
English summary
With the rise of dual camera modules in smartphones, there is a rise in Depth of Field feature as well. Check out here to know everything you need to know about Depth of Field.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X