செல்ஃபியால் சோகம் : ஆபத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்!

மாலையில்,தனது மூன்று நண்பர்களுடன் மெரைன் டிரைவ் சென்றுள்ளான் அல்தாப்.பருவமழை காலத்தில் கடல் எப்போதும் மிகவும் ஆக்ரோசமாகவும்,அலைகள் உயரமாகவும் இருக்கும்.

|

மும்பை மெரைன் ட்ரைவ்-ல் செல்ஃபி எடுக்கும் போது இறந்த 13 வயது சிறுவனால் ரம்ஜான் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது. பருவமழை காலத்தின் போது கடல் அலைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதால், பாறைகளின் மீது செல்ஃபி எடுக்க செல்ல வேண்டாம் என அலுவலர்கள் சிறுவனை எச்சரித்துள்ளனர்.

செல்ஃபியால் சோகம் : ஆபத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்!

அச்சிறுவன் ட்ராம்பே-ல் வசிக்கும் அல்தாப் சையது ஷேக் என அடையாம் காணப்பட்டுள்ளது. அவரின் தந்தை சையது ஷேக் கூறுகையில், ஈகைத்திருநாளான ரம்ஜான் அன்று நாங்கள் அனைவரும் கொண்டாட்டங்களில் இருந்தோம். உறுவினர்களும் அதற்காக வருகை தந்திருந்தனர். அவன் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு, குடும்பத்தின் மூத்தவர்களிடம் பரிசுகளை பெற்றுக் கொண்டான். மதியத்தில்,நண்பர்களுடன் ரம்ஜானை கொண்டாட வெளியே செல்வதாக கூறினான்.

மெரைன் டிரைவ்

மெரைன் டிரைவ்

மாலையில்,தனது மூன்று நண்பர்களுடன் மெரைன் டிரைவ் சென்றுள்ளான் அல்தாப்.பருவமழை காலத்தில் கடல் எப்போதும் மிகவும் ஆக்ரோசமாகவும்,அலைகள் உயரமாகவும் இருக்கும். மாலை நேரத்தில், கடல் அலைகள் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால் கடலுக்கு அருகில் செல்வதே ஆபத்தானது.

ரம்ஜான் விடுமுறை

ரம்ஜான் விடுமுறை

மெரைன் டிரைவ் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரம்ஜான் விடுமுறை தினம் என்பதால் மெரைன் டிரைவ் அதிக கூட்டம் இருந்தது. நாங்கள் கூடுதல் ரோந்து காவலர்களை நியமித்த போதிலும், காவலர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன் மக்கள் மீண்டும் பாறைகளின் மீது ஏறுகின்றனர். பெரிய அலைகள் வரும் போது எளிதில் அவர்களை கடலில் விழும் வாய்ப்புள்ளது என்கிறார்.

காவல் அதிகாரி

காவல் அதிகாரி

மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், அல்தாப் அவரின் நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்திய போதும், காவலர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன் மீண்டும் அல்தாப் செல்ஃபி எடுக்க பாறைகள் மீது ஏறினான். பெரிய அலை வந்து அவனை கடலில் தள்ளிவிட்டது. அந்த சூழ்நிலையில், பாதுகாப்பு சாதங்கள் கூட எதுவும் செய்யமுடியாது. ஆனாலும் அவனை காப்பாற்ற ஒருவர் கடலில் குதித்து காயப்படுத்திக்கொண்டார். அதே நேரம், அல்தாப் கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். அவன் நண்பர்கள் உயிர்தப்பினர். அல்தாப்பின் உடலை கண்டுபிடிக்க இயலவில்லை.

சிறுவனின் உடல்

சிறுவனின் உடல்

ஞாயிற்றுக்கிழமை காலையில், அல்தாப்பின் பெற்றோர் டராம்பே காவல்நிலையத்தில் அவனை காணவில்லை என புகார் அளித்தனர். மெரைன் டிரைவ் காவல்நிலையத்தில் இருந்து இந்த சம்பவத்தை ட்ராம்பே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகைப்படமும் பகிரப்பட்டது. அதன் பின்னரே சிறுவனின் உடல் அடையாளம் காணப்பட்டது.

Best Mobiles in India

English summary
Eid celebration turns fatal Mumbai teenager falls into sea while clicking selfie: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X